செவ்வாழையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா?
குதிகால் வலிக்கு இந்த செவ்வாழை எப்படி உபயோகமாகிறது தெரியுமா? செவ்வாழையை பொறுத்தவரை, வைட்டமின் C, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளன.. 1 சிவப்பு வாழைப்பழத்தில் 90 கலோரிகள் இருக்கிறதாம்..சிவப்பு வாழைப்பழம்: சிவப்பு வாழைப்பழத்தில் அதிக அளவில் கலோரிகள் இல்லை என்பதால்தான், நார்ச்சத்து நிறைந்த உணவு பொருளாக விளங்குகிறது.. காலையில் டிபன் சாப்பிட முடியாதவர்கள்கூட, ஒரு செவ்வாழையை சாப்பிட்டால், அன்

றைய நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்படையும்.
அதேபோல, 1 சிவப்பு வாழைப்பழத்தில் 1.09 கிராம் அளவிற்கு புரோட்டீன் நிறைந்திருக்கிறதாம்.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதுடன், உடல் எடையை கூட்டும் திறன் இந்த செவ்வாழைக்கு உண்டு.. நரம்பு மண்டலத்தை பலப்படுத்துவதுடன், ரத்த ஓட்டத்தை சீராக உடலுக்கு தருகிறது.. ஆண்களுக்கு இரவில் பாலுடன் ஒரு செவ்வாழையை கரைத்து சாப்பிட்டால், நரம்பு தளர்ச்சி நீங்கிவிடும்..
சிறுநீரகம்: சிறுநீரகங்களில் கற்களை சேரவிடாமல் தடுப்பதில் செவ்வாழைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.. அதிக ரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்கள், இதய நோயாளிகள், இந்த செவ்வாழையை சாப்பிடலாம்.. குடலில் நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை 10 மடங்கு உயர்த்தும் சக்தி இந்த செவ்வாழைகளுக்கு உண்டு.. செவ்வாழையில், கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளதால், பற்கள், எலும்புகளுக்கு பலம் தருகிறது.. பலவீனமான பல் உடையவர்கள், பலவீனமான ஈறுகள் உடையவர்கள், செவ்வாழையை சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும். உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுககும் இந்த செவ்வாழை ஒரு வரப்பிரசாதமாகும்.
குதிகால் வலி: இவ்வளவு மகத்துவம் நிறைந்த செவ்வாழை, குதிகால் வலியையும் போக்குகிறதாம்.. அதாவது, நீண்ட நேரம் நின்றுகொண்டு பணியாற்றுபவர்கள், குறிப்பாக செக்யூரிட்டிகள், காவலர்கள், ஆசிரியர்கள் போன்றோர் நின்றுகொண்டே பணியாற்றுவதால், குதிகால் வலியால் அவதிப்படுவார்கள்.. அதேபோல பெண்களும், நீண்ட நேரம் கிச்சனில் நின்று சமைப்பதால், பாதவலி, பாத எரிச்சலால் பாதிக்கப்படுவார்கள். காலையில் தூங்கி எழுந்ததுமே, பாதங்களை தரையில் ஊன்ற முடியாத அளவுக்கு வலி ஏற்படும்.. இதுபோன்ற பிரச்சனை இருந்தால், செவ்வாழையை தாராளமாக பயன்படுத்தலாம்.
பருப்புகள்: அதாவது, இரவு தூங்க செல்வதற்கு முன்பு, முந்திரி, பாதாம் பருப்புகளை தண்ணீரில் ஊறவைத்து கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் இந்த பருப்புகளிலிருந்து தோலை உரித்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸியில் இந்த பருப்புகளை போட்டு, 1 செவ்வாழையை துண்டுகளாக நறுக்கி போட்டு, 4 பேரிச்சம் பழத்தையும் அதனுடன் சேர்த்து, காய்ச்சி ஆற வைக்கப்பட்ட பால் ஊற்றி அரைக்க வேண்டும்.
No comments:
Post a Comment