Saturday, February 22, 2025

ஜாதிக்காய்

 *தினம் ஒரு மூலிகை*

நரம்பு மண்டலத்தோட ஆரோக்கியத்தை ஜாதிக்காய் சிறப்பாக்குகிறது ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூளை பசும்பால கலந்து இரவு படுக்கும் போது சாப்பிடுவது மன அழுத்தத்தை போக்கி நரம்பு வன்மையையும் நல்ல தூக்கத்தோடும் தரும் குழந்தையின்மை ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது

உடலுறவில் நாட்டம் இல்லாமல் போன்ற பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் மிகச்சிறந்த மருந்து அஜீரணம் நீங்க ஜாதிக்காய் சுக்குத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்து இரண்டு பங்கு சீரகத்தை சேர்த்து பொடி செய்து உணவுக்கு முன் மூன்று சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் வாயு தொல்லை நீங்கும் பல் வலிக்கு ஜாதிக்காய் தைலம் நல்ல நிவாரணம் தரும் வாந்தி வயிற்றுப்போக்கில் ஏற்படுகிற தண்ணீர் தாகத்தை தணிப்பதற்கு ஜாதிக்காயை ஊற வைத்த நீர் அருந்த நல்ல பலன் கொடுக்கும் இது ஒரு சமையலில் அசைவ உணவில் மனமூட்டும் பொருளாக பயன்படுகிறது ஊறுகாய் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது கனிக்கும் விதைக்கும் இடையே விதையை சூழ்ந்திருக்கும் மெல்லிய தோல் பகுதி தான் ஜாதி பத்திரி இதழ் விதையையும் ஜாதி பத்திரி இதழும் தான் மனம் மருத்துவ குணமும் கொண்டவை நன்றி

No comments:

Post a Comment