Showing posts with label உணவில் நன்மைகள். Show all posts
Showing posts with label உணவில் நன்மைகள். Show all posts

Sunday, June 22, 2025

உடல் சூட்டை தணிக்கும் உணவு வகைகள்*

 *

*உடற்சூட்டை தணிப்பவை*

எலுமிச்சை பழம், வெண்பூசணி, 

பச்சைப்பயிறு, மோர், உளுந்தவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய்,

நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம் நாவற்பழம், கோவைக்காய்,

இளநீர் இவற்றை உண்டால் உடல் சூடு தண்ணியும். 


*பசியின்மை,* 

*ருசியின்மையைப்

Sunday, June 15, 2025

இரத்த அழுத்தத்தைச் சீராக்க மோர் மற்றும் எலுமிச்சை சாறு

 *:  தினம் ஒரு நாட்டு வைத்தியம்* 

உயர் இரத்த அழுத்தம் என்பது உலகம் முழுவதும் பலரை பாதிக்கும் ஒரு பொதுவான சுகாதாரப் பிரச்சனையாகும். இதனைச் சீராக்க பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும், நம் முன்னோர்கள் பயன்படுத்திய சில எளிய நாட்டு வைத்தியங்களும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இரத்த அழுத்தத்தைச் சீராக்க மோர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை அருந்துவது.

 *மோர் மற்றும் எலுமிச்சை

Friday, May 30, 2025

நார் சத்துள்ள காய்கறிகள்

 * மற்றும் பழங்கள் – உடலுக்கு தரும் நன்மைகள்* 

நாம் தினசரி உணவில் சேர்க்க வேண்டிய முக்கியமான உணவுப்பொருள் "நார்" (Fiber) ஆகும். நார் செரிமானத்தையும், உடலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த ஒரு பகுதியாகும். நார் குறைவாக இருந்தால் மலச்சிக்கல், இரத்த சர்க்கரை உயர்வு, கொழுப்பு சேர்க்கை போன்ற பல சிக்கல்கள்

Saturday, April 19, 2025

காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்*

 🟢🟢🟢🟢🟢🟢🟢

🟢 *கத்தரிக்காய்*

இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும். 

இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப்

நோய் தீர்க்கும் பழங்கள்

 *நோய் தீர்க்கும் பழங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்* ....

பழங்கள் உணவாகவும், மருந்தாகவும் அமைந்து, உடல் ஆரோக்கியத்தை பேணிக்காத்து வருபவையாகும். அதனை உட்கொண்டு நலமுடன்

Monday, February 24, 2025

செவ்வாழையின் சிறப்பு

செவ்வாழையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா?

குதிகால் வலிக்கு இந்த செவ்வாழை எப்படி உபயோகமாகிறது தெரியுமா? செவ்வாழையை பொறுத்தவரை, வைட்டமின் C, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளன.. 1 சிவப்பு வாழைப்பழத்தில் 90 கலோரிகள் இருக்கிறதாம்..சிவப்பு வாழைப்பழம்: சிவப்பு வாழைப்பழத்தில் அதிக அளவில் கலோரிகள் இல்லை என்பதால்தான், நார்ச்சத்து நிறைந்த உணவு பொருளாக விளங்குகிறது.. காலையில் டிபன் சாப்பிட முடியாதவர்கள்கூட, ஒரு செவ்வாழையை சாப்பிட்டால், அன்

கிராம்பு நீர்.

கிராம்புவில் உள்ள சத்துக்கள் என்னென்ன? கிராம்பு பயன்படுத்துவதன் நன்மைகள் என்னென்ன? கிராம்பு நீரில் தேன் கலந்து குடிக்கலாமா?

வெறும் கிராம்பு தண்ணீர் குடித்தால் ஏற்படும் ஆரோக்கியம் என்னென்ன? சுருக்கமாக பார்ப்போம். 

