Wednesday, April 24, 2024

செய்தித் துளிகள் - 24.04.2024(புதன்கிழமை)

🌅🌅2024- 2025 ஆண்டு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு மே மாதம் ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 6-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானவுடன் பி.இ. மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படும்.

🌅🌅துணைவேந்தர் விவகாரம் - உயர்நீதிமன்றம் வேதனை

கடந்த ஓராண்டாக சென்னை பல்கலைக்கழகம் துணைவேந்தர் இல்லாமல் செயல்படுவது மோசமான நிலை

துணைவேந்தர் நியமன விவகாரத்தில் அதிகார அமைப்புகளுக்கு இடையிலான பிரச்சினை காரணமாக கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு நியமனத்தை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை

பல்கலைக்கழகங்களை நிர்வாகிக்கும் அதிகார அமைப்புகள் கவனமுடன் செயல்பட வேண்டும் - உயர்நீதிமன்றம் கருத்து

🌅🌅11 மாவட்ட கல்வி அதிகாரி காலி பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது.

தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு வரும் ஏப்.30ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌅🌅25% இடஒதுக்கீடு இடங்கள் தனியார் பள்ளிகளில் சேர ஆன்லைன் பதிவு தொடங்கியது: மே 20-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

🌅🌅தொடக்கக் கல்வி: ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் 2023-24  ஆம் கல்வி ஆண்டு மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்களை EMIS வலைதளத்தில் பதிவு செய்தல் -சார்ந்து-வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு.

🌅🌅தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை; விபத்து, பணிப்பளு காரணமாக 4 ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறித்து தேர்தல் கமிஷனுக்கு ஆசிரியர் சங்கங்கள் புகார் அனுப்பியுள்ளன.

🌅🌅வரும் கல்வி ஆண்டில் இருந்து, 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அனிமேஷன் வீடியோ பாடங்களை நடத்துமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

🌅🌅விடைத்தாள் மதிப்பீடு நிறைவு: பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் தீவிரம்

🌅🌅பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஆதரவற்றவர்கள், முதல் தலைமுறையினர், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் இலவச கல்வி திட்டத்தில் இளங்கலை படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

🌅🌅அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்குமாறும் , மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவழைக்க அழுத்தம் தரக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

🌅🌅TNPSC - பள்ளிக்கல்வி உட்பட 3 துறைகளின் தேர்வு முடிவுகள் வெளியீடு.

🌅🌅பள்ளிக் கல்வித் துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களை 31.05.2024 அன்று பணிவிடுவிப்பு செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

🌅🌅விலக்கு பெற்றவர்களுக்கும் வருமான வரி சம்பள 'போர்டலில்' தொடருது குளறுபடி - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் புலம்பல்

🌅🌅தமிழ்நாடு உள்பட 6 மாநிலஙகளில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னை வானிலை மையம்.

🌅🌅நரேந்திரமோடி போன்று எந்த பிரதமரும் விஷமத்தனமாக பேசியது இல்லை - ப.சிதம்பரம். 

🌅🌅துபாயில் பெருமழையால் ஒருவாரம் வீட்டில் முடங்கிய மக்கள் மீண்டும் தங்களது அன்றாட நிலைமைக்கு திரும்பினர்.

🌅🌅மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் சீன ஆதரவு பெற்ற அதிபர் முகமது முய்சு கட்சி வெற்றி

🌅🌅கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டத்தை தமிழகத்தைச் சேர்ந்த, 17வயது வீரரான குகேஷ் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார்.

🌅🌅சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.145 குறைந்து ஒரு கிராம் ரூ.6,700-க்கும், சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,600-க்கும் விற்பனை.

🌅🌅ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு 529 கோடி ரூபாய்

வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பிரமாண பத்திரத்தில் தகவல்

🌅🌅டி20 உலக கோப்பைகான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நிச்சயம் சேர்க்கப்பட வேண்டும். ரோஹித்துக்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டனாக அவரை வளர்த்தெடுக்க வேண்டும். 

-ஹர்பஜன் சிங், இந்திய முன்னாள் வீரர்

🌅🌅பஞ்சாபில் கடந்த மாதம் தனது பிறந்தநாளுக்கு வெட்டிய கேக்கை சாப்பிட்ட 10 வயதான சிறுமி, உயிரிழந்த விவகாரத்தில், 'சாக்கரைன்' என்ற செயற்கை சுவையூட்டியை அதிகளவில் கேக்கில் கலந்ததே காரணம் என பரிசோதனையில் தகவல்.

🌅🌅அதிகரிக்கும் வெப்பம் - ஆட்சியர்கள் அறிவுறுத்தல்:

நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை தேவையின்றி பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்; போதிய அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.

