Showing posts with label சிரிப்பு கதைகள். Show all posts
Showing posts with label சிரிப்பு கதைகள். Show all posts

Sunday, January 26, 2025

பிறரின் உதவியை ஒருபோதும் சோதனை செய்து பார்க்காதீர்கள்.


ஆமை ஒன்று  ஆற்றைக் கடப்பதற்காக ஆற்றில் இறங்கியது. அப்போது ஒரு தேள் ஓடி வந்து, "ஆமை அண்ணா.. நான் அவசரமா அக்கரைக்குப் போக வேண்டி இருக்குது. உன் முதுகில்  ஒரு ஓரமா  இடம் கொடுத்தீங்கன்னா நான் பாட்டுக்கு அமைதியா  அக்கரை போய் சேர்ந்துடுவேன் " என்றது.


ஆமைக்குப் பாவமாக இருந்தது.  இருந்தாலும்  ஒரு எச்சரிக்கைக்காக, "உன்னைப் பார்த்தால் 

Monday, March 25, 2024

இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்

ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவர் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது. 

இறங்கி வந்த போலிஸ் , அவரிடம் 'குட் ஈவ்னிங் சார்..

'அவர் 'குட் ஈவ்னிங், ஏதாவது பிச்சனையா?'. 

போலிஸ், 'நாங்கள்,, உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம்...... "நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம்." அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'. 

அவர் ஒரு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார். 

போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே அவரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார். 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்.....


Wednesday, January 3, 2024

நானும் கல்யாணத்துக்கு முன்ன "புலிதாண்டா "


ஒரு புலி கல்யாணம் பண்ணிட்டு ரிஷப்ஷன் வச்சுது.......எல்லா விலங்குகளும் விருந்து சாப்டுட்டு , புலி ஜோடியை நாலு அடி தள்ளி நின்னே வாழ்த்திட்டு போச்சு.
மாப்பிளை புலிக்கோ... கர்வம் தாங்கல.

திடீர்னு ஒரு பூனை மட்டும், சரசரன்னு... புலிக்கிட்ட போய் கை கொடுத்து வாழ்த்து சொல்லிடுச்சு.
புலிக்கு ஆத்திரம் வந்துடுச்சு. பூனையப் பார்த்து கர்ஜனையோட,
"டேய் இத்தனைப் பேரு என்னய தூரமா நின்னு வாழ்த்திட்டு போறானுங்க.....
ஒனக்கு மட்டும் எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட வந்து வாழ்த்து சொல்லுவ !
நான் புலிடா" ன்னு சொன்னுச்சு.

அந்த பூனையோ கெக்க பிக்கன்னு சிரிச்சுட்டே "அடேய் கிறுக்கு பயலே !
நானும் கல்யாணத்துக்கு முன்ன "புலிதாண்டா " ன்னு சொல்லிட்டு ஓடிப் போச்சு ! ???

Tuesday, January 2, 2024

முதல் நாளே பெரிய விஷயம் புரிந்துவிட்டதே!


ஒரு பெரிய பண்டிதர் ஆன்மீக குரு ஒருவரை தேடி வந்தார். “நீங்கள் நூல்களில் இல்லாத பெரிய விஷயங்களைக்கூடக் காட்டிக் கொடுக்கிறீர்களாமே?” குரு புன்னகைத்தார். பண்டிதர் விடவில்லை. “எனக்கு நீங்கள் கட்டாயமாக ஏதேனும் காட்டிக் கொடுக்க வேண்டும்.” “சரி, இப்போது மழைக் காலமில்லையா? இன்று மழை வரும் போல இருக்கிறது. மழை பெய்யும்போது மைதானத்தில் சென்று கைகளை உயர தூக்கிக் கொண்டு நில். ஏதேனும் புரியலாம்.” அடுத்த நாள் பண்டிதர் வெகு கோபமாக வந்தார். “என்ன ஆயிற்று?” “நீங்கள் சொன்னதுபோல மழையில் நேற்று மாலை நின்றேன்.” “ம்?” “முழுக்க நனைந்து போனேன். எல்லாரும் சிரித்தார்கள். நான் என்னை ஒரு பெரிய முட்டாளாக உணர்ந்தேன்!” “பரவாயில்லையே? முதல் நாளே பெரிய விஷயம் புரிந்துவிட்டதே!”