கிராம்புவில், கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு, நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், தாமிரம், துத்தநாகம், செலினியம், மாங்கனீசு, தயாமின், வைட்டமின் B, A, E, K, கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

புற்றுநோய்: முழுக்க முழுக்க ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த பண்புகளை கொண்டது கிராம்புகள்.. புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படக்கூடியது.. நுரையீரலை காக்கக்கூடியது என்பதால், ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கிராம்பு முக்கிய மருந்தாகிறது. சர்க்கரை நோயாளிகள் இந்த கிராம்புவை தவிர்க்க கூடாது. ஏனென்றால், ரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்கி, சமநிலைக்கு கொண்டுவருகிறது. சர்க்கரை கட்டுப்பாட்டில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகளும் பரிந்துரை செய்கின்றன.


கல்லீரல்; உடல் கழிவுகளை வளர்ச்சிதை மாற்றம் செய்து அவற்றை வெளியேற்றுவதில் கல்லீரலுக்கு அதிக பங்கு உள்ளது. எனவே, இந்த கிராம்பில் உள்ள யூஜெனால், கல்லீரல் ஆரோக்கியத்தை தழைக்க செய்கிறது. அந்தவகையில், வெறும் வயிற்றில் 2 கிராம்பு சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பாதுகாக்கப்படும். கிராம்பு தண்ணீர் உடலுக்கு மட்டுமல்ல, சருமத்துக்கும் ஆரோக்கியத்தை தரக்கூடியவை.. கிராம்பு நீரை கொதிக்கவிட்டு தேன் கலந்து குடித்தால் அத்தனையும் மருந்தாகும்.. இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்புடன் வெந்நீர் குடித்தால், நிம்மதியான தூக்கம் வரும்..

நரம்பு மண்டலம்: கிராம்பு சிறிது எடுத்து, தண்ணீல்ல் 20 நிமிடம் கொதிக்கவைத்து வடிகட்டி சூடு ஆறவைத்து குடித்தாலே ஏகப்பட்ட மாற்றங்கள் நடக்கும். கிராம்பு தண்ணீர் குடிப்பதால் மன அழுத்தம் குறைவதுடன், நரம்பு மண்டலத்தை அமைதியாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. அஜீரண கோளாறு நீங்கி, மலச்சிக்கல் பிரச்சனை சீராகிறது.

காது வலி உள்ளிட்டவை இருந்தாலும் தீர்ந்துவிடும். கை கால் நரம்புகள் இழுப்பது போன்ற தொந்தரவு இருந்தால், இரவில் வெந்நீருடன் கிராம்பு சாப்பிடலாம். இதனால், வளர்சிதை மாற்ற விகிதமும் அதிகரிக்க செய்து, உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும். கிராம்பில் நுண்ணுயிரிகள் எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக உள்ளன. இது வாயிலுள்ள பாக்டீரியாக்களை நெருங்க விடுவதில்லை.. பல்சொத்தை, ஈறு தொடர்பான நோய்களையும் விரட்டியடிக்கிறது. எனவேதான், டூத்பேஸ்ட்கள் தயாரிப்பதில் கிராம்பு முக்கிய மூலப்பொருளாகிறது. கிராம்பு எண்ணெய்யும் பயன்படுத்தப்படுகிறது.

தலைமுடி வளர்ச்சி: கிராம்பு தண்ணீரை முகத்துக்கு பயன்படுத்துவதால், அரிப்பு, எரிச்சல், அலர்ஜி நீங்கி சருமத்தின் நிறமும் அதிகமாகும்.. கிராம்பு தண்ணீரை தலைமுடிக்கும் பயன்படுத்தலாம்.. இதனால் தலைமுடி உதிர்வு குறையும்.. காரணம், கிராம்பு பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகை எதிர்த்து போராடுவதுடன், அதிலுள்ள அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் எண்ணெய் உற்பத்தியை குறைக்க செய்யும்.. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிப்பு மற்றும் உச்சந்தலையில் எரிச்சலைத் தடுப்பதற்கு உதவுகிறது.

Sunday, February 23, 2025

7 நாட்கள் - 7 ஜூஸ்கள்

 ✨: இன்சுலின் எதிர்ப்பை இயற்கையாக கையாளுங்கள் 🍏🍇🍊🍋🍌🍒🍆🌿

ஆயுர்வேதத்தில், உணவே மருந்தாகும். சரியான உணவுகள் இன்சுலின் நிலையை சமநிலைப்படுத்தவும், மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும், நீரிழிவு மேலாண்மையை ஆதரிக்கவும் உதவும். இன்சுலின் எதிர்ப்பு என்பது டைப் 2 நீரிழிவிற்கும் பல மெட்டபாலிக் கோளாறுகளுக்கும் முக்கிய காரணமாகும். ஆனால், இதை நம்முடைய பாரம்பரிய இயற்கை சாறுகளால் எளிதாக சமாளிக்க

குழந்தையின்மை போக்கும்... வாழைப்பூ

கர்ப்பப்பை காக்கும்... ஆயுள் கூட்டும்... !

