Friday, April 19, 2024

வெற்றி பெற்ற (MP)எம்.பி-க்கு எவ்வளவு சம்பளம்

வரிசையில் நின்று வாக்களிக்கும் வாக்காளரின் நிலைமை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்னவாக இருக்கும் என்பது தெரியாது. ஆனால், நாம் செலுத்தும் வாக்கு  மூலம் வெற்றி பெற்ற எம்.பி-க்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப் போறோமுன்னு தெரிந்து கொள்வோம்....


அடிப்படை சம்பளம் - ரூ.1,65,000 / -


பஞ்சப்படி - ரூ.1,93,050 / -


நாடாளுமன்ற படி - ரூ.45,000/-


எம்.பி சிறப்பு படி - ரூ. 45,000 / -


பாராளுமன்றம் கூடும் போது(10 நாள்) - ரூ.24000 / - (ஒரு நாளைக்கு 2400/- )


இதர படிகள்- ரூ. 35,000/-


மொத்தம் - ரூ.5,07,050 / -


பிடித்தங்கள்:


கேண்டீன் செலவு - ரூ.4,750 / - (ஒரு சைவஉணவு ரூ120/-


+ ஜி.எஸ்.டி, தேநீர் ரூ10 / -)


வருமான வரி - ரூ. 98,800 / -


பி.எம் நிதிக்கு - ரூ.32,600 / - (ஓய்வுபெற்ற பிரதமர்


மருத்துவ செலவுகள்


மற்றும் பாதுகாப்புக்கு)


PM SPS - ........ ரூ.20,500 / -


மொத்த பிடித்தம் - ரூ1,56,650 / -


நிகர சம்பளம் வரவு - ரூ. 3,50,400 / 


இது மாதிரி ஒவ்வொரு எம்.பிக்கும் எம்.பி.,-க்களுக்கு சம்பளம், படிகள் உள்ளிட்டவைகள் ஓர் ஆண்டிலேயே உயர்த்தப்பட்டன. அதன்படி, அவர்ளது மாத சம்பளம் ரூ.1 லட்சம், தொகுதிப் படி ரூ.90,000, எம்.பி.,-களின் உதவியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.60,000, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு தினப்படி ரூ.2,000, தவிர பயணப்படி வழங்கப்படும். இது எம்.பி.,-க்களுக்கிடையே வேறுபடும்.


அதுதவிர, ஆண்டுக்கு 34 முறை இலவச விமானப் பயணம், ஆண்டுதோறும் முதல் வகுப்பில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக பயணிக்கலாம். எம்.பி-க்களின் மனைவி அல்லது கணவருக்கும் இது பொருந்தும். தொலைப்பேசி, வசிப்பிடம், மின்சாரம், குடிநீர், சலவை செலவுகள் என அனைத்தும் இலவசம். நாடாளுமன்ற கேண்டீனில், மட்டன் பிரியாணியே ரூ.30 தான்.தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள், உப்பு முதல் உலோகம் வரையான வாரியங்கள் இவற்றுக்கெல்லாம் ஆலோசனை கமிட்டிகள் உண்டு. அதிலும் எம்.பி.,-க்கள்தான் அமர்த்தப்படுவார்கள். அதற்கு தனியே அலவன்ஸ்கள் உண்டு. இது வெறும் எம்.பி.,-யாக தேர்ந்தேடுக்கப்பட்டாலே கிடைக்கக் கூடிய வருமானம். அதுவே அவர் அமைச்சராகி விட்டால் அந்த அமைச்சரகம் அவரை ஒரு மகாராஜா போல நடத்துவது தனிக்கதை.


எம்.பி.-யாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் எந்தத் தவறனாக்காரியமும் செய்யாமல் கேண்டீனில் சாப்பிட்டுவிட்டு, பார்லிமெண்ட்டில் தூங்கி, கார்பரேட் பார்ட்டிகளில் உயர்தர விஸ்கி சாப்பிட்டு ஐந்து ஆண்டுகள் ஓட்டிவிட்டு வந்தால் அவர் கணக்கில் கண்டிப்பாக இரண்டு கோடியாவது இருக்கும். இது தவிர சாகும்வரை மாதம் ரூ.20,000 பென்ஷன், இலவச ரயில் பயணம், விமான பயணத்தில் சலுகை,செத்தால் குடும்பத்துக்கு பென்ஷன் என்று பெரிய பட்டியலே போடலாம்.


ஆதலால், தங்களது வாக்கின் மதிப்பை உணர்ந்து கொண்டு வாக்களிக்கவும்.....

கொஞசம்  யோசித்து வாக்களிக்க வேண்டியது நமது கடமை .........

No comments:

Post a Comment