உருவத்தைப் பார்த்து எவரையும் எடைபோடாதே


அப்போது எங்கிருந்தோ அதிவேகமாக வந்த பென்ஸ் கார் ஒன்று கிரீசசிட்டு நின்றது. ஆட்டுக்காரன் ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தான்.
அமெரிக்க பாணியில் கோட்டும் சூட்டுமாக இறங்கிய மிடுக்கான வாலிபன் ஆட்டுக்காரனிடம் வந்து "உன் மந்தையிலிருக்கும் ஆடுகளின் எண்ணிக்கையை

நான் சரிவரக் கூறினால் நீ எனக்கு நான் கேட்கும் ஆட்டைப் பரிசாகத் தருவாயா? " எனக் கேட்டான்.

ஆட்டுக்காரன் செய்வதறியாமல் 'சரி'' எனத் தலை அசைத்து வைத்தான்.

உடனே, அவ்வாலிபன் தன் வாகனத்துக்குத் திரும்பி அதிலிருந்த லாப் டாப்பை எடுத்தான். தன் செல்பேசியையும் வேறு சில கருவிகளையும் அத்துடன் பொருத்தினான். அதிலிருந்த கருவி ஒன்றை எடுத்து திறந்த வெளியைப் படமெடுத்து ஏதேதோ கணித்தான். பிறகு தன்னிடமிருந்த சிறிய அச்சுப் பொறியை எடுத்து அதிலிருந்து நூற்றிருபது பக்க அறிக்கையை அச்செடுத்தான்.

பின்னர் நேரே ஆட்டுக்காரனிடம் வந்து " உன் மந்தையில் 1346 ஆடுகள் உள்ளன. சரியா? '' என்றான்.

ஆட்டுக்காரன் ஆச்சரியமும் புன்னகையும் கலந்த முகத்துடன் " நீ சரியாகக் கூறினாய். ஆகவே, உனக்குப் பிடித்த ஆட்டை நீ எடுத்துக் கொள் " என்றான்.

அவ்வாலிபனும் மந்தைக்குள் தேடி தனக்குப் பிடித்த பிராணியைப் பிடித்து தன் வாகனத்தின் பின்னால் திணித்துக் கொண்டான்.

அந்த நேரத்தில் அவனருகில் வந்த ஆட்டுக்காரன், " சரி, இப்போது நான், நீ செய்யும் தொழில் எது என்பதைச் சரியாகக் கூறினால் நீ என்னிடம் பெற்ற பிராணியை எனக்குத் திருப்பித் தருவாயா? '' எனக் கேட்டான். அவ்வாலிபனும் சம்மதித்தான்.

ஆட்டுக்காரன் கேட்டான், " நீ தகவல் தொழில்நுட்ப ஆலோசகன் தானே? "

அவ்வாலிபன் கேட்டான், " உனக்கு எப்படித் தெரிந்தது.? "

ஆட்டுக்காரன் சொன்னான், அதுவா? மிக எளிது! முதலாவதாக நீ எவருடைய அழைப்புமின்றி இங்கு வந்தாய். அடுத்ததாக நீ எனக்கு நன்றாகத் தெரிந்த ஒன்றுக்காக என்னிடமே கட்டணமாக ஒரு பிராணியைக் கேட்டாய். மூன்றாவதாக, உனக்கு என்னுடைய தொழிலைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆகவே, இப்போது நான் என்னுடைய நாயை திரும்ப எடுத்துக் கொள்ளலாமா? " என்றான்.

'உருவத்தைப் பார்த்து எவரையும் எடைபோடாதே' என்று அப்பா சொன்னது நினைவுக்கு வர, அவ்வாலிபன் தனது காரை முடுக்கினான்.