பூக்கள், இயற்கையின் படைப்பில் முக்கியமானவை. அவை காதலுக்குச் சாட்சியாகவும், நறுமணம் தரும் பொருளாகவும், பெண்கள் சூடிக் கொள்வதால் அவர்களது அழகை மெருகேற்றும் ஒரு பொருளாகவும், தமிழர்களின் விழாக்களில் முக்கிய இடம் பிடிக்கும் பொருளாகவும் பயன்படுகிறது. இவை எல்லாவற்றையும்விட, பூக்கள் நம் நோய் தீர்க்கும் மருந்தாகும். உயிர் காக்கும் கவசமாகவும் பயன்படுகின்றன. அந்த வகையில் நம்

Monday, January 27, 2025

வரகு அரிசியின் மருத்துவ நன்மைகள்

 ** 

1. *நீரிழிவு நோய்** 

வரகு அரிசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி அதை சரியான அளவுடன் பராமரிக்கிறது. வரகு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினமும் அல்லது இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது சாப்பிடும் நபர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வருகிறது.

 

2. *உடல் எடை* 

உடல் எடை அதிகம் இருப்பவர்கள் வரகு அரிசி எடுத்துக் கொள்ளும் போது அவர்களுடைய உடல் பருமனை குறைக்கிறது. மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. கண்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.


3. *உடல் ஆரோக்கியம்* 

வரகு அரிசி கோதுமையை விட சிறந்தது. இதில் உள்ள நார்ச்சத்து அரிசி மற்றும் கோதுமையில் இருப்பதை விட அதிக அளவில் உள்ளது. வரகு அரிசியில் மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால் இது உடல் ஆரோக்கியம் பெற

Sunday, January 26, 2025

தேங்காய் தண்ணீர் மருத்துவம்

 *

ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!


இளநீரின் நன்மைகளைப் 

பற்றி அனைவருக்கும் தெரியும்.


அதேபோல் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும் 

பலரும் அறிந்திருப்பீர்கள்.


இப்போது நாம் பார்க்கப்

Sunday, December 15, 2024

உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை.

 *உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை...*

சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அந்த ஒவ்வொன்றின் பின்னணியிலும்  ஒரு அறிவியல் காரணம் உண்டு

Monday, December 9, 2024

நிலக்கடலை

 *டாக்டர்களின் எதிரி*

சக்கரையை கொல்லும்*

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை

Monday, November 11, 2024

தினம் ஒரு கலவை சாதம்

 *:* 

தினம் தினம் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் என்ன சாதம் வைத்துக் கொடுப்பது என்பதுதான் பல அம்மாக்களின் கவலை.

பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது வெரைட்டி காட்டி சந்தோஷப்படும் அம்மாக்களால், காலை நேர பரபரப்பில் அப்படி ஜமாய்க்க முடியாது. அதிலும் வேலைக்குப் போகும் அம்மாக்கள் என்றால் சமையலுக்காக மெனக்கெடுவதை

Monday, October 28, 2024

புடலங்காய்- ஒரு மூலிகை

 🌺 

இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் இடைவெளி விட்டு ஒரு மண்டலம் சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும்.


👉எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும்.

Sunday, August 11, 2024

முருங்கை இலை டீ

 முருங்கை இலை டீ குடித்தால் கிடைக்கும் பயன்கள்


தயாரிக்கும் முறை:


1 கப் முருங்கை இலை

மிளகு 10

சீரகம் 2 ஸ்பூன்

பூண்டு 5

கருவேப்பிலை தேவையான அளவு

தண்ணீர் 500ml

உப்பு தேவையான அளவு


500 ml தண்ணீர் நன்கு கொதிக்கவிட்டு மு

Wednesday, June 5, 2024

உடல் சூட்டை தணிக்கும் புடலங்காய்.

