Sunday, April 21, 2024

ஓமம் - தினம் ஒரு மூலிகை

 


*ஓமம்*.   விதைகளுக்காக பயிர் செய்யும் ஒரு சிறு செடி இனம் இதன் விதைகள் நாட்டு மருந்து கடைகள் பல சரக்கு கடைகளில் கிடைக்கும் மருத்துவ குணம் பசி தூண்டுதல் வயிற்று வாய்வு அகற்றுதல் அகற்றுதல் இசிவு அகற்றல் உடல் வெப்பம் மிகுத்தல் உமிழ்நீர் பெருக்குதல் உடலுறமாக்கல் ஆகிய குணம் உடையது ஓமத்தை வறுத்து சம அளவு கறி உப்பு சேர்த்து பொடித்து ஒரு கிராம் அளவுக்கு நீருடன் உட்கொள்ள பசியை தூண்டும் வயிற்று வாய்வு தீரும் ஓமம் திப்பிலி ஆடாதோட இலை கசகசா தோல் வகைக்கு 25 கிராம் அரை லிட்டர் நீரில் இட்டு இருநூறு மில்லியாக காய்ச்சி வடித்து 15 மில்லியாக காலை மாலை அருந்தி வர இரைப்பிருமல் நுரையீரலில் உள்ள தேங்கிய கபம் கரையும் ஓமம் சுக்கு மிளகு திப்பிலி ஏலம் ஆகியவற்றை சம அளவு எடுத்து இளம் வருப்பாய் வறுத்து இடித்து பொடித்து அதனுடன் சமன் சர்க்கரை கலந்து அரை தேக்கரண்டி காலை மாலை கொடுத்து வர செரியாமை வயிற்றுப்போக்கு குணமாகும் இது ஒரு வாசனைப் பொருள் நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் சேர்ப்பது உண்டு நன்றி

No comments:

Post a Comment