Thursday, April 18, 2024

நகம் வெட்டினால், குடும்த்திற்கு ஆகாது.

 ”நடுக் கூடத்தில் அமர்ந்து நகம் வெட்டினால், குடும்த்திற்கு ஆகாது.”

”விளக்கு வைத்த நேரத்திற்குப் பின்னர் நகம் வெட்டக் கூடாது.”


என்றெல்லாம் நம் பெரியோர்கள் சொல்ல நாம் கேட்டிருப்போம்.

உண்மையாகவே, அவ்வாறு செய்தால் குடும்பம் விளங்காமல் போய்விடுமா ??
இல்லை, பெரியோர்கள் பொய்க் கூறி விட்டார்களா ?

உண்மை என்னவென்றால்,

நடுக் கூடத்தில் நகம் வெட்டுவதும்/ நகத்தைக் கடித்து துப்புவதும் மிகவும் தப்பாகும். ஏனென்றால், நம் வீட்டுக் கூடங்களில் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடும்.
அப்போது, அவர்களின் கால், கைகளில் நகத் துண்டுகள் கீறி/ காயப்படுத்திவிடும்.
மேலும்,
பொதுவாகவே இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து இருக்கும், அந்த தருணத்தில் நகம் வெட்டினால், தவறுதலாக இருளின் காரணத்தால், நம் விரலை வெட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

எனவே தான், நம் முன்னோர்கள் அவ்வாறெல்லாம் கூறிச் சென்றனர்.




No comments:

Post a Comment