 *_*

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் புடலங்காயில் பலவித மருத்துவக் குணங்களும் நிறைந்துள்ளது. மேலும், இதன் காய், வேர், இலை ஆகியவற்றிலும் மருத்துவக் குணங்கள் உள்ளது.


*புடலங்காயின் மருத்துவக் குணங்கள்.:*


👉 பொதுவாக, புடலங்காயில் நீர் சத்து அதிகமாக உள்ளதால், இதை சிறிதளவு சாப்பிட்டவுடன் வயிறு நிறையும். உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள், புடலங்

Thursday, May 30, 2024

💚 பழஞ்சோறு...!

ஆற்று நீர் வாதம் போக்கும்! 

அருவி நீர் பித்தம் போக்கும்!! 

சோத்து நீர் இரண்டையும் போக்கும்!!! 

-தேரையர்

எம் முன்னோர்களும், தற்பொழுது கிராமங்களில் வாழ்வோரும் தங்கள் காலை உணவாக சாப்பிடும் உணவுதான் பழஞ்சோறு. பழஞ்சோற்றுடன் எஞ்சியிருந்த கறிகளையும்

உப்பு

அட  இம்புண்டு நாளா இது தெரியாம போச்சே..........        கல் உப்பை வறுத்து வைத்துக் கொண்டு, அதன்பின்னர் தான் சமையலில், உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டுமா...


*கல் உப்பை வறுப்பதா...?*

*ஏன்...?*


*அவசியம் படி

Tuesday, May 28, 2024

தேங்காய் பால்

 *சகலவிதமான* *நோய்களையும்*

*குணமாகக்கும்…*


*தேங்காய்_பால்;*


தேங்காய்க்கும் நமக்கும்

உள்ள ஒற்றுமை நாம்,அன்னை வயிற்றிலிருந்து பூமிக்குவர 10 மாதம் அதுபோல தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்...


பொதுவாக தேங்காயில்

அதிகமாக கொழுப்பு உள்ளது

என்பது உண்மைதான்

ஆனால்,எப்பொழுது கொழுப்பு

உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான்..., தேங்காய் கொழுப்பாய் மாறும்


 தேங்காயை குருமா வைத்து சமைத்து உண்டால் கெட்ட கொழுப்பாக (கொலஸ்ட்ரால்) மாறிவிடும். சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு (கொலஸ்ட்ரால்)


 முடிந்த அளவு தேங்காயை பச்சையாக சாப்பிடுங்கள்…


 உண்மை இதோ, பச்சை தேங்காயின் பயன்கள்


 தேங்காயை பச்சையாக

ஒரு வேலை உணவாக

எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்


தேங்காயை உடைத்த

அரைமணி நேரத்திற்க்குள்

பச்சையாக சாப்பிட்டுவிட்டால்,

அதுதான் அமிர்தம்


தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே அடிக்கடி தேங்காய் பாலை அருந்தி வந்தால் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். 


தேங்காய் பாலில் நார்ச்சத்து , வைட்டமின் C, E, B1, B3, B5, மற்றும் B6, மினரல், இரும்புச் சத்து, செலினியம், சோடியம், கால்சியம் ,மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறந்துள்ளன. 


தேங்காய் பால் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.


உடலில் உள்ள திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.


செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்கிறது.


கல்லீரல் வீக்கம், கல்லீரல் கொழுப்பு போன்ற கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் வலிமை கொண்டது.


தேங்காய் பாலில் லாரிக் ஆசிட் இருப்பதால் கொழுப்பின் அளவைக் குறைத்து இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும்.


 தாய்ப்பாலில் இருக்கும்

மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேறெதிலும் இல்லை


சகலவிதமான நோய்களையும்

குணமாகக்கும்


உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்

இரத்தத்தை சுத்தமாக்கும்


உடலை உரமாக்கும்


உச்சிமுதல் பாதம்வரை

உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்


தேங்காயை துருவி சிறிது

நாட்டு சர்க்கரை சேர்த்து

குழந்தைகளுக்கு மாலை

சிற்றுண்டியாக அளியுங்கள்

அவ்வளவு ஆரோகியம்


பழங்காலத்தில், இறக்கும்

தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள் ஆனால் இப்போது,மாட்டு பால் ஊற்றி