உங்களுக்கு மிகவும் இளகிய மனது


ஒரு பணக்கார மேனேஜர் ஒருவர் காரில் போய்க்கொண்டிருந்த பொழுது சாலையில் இருவர் புற்களை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்க்கிறார்.இதைப் பார்த்ததும் அவர் வியப்புற்று டிரைவரிடம் காரை நிறுத்தக் கூறுகிறார்.

பின் அந்த இருவரின் அருகில் சென்று," நீங்கள் ஏன் இப்படி புற்களை உண்கிறீர்கள் எனக் கேட்கிறார்.

உடனே அவர்களில் ஒருவன்," எங்களிடம் உணவு சாப்பிடுவதற்கான பணம் இல்லை, எனவே நாங்கள் புற்களை தான் உண்ண வேண்டும் என்கிறார்.

உடனே அந்த மேனேஜர், சரி நீங்கள் என் வீட்டிற்கு வாருங்கள், நான் உங்களுக்கு உண்ண கொடுக்கிறேன் என்கிறார்.

உடனே அந்த ஏழை," ஐயா.. எனக்கு ஒரு மனைவியும் ஐந்து குழந்தைகளும் இருக்கிறார்கள், அதோ அந்த மரத்தடியில் இருக்கிறார்கள் என்கிறார்.

உடனே மேனேஜர்," அவர்களையும் அழைத்து வா எனக் கூறி விட்டு, பக்கத்தில் நின்றிருந்த மற்றொரு ஏழையிடம்.. "நீயும் இவர்களுடன் வரலாம் " என்கிறார்.

உடனே அந்த மற்றொரு ஏழை," ஐயா.. எனக்கு ஒரு மனைவியும் ஏழு குழந்தைகளும் இருக்கிறார்கள் என்கிறார்.

உடனே அந்த மேனேஜர்," சரி அவர்களையும் அழைத்து வா" என்கிறார்.
இவர்கள் அனைவரையும் அந்த பெரிய காரில் அமர்த்தி அந்த மேனேஜர் அவர் வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

அப்பொழுது அந்த ஏழைகளில் ஒருவர், " ஐயா.. உங்களுக்கு மிகவும் இளகிய மனது, எங்கள் எல்லோரையும் உங்களுடன் இப்படி அழைத்துக் கொண்டு செல்கிறீர்களே" என்கிறான்.

மேனேஜர் உடனே," இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கின்றது, உங்களுக்கு என் வீடு அமைந்துள்ள இடம் மிகவும் பிடிக்கும். ஏறத்தாழ அங்கே உள்ள புற்கள் ஒரு மீட்டர் அளவிற்கு வளர்ந்து இருக்கின்றது என்றார்.

மேனேஜர்களை எப்பொழுதும் நம்பாதீர்கள்.....

அரசியல்வாதியா,கொக்கா?

புதிதாக பதவிக்கு வந்த ஒரு அமைச்சருக்கு ஒரு பெரிய தொழில் அதிபர் விருந்து வைத்தார்.
தனது தொழிற்சாலையில் தயாரான உயர்ந்த கார் ஒன்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முன் வந்தார்.

உடனே அமைச்சர்,''இது ஊழலுக்கு வழி வகுக்கும்.

நான் என்னுடைய பதவி காலத்திலேயே எதையுமே இலவசமாக வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.'' என்றார்.

தொழில் அதிபர் உடனே ''சரி, அப்படி நீங்கள் உறுதியாக இருந்தால் இந்தக் காரை இலவசமாகப் பெற்றுக் கொள்ள வேண்டாம்.

இந்தக் காரின் விலை ஒரு ரூபாய்.
ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு இந்தக் காரை வாங்கிக் கொள்ளுங்கள்.'' என்றார்.

உடனே அமைச்சர்,''ரொம்ப சந்தோசம்,''என்று சொல்லிக் கொண்டே பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் கொடுத்து,

''அப்படியானால் எனக்கு பத்து கார் கொடுங்கள்.''என்றாரே பார்க்கலாம்!.

தொழில் அதிபரே அசந்து விட்டார்.


