Friday, April 19, 2024

ஏழிலைப்பாலை. - தினம் ஒரு மூலிகை

 *ஏழிலைப்பாலை.*

 இது ஒரு பெரு மர வகை சார்ந்தது ஒவ்வொரு கொத்திலும் ஏழு இலைகள் அமைந்து இருக்கும் இதன் பட்டை மேல் புறம் தோல் நிறமாகவும் பஞ்சு போல் கனத்தும் உட்புறம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும் இதன் இலை பட்டை பால் வேர் மருத்துவ குணம் முன்பு கொல்லுதல் உடலுரமாக்கல் முறைக்காய்ச்சல் அகற்றுதல் ஆகிய குணம் உடையது 15 மில்லியுடன் சம அளவு இஞ்சி சாறு கலந்து மகப்பேற்றுக்குப் பின் கொடுக்க கருப்பை தொடர்பான அழுக்குகள் வெளியேறும் பட்டையை உலர்த்தி புடித்து 300 கிராம் அளவாக பாலில் கொடுத்து வர தொடக்க நிலையில் உள்ள தொழுநோய் குணமாகும் வேர் பட்டையை இடித்து 50 கிராம் அளவுக்கு ஒரு கலயத்தில் இட்டு 300 மில்லி கொதி நீரை ஊற்றி வைத்து ஒரு மணி நேரம் ஊறிய பின் வடிகட்டி வைத்துக்கொண்டு 30 மில்லி அளவாக ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுத்து வர உடல் பலத்தை மிகுக்கும் நாள் பட்ட கழிச்சல் சீத கழிச்சல் ஆகியவை குணமாகும் பாலை நல்லெண்ணெயுடன் கலந்து காதில் விட்டு வர காது வலி தீரும் வேரை உலர்த்தி புடித்து 250 மில்லி கிராம் அளவாக கொடுத்து வர சூலை கும்பம் அண்டவாதம் தொழுநோய் புண் தாகம் ஆகியவை தீரும் நன்றி.

No comments:

Post a Comment