துக்கத்தில் ஆழ்கிறார்கள்


தாய்ப்பாலுக்கு மாற்றாக,

தேங்காய் பாலை

குழந்தைகளுக்கு கொடுத்து

காப்பாற்றி இருக்கிறார்கள்


ஆனல் இப்போது,இரசாயண கலவையுடன் பாக்கெட் பால்


காலையில் தேங்காயை

 துருவி, அதனை அரைத்து

பாலெடுத்து அதனுடன்

நாட்டுச் சர்க்கரை அல்லது

கருப்பட்டி அல்லது தேன்

சேர்த்து, (பாக்கட் பாலை

தவிர்த்து விட்டு), அதற்கு

பதிலாக தந்து பாருங்கள்

ஆரோகியத்தை


*தசை நரம்புகள் இறுக்கம்*


வயதின் காரணமாகவும், தசை நரம்புகளுக்கு போதிய சாது கிடைக்க பெறாததனாலும் சிலருக்கு உடலின் பல பகுதிகளில் இருக்கும் தசைகள் நரம்புகள் போன்றவற்றில் இறுக்கம் ஏற்பட்டு மிகுந்த சிரமத்தை தருகிறது. வாரத்திற்கு குறைந்த பட்சம் மூன்று முறையவடது தேங்காய் பால் அருந்தி வருபவர்களுக்கு தசை, நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தன்மை தளர்ந்து உடலுக்கு பலத்தை தருகிறது.


*உடல் எடை*


பெரும்பாலானோர் தேங்காய் பால் அதிகம் அருந்தினால் உடல் எடை கூடிவிடும் என்று கருதுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் விலங்குகளில் இருந்து பெறப்படும் பாலில் இருக்கும் உடல் எடையை கூடும் தன்மையுள்ள கொழுப்புகளை விட, ஆரோக்கியமான சத்துகள் அதிகம் கொண்ட தேங்காய் பால் அவ்வப்போது அருந்துபவர்களுக்கு உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.


*இரும்பு சத்து*


அனைவருக்குமே உடலில் இரும்பு சத்து சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியமாகும். இரும்பு சத்து குறைபாடுகளால் உடலில் வலிமை குறைதல், ரத்த சோகை போன்றவை ஏற்படுகிறது. வளரும் இளமைப் பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் பாலை அருந்துவதால் கால் சதவீதத்திற்கும் அதிகமான இரும்பு சத்து ஒரு நாளைக்கு கிடைக்கிறது.


*எலும்புகள்*


எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது. இந்த பாஸ்பரஸ் உடலில் இருக்கும்

அனைத்து எலும்புகளின் தேய்மானத்தை தடுக்கிறது. தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.


*இளமை தோற்றம்*


தேங்காய் பால் அதிகம் அருந்துபவர்களுக்கு வயதாவதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி, தோலில் பளபளப்பு தன்மையை அதிகம் கூட்டுகிறது. தோலின் நிறத்தையும் கூட்டி, இளமை தோற்றத்தை தருகிறது கேரள மாநில மக்கள் பலரும் சரும பொலிவுடன் இருப்பதற்கு காரணம் அவர்கள் தினமும் தேங்காய் பால் அல்லது தேங்காயுடன் தொடர்புடைய உணவுகளை சாப்பிடுவதால் தான்.


*நன்றி* 

*நட்பும் நிகழ்வும் குழு* 


https://chat.whatsapp.com/IxeZHgZZ06i67N9xOf3dvT.





*கீல்வாதம்*


கீல்வாதம் என்பது உடலின் ரத்தத்தில் யூரிக் அமிலங்களின் அதீத சேர்மானத்தால் உடலில் இருக்கும் மூட்டு பகுதிகளில் கடுமையான வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். செலினியம் எனப்படும் வேதிப்பொருள் இந்த கீல்வாத பிரச்னையை போக்கும் சக்தி பெற்றது. செலினியம் தேங்காய் பாலில் அதிகமுள்ளது தினமும் தேங்காய் பாலை அருந்துபவர்களுக்கு கீல்வாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.