அரசியல்வாதியா,கொக்கா?

Wednesday, December 27, 2023

வாரம் ஒரு நாள் உண்ணா விரதம்


ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம். எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ''சரி அவ்வாறே செய்து விடுவோம். அதற்கு முன்னால் உண்ணா விரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்து விடுங்கள். ஏனெனில் விரதம் முடியும் பொழுது பசியாக இருக்கும். எனவே அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது'' என்று அறிவுரை சொன்னார். அதை அமோதித்த மற்ற குரங்குகளும் அருகில் இருந்த தோட்டத்திலிருந்து நிறைய வாழைப்பழங்களைக் கொண்டு வந்து தலைவர் முன் வைத்தன. உடனே தலைவர் ''சரி உண்ணா விரதத்தை ஆரம்பித்து விடுவோம்'' என்றார். அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூத்த அனுபவமுள்ள குரங்கு ''தலைவரே விரதம் துவங்குவதற்கு முன் அவரவர் பழங்களை பிரித்து கொடுத்து விடுவோம். இல்லையென்றால் விரதம் முடிந்தவுடன் சண்டையிட்டுக் கொள்வார்கள்'' என்று யோசனை சொல்லிற்று. அதை ஆமோதித்த தலைவரும் அவ்வாறே பழங்களை பகிர்ந்தளித்தார். அப்பொழுது ஒரு குரங்கு எழுந்து, பழத்தின் தோலை உரித்து வைத்து விடுவோம். அந்த நேரத்தில் உரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றவுடன். பழத்தின் தோல் உரித்து முன்னே வைக்கப்பட்டது. உடனே ஒரு குட்டிக் குரங்கு எழுந்து தலைவரே ஒரு நாள் விரதம் இருக்கப் போகிறோம். தோல் நீக்கிய இந்தப் பழங்களின் மேல் தூசிகள் படிந்து விடும். எனவே இந்த பழங்களெல்லாம் கனிந்து அழுகிப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. நமக்குதான் உணவை வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்ளும் வசதி இருக்கிறதே ? எனவே பழங்களை அவரவர் வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்வோம் என்றது. அவ்வளவுதான் பழங்கள் அனைத்தும் வாயில் ஒதுக்கி வைக்கப்பட்டன. சற்று நேரம்தான் ஆகியிருந்தது. ஒதுங்கியிருந்த பழங்களெல்லாம் தானாகவே தொண்டைக் குழியை நோக்கி போகத் துவங்கின. இவ்வாறு குரங்குகளின் விரதம் நிறைவுக்கு வந்தது. இவ்வுலகில் பெரும்பாலானவர்களின் தியான மற்றும் விரத முயற்சியும் இவ்வாறுதான் இருக்கிறது.


அப்பவே சொல்ல மறந்து போய்ட்டேன்

நம்மாளு கிணறு ஒன்றை விலைக்கு வாங்கினார்.
மறுநாள் கடைத்தெருவில் நம்மாளு போய்க் கொண்டிருந்த போது விற்றவன் அவரை சந்தித்தார்.

"அப்பவே சொல்ல மறந்து போய்ட்டேன். இப்ப உங்களை பார்த்த உடனே நினைவுக்கு வந்தது. நான் உங்களுக்கு வித்தது கிணத்தை மட்டும்தான். அதில் இருக்கும் தண்ணீரை அல்ல. ஆகையினால் அந்த தண்ணீரை நீங்கள் பயன்படுத்த வேண்டுமானால் மாதா மாதம் அதற்கு எனக்கு கட்டணம் செலுத்த வேண்டி வரும். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.

அப்ப நம்மாளு தயங்காமல் "நேத்து நானேஉங்க கிட்ட சொல்லனும்னு இருந்தேன். நாம்ப இன்னிக்கு நேர்ல பார்த்தது நல்லதா போச்சு. எனக்கு கிணறு மட்டுமே போதும். அதில் இருக்கும் உங்கள் தண்ணீர் எனக்கு வேண்டாம்.
ஒன்று, நீங்கள் அதிலிருக்கும் தண்ணீரை காலிபண்ணி வெத்து கிணறை எனக்கு கொடுங்கள். இல்லையென்றால் எனக்கு சொந்தமான இடத்தில் தண்ணீரை வைத்திருப்பதற்காக நீங்கள் மாத வாடகை செலுத்த வேண்டி இருக்கும்" என்றாரே பார்க்கலாம்.