-கடும் வெயில் நிலவுவதால் சேலம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.

🌅🌅விரைவு ரயில் டிக்கெட் இருந்தால் மின்சார ரயிலில் தனியாக டிக்கெட் எடுக்கத் தேவையில்லை.

தெற்கு ரயில்வே அறிவிப்பு

🌅🌅ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், அடுத்த 3 ஆண்டுகளில், இந்தியாவில் மட்டும் 5 லட்சம் பேருக்குப் பணி வாய்ப்பை வழங்க உள்ளதாகத் தகவல்.

தற்போது 1.5 லட்சம் பேரை பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.                                                           🌅🌅வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீதான புகார் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் 🌅🌅இஸ்லாமியர் குறித்த பேச்சு, மோடிக்கு மக்கள்தான் பதிலளிக்க வேண்டும்.

நான் எந்த கட்சியையும் சாராதவன். மக்கள் பக்கமே நிற்பேன்

நடிகர் பிரகாஷ்ராஜ்.                                 🌅🌅தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கினார் சிவகார்த்திகேயன்

🌅🌅'எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போல, அதிமுக நிர்வாகிகள் தலைமைக்கு விசுவாசமாக இல்லை'

'நிர்வாகிகள் பலரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை;

கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லை; 

கடமைக்கு வேலை செய்கிறீர்கள்'

சென்னை மண்டல அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

🌅🌅ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட `கில்லி' பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.10 கோடியை தாண்டியது

ரீ-ரிலீஸில் இந்த வசூலை தாண்டிய முதல் தமிழ் படமாகவும்  2வது இந்திய படமாகவும் கில்லி மாறியுள்ளது.

இதற்கு முன் 2013ல் அமிதாப் பச்சனின் `ஷோலே' ரீ-ரிலீஸானபோது ரூ.10 கோடி குவித்தது

🌅🌅கடவுள் ராமரை விட தன்னை பெரியதாக நினைக்கிறது காங்கிரஸ். 

அனுமன் மந்திரத்தை உச்சரிப்பது கூட காங்கிரஸ் ஆட்சியில் குற்றமாகிவிட்டது

ராமர் கோயில் திறப்பை புறக்கணித்து, துறவிகளை அவமானப்படுத்தியுள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள்

பிரதமர் மோடி பேச்சு

🌅🌅மதுரை கோட்டத்தில் வருவாய் அடிப்படையில் இரண்டாமிடம் பிடித்துள்ள நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தின் வருவாய் ரூ.130 கோடியாக உயர்ந்துள்ளது.

🌅🌅புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதிய உலகத்திற்கான திறவுகோல் – அறிவின் ஊற்று – கல்விக்கான அடித்தளம் – சிந்தனைக்கான தூண்டுகோல் – மாற்றத்திற்கான கருவி – மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை. புத்தகங்களை வாசியுங்கள் – நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

🌅🌅"100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்

"என்னுடைய குடும்பத்திலேயே பலருக்கு ஓட்டு இல்லை"

"பிரதமரின் மத துவேச பேச்சுகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்

சசிகலா எழுதியதாக சொல்லப்படும் கடிதம், வெற்று காகிதம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

🌅🌅ஒரே நாடு ஒரே தேர்தல் போல் ஒரே சிம் ஒரே பிளான்

வாடிக்கையாளர்கள் வசதிக்காக புதிய ரோமிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது AIRTEL நிறுவனம்

வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் அந்தந்த நாட்டில் புதிய சிம் கார்டுகளை வாங்குவதை தவிர்க்கும் வகையில் ‘அனைத்து நாடுகளுக்கும் ஒரே பிளான்' என்ற பெயரில் புதிய சர்வதேச ரோமிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஏர்டெல்.

10 நாட்களுக்கு 1GB இணைய சேவையுடன் 100 நிமிடங்கள் டாக் டைம் பெற ₹899 கட்டணமாகவும்,

30 நாட்களுக்கான கட்டணம் ₹2998 ஆகவும் நிர்ணயம்.

🌅🌅தமிழ்நாட்டிலே ஈரோடு டாப், இந்திய அளவில் 3வது இடம்

அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை பிடித்தது ஈரோடு.

👉நேற்று ஈரோட்டில் 109.40 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

👉நேற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பாவில் 110.84 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு

🌅🌅சுமார் ஒரு மாதத்திற்கு பின் நேற்று தலைமைச் செயலகம் வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் முதலமைச்சர் தலைமைச் செயலகம் வருகை

கடந்த மாதம் 15ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் தலைமைச் செயலகம் வந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின்.

No comments:

Post a Comment