*உடல் சுத்தி*


நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகள், அருந்தும் நீர், சுவாசிக்கும் காற்று என அனைத்துமே நச்சுக்கள் நிறைந்ததாக இருக்கிறது. மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நாள் முழுவதும் திட உணவுகள் ஏதும் உண்ணாமல் தேங்காய் பால் மட்டும் அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் நீக்கி, உடல் உறுப்புகள் சுத்தமாகும்.


*புராஸ்டேட் சுரப்பி*


ஆண்கள் அனைவருக்குமே தங்களின் இனப்பெருக்க உறுப்புகளுக்கு அடியில், மலக்குடலுக்கு மேற்புறமாக அமைந்திருக்கும் சுரப்பி தான் புராஸ்டேட் சுரப்பி. இன்று பல ஆண்களுக்கும் நடுத்தர வயதை நெருங்கும் காலத்தில் புராஸ்டேட் சுரப்பியில் புற்று நோய் ஏற்படும் நிலை இருக்கிறது. தேங்காய் பால் அவ்வப்போது சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்று ஏற்படுவததற்கான வாய்ப்புகள் குறைகிறது.


*நோய் எதிர்ப்பு திறன்:*


ஒரு சிலருக்கு அவ்வப்போது ஜுரம், சளி போன்ற நோய்கள் அடிக்கடி ஏற்படுவதற்கு காரணம் அவர்களின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு திறன் வலிமையின்றி இருப்பது தான். தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே அடிக்கடி தேங்காய் பாலை அருந்தி வந்தால் உடலை சுலபத்தில் தொற்றி தாக்கக்கூடிய நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.


*நீரிழிவு:*


உலகளவில் மக்களை அதிகம் பாதிக்கக்கூடிய நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் இருக்கிறது. நீரிழிவு நோய் வந்த பின்பு அவதிப்படுவதை விட அந்நோய் ஏற்படாமல் தடுப்பதே சிறந்தது. மாங்கனீஸ் சத்து உடலுக்கு அவசியமான சத்துக்களில் ஒன்று. இந்த சத்து நீரிழிவு ஏற்படாமல் உடலை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காய் பால் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.


*தேங்காய்பால் வைத்தியம்:*


தாய்ப்பாலுக்கு நிகரான………

தேங்காய் பால்


 *செய்முறை:*


*தேவையான பொருட்கள்:*


தேங்காய் துருவல் – ஒரு கப், 


பொடித்த பனை வெல்லம் – ஒரு கப், 


ஏலக்காய் – 2, 


ஜாதிக்காய் – ஒன்று.


*செய்முறை:*


சுடச்சுட ஆரோக்கியம் மிகுந்த இந்த தேங்காய் பால் செய்வதற்கு முதலில் தேங்காயை நன்கு துருவிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கும் போது தேங்காய் உடைய தோலும் சேர்ந்து தான் நமக்கு கிடைக்கும் ஆனால் துருவி கொள்ளும் பொழுது தேங்காய் தோல் இல்லாமல் நமக்கு தேங்காய்ப் பூ மட்டும் அழகாக கிடைக்கும். எனவே துருவி கொள்வது மிகவும் நல்லது.


துருவிய தேங்காய் பூக்களை மிக்ஸியில் போட்டு அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை ஒரு சுத்தமான காட்டன் வெள்ளைத் துணியில் ஊற்றி பாத்திரத்தில் பிழிந்து கொள்ள வேண்டும். இது முதல் பால் எனவே இதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.


இரண்டாவதாக மீண்டும் அதே தேங்காயை மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மீண்டும் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதுடன் 2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து எந்த அளவிற்கு பிழிய முடியுமோ, அந்த அளவிற்கு நன்கு பிழிந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டாவதாக எடுத்த இந்த தேங்காய் பாலுடன் தேவையான அளவிற்கு பொடித்து வைத்துள்ள பனை வெல்லத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.


இப்போது அடுப்பை பற்ற வைத்து தேங்காய் பாலை சுட வையுங்கள். தேங்காய்ப் பால் ஓரங்களில் நுரைத்து வரும் பொழுது நீங்கள் முதலில் எடுத்து வைத்துள்ள திக்கான தேங்காய்ப் பாலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேங்காய்ப் பாலை எப்பொழுதும் பொங்க விடக்கூடாது. தேங்காய் பால் நுரைத்து பொங்கினால் கெட்டுப் போய்விடும். மீண்டும் இதே போல ஓரங்களில் நுரை தட்ட ஆரம்பித்ததும் மிக்ஸி ஜாரில் பொடியாக்கி வைத்துள்ள ஜாதிக்காய் மற்றும் ஏலக்காய் இரண்டும் கலந்த தூள் இதனுடன் சேர்த்து கலந்து கொண்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.