மவனே யார் கிட்ட??

Thursday, November 23, 2023

அடுத்தவன் வேலையிலே தலையிட க்கூடாது.


வங்கிக்கு புதிதாக வந்த மேனேஜர் வங்கியின் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.
.
*அதில் ஒரு அக்கௌண்ட்டில் மட்டும் தினமும் 1000 ரூபாய் போடப்பட்டே... வந்தது.*
.
*ஒரு நாள்கூட தடையில்லாமல் அந்த கணக்கில் போடப்பட்டு வந்தது.*
.
*இடையில் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்கள் வந்தால் அன்றைக்கும் சேர்த்து அடுத்த வேலைநாட்களில் அந்த கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது கண்டு அதிசயித்தார்.*
.
*கேஷியரை கூப்பிட்டு “யாருய்யா அந்த ஆள்” என்று கேட்டார்.*
.
*தெரியலை சார் ! தினமும் காலையில் 10 மணிக்கு டான்னு வருவார், பணத்தை போடுவார் போய்ட்டே இருப்பார். ஆள் கொஞ்சம் சிடுமூஞ்சி மாதிரி இருக்கிறதால நாங்கலாம் யாரும் பேசுறதில்லை சார் ! என்றார்.*
.
*மேனேஜருக்கு இப்படி ஒரு கேரக்டரை சந்திச்சே ஆக வேண்டுமென்று பெரிய ஆவலாகவிட்டது. அடுத்த நாள் காலையிலேயே வந்து காத்திருந்து அந்த நபர் வந்தவுடன் பக்கத்தில் போய் பேச்சு கொடுக்க முயன்றார். அந்த நபரோ இவரை கண்டுகொள்ளாமல் போய்விட்டார்.*
.
*அவர் புறக்கணித்ததும் வங்கி மேனஜருக்கு அவருடன் பழகி அவர் ஏன் தினமும் ஆயிரம் ரூபாய் வங்கியில் போடுகிறார் என்றும் கண்டுபிடிக்கவேண்டும் என்று பெரிய வெறியே ஆகிவிட்டது.*
.
*தினமும் பணம் செலுத்தும் இடத்தின் அருகே நிற்பது சிரிப்பதுமாய் இருந்து அந்த நபரும் லேசாக புன்னகைக்க துவங்கியிருந்தார்.*
.
*ஒரு நாள் மேனஜர் வரும் வழியில் அந்த ஆயிரம் ரூபாய் பார்ட்டி வண்டி பழுதாகி ரோட்டில் நின்றிருந்தார்.மேனேஜர் லிஃப்ட் கொடுத்து வங்கிக்கு அழைத்து வரவே கொஞ்சம் பேசவும் துவங்கியிருந்தார்.*
.
*ஒரு நாள் அவரிடம் மேனேஜர் ’சார் நாமதான் நண்பர்களாகிட்டோம்ல இப்பவாவது சொல்லுங்க,எதுக்கு தினமும் ஆயிரம் ரூபாய் பேங்ல போடுறீங்க. அப்படி என்ன வருமானம் வரும்படி தொழில் செய்யுறீங்க ‘ என்று கேட்டார்.*
.
*’சார், நான் வேலையெல்லாம் பாக்கலை தொழிலிலும் செய்யலை, நான் தினமும் பந்தயம் கட்டுவேன் அதுல எப்படியும் ஜெயிச்சுருவேன், அந்த காசுதான் சார் அது என்றார்*
.
*மேனேஜருக்கு நம்பமுடியவில்லை , அது எப்படி தினமும் ஒருத்தன் பந்தயத்தில ஜெயிக்க முடியும் , இந்தாளு பொய் சொல்லுறான் என்று எண்ணிக்கொண்டார். அவரின் முகமாற்றத்தை கண்ட அவன் ‘சார் இதுக்குதான் நான் யாரிடமும் இந்த பந்தய மேட்டரை சொல்வதில்லை என்றான்.*
.
*அப்படியும் சந்தேகமாய் பார்த்த மேனேஜரிடம் ” சரி சார், நாம ரெண்டு பேருமே இப்ப ஒரு பந்தயம் போடுவோம், நான் ஜெயிக்கலைன்னா பாருங்க என்றான்,*
