Saturday, April 20, 2024

ஏலக்காய் -தினம் ஒரு மூலிகை

 


 *ஏலக்காய்.*

குளிர்ச்சியான சூழ்நிலை உள்ள இடங்களில் வளரக்கூடியது ஏலக்காய் இதன் காயில் உள்ள கருப்பு விதை மனம் உள்ளதாக மனமூட்டியாக வாசனைப் பொருள் இந்த விதையை ஏலரசி என்றும் அழைப்பதுண்டு இதன் மருத்துவ பயன் பார்ப்போம் ஏலக்காய் அதிமதுரம் நெல்லி சந்தனம் வால்மிளகு பொடித்து வகைக்கு முப்பது கிராம் சர்க்கரை 100 கிராம் சேர்த்து இரண்டு முதல் நான்கு கிராம் வரை பாலில் கலந்து பருக இருமல் நாவறட்சி வயிற்று வலி ஆகியவை நீங்கும் ஏலரசி இலவங்கப்பட்டை முந்திரி திப்பிலி வகைக்கு 200 கிராம் சர்க்கரை பேரிச்சம் பழம் வகைக்கு 100 கிராம் ஒன்றாக சேர்த்து இடித்து ஐந்து கிராம் அளவு உருண்டை செய்து ஒன்று அல்லது இரண்டு உருண்டைகள் மென்று சாப்பிட தாகம் வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கி உடல் குளிர்ச்சி அடையும் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் ஐந்து ஏலரசியை நசுக்கி 200 மில்லி பாலில் போட்டு அத்துடன் 200 மில்லி நீர் சேர்த்து நீர் சுண்ட காய்ச்சி சர்க்கரை கலந்து வடிகட்டி காலை மாலை சாப்பிட பித்த மயக்கம் தீரும் நன்றி.

No comments:

Post a Comment