இப்போது சுடச்சுட டம்ளரில் சுவையான தேங்காய்ப்பால் பரிமாற வேண்டியது தான். இதில் இருக்கும் எண்ணற்ற சத்துக்கள் நம் உடலை வலிமையாக வைத்துக் கொள்ளும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து நோய் தாக்குதல்களை குறைக்கும். இதில் இருக்கும் அற்புத சத்துக்கள் தாய்ப்பாலுக்கு நிகரானது என்று கூறினாலும் தகும். எனவே உங்களால் முடிந்த பொழுது அடிக்கடி இதை செய்து சாப்பிட்டு ஆரோக்கியம் பெறலாமே!


.இருமலபோக்க……


*தேவையான பொருட்கள்:*


அதிமதுரம் - 5 துண்டுகள்


தேங்காய்ப் பால் - 1 டம்ளர்


சுக்கு பொடி - 1 டீஸ்பூன்


தூளாக்கிய வெல்லம் - தேவைக்கு


ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்


*செய்முறை:*


அதிமதுர துண்டுகளை தூளாக்கி நீரில் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.பின்னர் அதை அரைத்து பிழிந்து ஒரு டம்ளர் அளவுக்கு சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.


வாணலியில் அந்த சாறை ஊற்றி கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்து வந்ததும் தேங்காய் பாலை சேர்க்க வேண்டும். மீண்டும் கொதிக்கும் போது சுக்கு பொடி, வெல்லம் ஏலக்காய் தூள் ஆகியவற்றை கொட்டி சில நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

இதனை ஆறவைத்து பருகலாம்.


.*சுக்கும் மஞ்சளும்;*


தேங்காய்ப் பாலை இரவில் சாப்பிடும்போது நெஞ்செரிச்சல் ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமென்றால், தேங்காய்ப் பாலில் சிறிது சுக்குப் பொடியும் மஞ்சளும் சேர்த்து சாப்பிடுங்கள்.


மஞ்சள் மற்றும் சுக்கின் மருத்துவ குணங்கள் தேங்காய்ப் பாலில் உள்ள கொழுப்பினால் வயிற்றுக் கோளாறுகள், நெஞ்செரிச்சல் ஆகியவை ஏற்படாமல் தடுக்கும்.


இரத்தசோகை மற்றும்இரத்தம் சுத்தமாக…


*தேவையான மூலப்பொருட்கள்:*


தேங்காய்ப்பால் – 100 மி.லி


ஆப்பிள் – 100 கிராம்


பன்னீர்ரோஜா இதழ்கள் – ஒரு கைப்பிடி


குங்குமப்பூ – ஒரு கிராம்


நாட்டு தேன் – 3 தேக்கரண்டி


*செய்முறை:*


 இந்த பானம் தினமும் இரவு எடுக்க கூடியது ஆகையால் தினமும் புதிதாக தயார் செய்து கொள்ளுங்கள்


 ஆப்பிள் தோல் நீக்கி கொள்ளுங்கள், ரோஜா பூக்களை நன்றாக கழுவி கொள்ளுங்கள்


 தேங்காய் பாலில் ஆப்பிள் மற்றும் ரோஜா பூக்களை கலந்து மிக்சியில் அரைத்து கொள்ளுங்கள்


 பிறகு, குங்குமப்பூ, தேன் கலந்து கொள்ளுங்கள், குறிப்பாக குங்கும பூ அளவாக குறைவாக தான் எடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்


 மேலும்,குடிக்க சிரமம் இருந்தால் பால் கலந்து கொள்ளலாம்


*சாப்பிடும் முறை:*


 தினமும் இரவு உணவுக்கு பின் தொடர்ந்து 7 நாட்கள் குடிந்தால் போதுமானது


*நன்மைகள்:*


 உடலில் இரத்தம் ஊரும்


 இரத்தம் சுத்தமாகும்


 ரத்த சோகை சரியாகும்


ரத்த திட்டுகள் பெருகும்