.
*டென்சாகிய மேனேஜரும் சரிய்யா பந்தயத்துக்கு ரெடி என்னய்யா பந்தயம்னாரு.*
.
*’சார், சரியா நாளைக்கு காலையில 10.15க்கு உங்க "கால் தொடை பகுதி பச்சைக்கலரா மாறிடும்" ரெண்டாயிரம் ரூபாய் பந்தயம் ‘ என்றான்.*
.
*யோவ் என்னய்யா சொல்ற, எதாவது நடக்குற கதைய சொல்லு என்று மேனேஜர் சொல்ல..*
.
*பந்தயத்துக்கு வர்றீங்களா இல்லையான்னு கட் அண்ட் ரைட்டா சொல்லுங்க சார்னு கேட்டான்.*
.
*சரின்னு ஒத்துகிட்டார்.*
.
*காலையில வருவேன் உங்க " கால் தொடை பகுதி " பச்சை பசேல்ன்னு மாறியிருக்கும் ரெண்டாயிரம் ரூவாயை எடுத்து வையுங்க என்றபடி சென்றுவிட்டான்.*
.
*மேனஜர்க்கு எப்படி இவ்வளவு தைரியமா பந்தயம் கட்டுறான் என்று ஆச்சர்யம். அவன் போனவுடன் முதல் வேலையாக பாத்ரூம் சென்று தனது பேண்ட்டை அவிழ்த்து கண்ணாடியில் முன்னும் பின்னும் தொடை பகுதியை பார்த்தார், அது வழக்கம் போல் கண்ணங்கரேல் என்று என்றுதான் இருந்தது.*
.
*இருந்தாலும் அவருக்கு இருப்பு கொள்ளவில்லை , அரைமணிக்கொரு முறை பேண்ட்டை அவிழ்த்து பார்க்கவும் போடுவதுமாய் இருந்தார்.*
.
*விடிந்தது... முதல் வேலையாக அதை போய் பார்த்தார், இப்பவும் அப்படியே கருப்பாகவே இருந்தது. நம்ம "கால் தொடையாவது" பச்சை கலராகிறதாவது என்று அவரே சமாதானம் சொல்லிக்கொண்டே குளித்து அலுவலகம் கிளம்பினார். எங்கே பஸ்ஸில் உட்கார்தால் எதும் செட்டப் செய்து நிறம் மாற செய்து விடுவார்களோ என்று எண்ணி நடந்தே போனார்.*
.
*பத்து மணி அலுவலகத்துக்கு 9 க்கே வந்துவிட்டாலும் 10 நிமிடத்துக்கு ஒரு முறை போய் போய் பார்த்து உறுதி செய்தபடியே இருந்தார். இன்னைக்கு அவனை ஜெயிச்சு ரெண்டாயிரம் ரூபாயை வாங்கிறனும் என்று ஆவலோடு காந்திருந்தார்.*
.
*சொல்லி வைத்தாற்போல் சரியாக 10.15 அவன் அந்த அறைக்குள் நுழையவே வேகமாய் சீட்டிலிருந்து எழுந்து தனது பேண்ட்டை கழட்டி நின்று “ இந்தா பார்த்துக்கோ“ அப்படியே கருப்பாதான் இருக்கு என்று முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் காட்டினார்.*
.
*அவன் உடனே அருகிலிருந்தவனிடம்*.
*” என்னமோ பேங்க் ஆபிசர், பெரிய மனுசன், அப்படியெல்லாம் செய்யமாட்டருன்னு இந்தாளை நம்பி பந்தயம் கட்டினே,*
*இப்ப என்ன சொல்லுறே, எடு மூவாயிரத்தை “ என்றான் அவன்.*
.
*அப்போதுதான் கவனித்தார் பந்தயக்காரனுடன் வேறு ஒருவனும் வந்திருந்தான். அவனும் மேனேஜரை முறைத்தபடி மூன்று "ஆயிரம் ரூபாய்" தாள்களை எடுத்து நீட்டினான்.*
.
*அதை வாங்கிய பந்தயக்காரன் இரண்டாயிரம் ரூபாய்களை மேனேஜரிடம் நீட்டி*
.

view
உங்கிட்ட கட்டின பந்தயத்தில நான் தோத்துட்டேன், ஆனா இவன் கிட்ட கட்டின பந்தயத்தில ஜெயிச்சுட்டேன், ஆயிரம் ரூபாய் லாபம் என்று வழக்கமாய் பணம் கட்டும் கவுண்ட்டருக்கு போய்விட்டான்.*
.
*அவனுடன் பந்தயம் கட்டி மூவாயிரம் ரூபாய் தோற்றவனிடத்தில் நீ எதற்கு அவனிடம் பந்தயம் கட்டினாய் என்று மேனஜேர் கேட்க*
*வந்தவன் கடுப்பாகி அவரிடம்*
*“போய்யா நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ?*
.
*என்னைய பார்த்தவுடனே பேண்டை கழட்டி காமிப்பாருன்னு உன்னைய சொன்னான், ச்சேசே அப்படியெல்லாம் இருக்காதுன்னு உன்னிய நம்பி பந்தயம் கட்டினா இங்க நீ ரெண்டாயிரம் ரூபாய்க்கு இவ்வளவு கேவலமான வேலை செய்யுற த்தூ என்று துப்பிவிட்டு போனான்.*

.
*இதனால் அறியப்படுவது*
.
அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும், அடுத்தவன் வேலையிலே தலையிட க்கூடாது.

Wednesday, November 22, 2023

மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு...???



நாடாளுமன்றத்தில் பேசும் போது உறுப்பினர் ஒருவர் ஒரு கதை சொன்னாராம். 

“ஒரு மனிதன் இருந்தான். அவன் தன் மூன்று மகன்களிடம் ஒவ்வொருவருக்கும் ரூ.100 கொடுத்து ஒரு அறை முழுதும் நிறைக்குமாறு பொருள் வாங்கச் சொன்னானாம். 

ஒரு மகன் வைக்கோல் வாங்கி அறையில் வைத்தான்.; அறை நிறையவில்லை. 

அடுத்தவன் பஞ்சு வாங்கி வைத்தான் அறை நிறையவில்லை.

மூன்றாமவன் ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கி அறையில் ஏற்றி வைத்தான். அறை முழுவதும் ஒளி நிறைந்தது”.

அந்த உறுப்பினர் பின் சொன்னாராம் ”அந்த மூன்றாமவன் போலத்தான் நம் பிரதமர். அவர் பொறுப்பேற்றதும் நாட்டில் இருந்த இருள் நீங்கி ஒளி பரவி விட்டது”

பின் வரிசையிலிருந்து ஒரு குரல் எழுந்தது . . "மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு...???

யாருக்கு எது தேவையோ அதில் தான் பார்வை செல்லும்.



என் சிறு வயது மகனை அருகில் இருந்த சலூனுக்கு அழைத்துப் போயிருந்தேன். 

காலியாக இருந்த நாற்காலியில் பையனை உட்கார்த்தி, சலூன்காரர் கட்டிங் செய்யத் தொடங்கிய பிறகுதான் கவனித்தேன்… எதிரே சுவரில் படு கிளாமராக ஒரு போஸ்டர்!

நீலப் பூக்கள் இறைத்திருந்த சிக்கன் பிராவும் ஜட்டியும் அணிந்திருந்த அழகி ஒருத்தி, கடற்கரை மணல் துகள்கள் உடம்பில் ஆங்காங்கே ஒட்டியிருக்க, உல்லாசமாக மல்லாந்து படுத்திருந்தாள். சலூன்காரர் புதுசாகக் கொண்டு வந்து ஒட்டியிருக்கிறார்.

முன்பே தெரிந்திருந்தால், மகனை வேறு சலூனுக்கு அழைத்துப் போயிருப்பேன்.

கட்டிங் முடிந்து வீடு திரும்புகிற வழியில் மகன் கேட்டான்…

“அப்பா! பீச்ல ஒரு லேடி படுத்திருக்கிற மாதிரி ஒரு படம் ஒட்டியிருந்துதே, பார்த்தியா?”

அவனது கேள்வியில் நான் விக்கித்து நிற்க, அவனே தொடர்ந்தான்.

“அந்த லேடி பக்கத்துல ஒரு சாக்லெட் டப்பா இருந்துதே… அந்த சாக்லெட் பக்கத்துக் கடையில இருக்குப்பா! வாங்கித்தர்றீங்களா??”

நான் உணர்ந்து கொண்டேன் யாருக்கு எது தேவையோ அதில் தான் பார்வை செல்லும்.

மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு



ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர்.

மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு,

“உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்” என்கிறது.

மூவருக்கும் ஆச்சரியம்!

உடனே கேஷியர் முந்திக்கொண்டு,

“நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்” என்கிறார்.

பூதமும் “அவ்வாறே நடக்கட்டும்” என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார்.

அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்…

“அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்” என்றார்.

அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது.

கடைசியாக மேனேஜர்,

“நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?” என்றது பூதம்.

அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர்,

“ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!”

Tuesday, November 21, 2023

நான் உங்கள் முன்னாள் மாணவன்



ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். 

அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர்
"தன்னைத் தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார்.

இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார். இளைஞர்,

"நான் ஆசிரியராக உள்ளேன் ". என்றார். "அவ்வாறு ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர் . "உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார். மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார். " எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர்.

" நான் உங்களுக்கு ஒரு கதை கூறட்டுமா? " என்று கூறி சொல்ல ஆரம்பித்தார் அந்த இளைஞர்.

" ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழர் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது. எனவே அதனைத் திருட நினைத்து அவர் கடிகாரத்தை பாக்கெட்டில் வைத்திருந்த போது எடுத்து விட்டேன். அவர் வகுப்பறைக்குள் வந்தவுடன் தன்னுடைய கடிகாரம் காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் செய்தார். 

ஆசிரியர் அவர்களும் இவருடைய கடிகாரத்தை எவர் எடுத்து இருந்தாலும் அதனை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவித்தார். நான் எப்படி கடிகாரத்தை திருப்பித் தருவேன் என நினைத்து எனக்கு மிகவும் சங்கடமாகப் போய் விட்டது.

ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார். எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார். எனக்கு மிகவும் அவமானமாகப் போய் விட்டது. அவர் கூறினார்,

மாணவர்களே வரிசையாக நில்லுங்கள் , ஆனால் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்றார். அவர் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டுப் பார்த்துக் கொண்டே சென்றார். என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். 

ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை.

பின்னர் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை. வேறு எவரிடமும் இது பற்றிக் கூறவோ, சம்பவத்தை விவரிக்கவோ இல்லை. அந்நாளிலே நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றினீர்கள் என்னைத் திருடன், மோசடிக்காரன், என்றெல்லாம் திட்டாமல் ஒன்றுமே பேசாமல் இருந்தீர்கள் என்னுடைய கவுரத்தையும், மானத்தையும் காபாற்றினீர்கள். என்னிடமும் எதுவும் கூறவில்லை. அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை.

 இது எனக்கு ஒரு செய்தியைக் கற்றுத் தந்தது. அது ஆசிரியர் என்பவர் இப்படித் தான். கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம். இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் , கற்பித்தலை செய்ய வேண்டும் என விரும்பினேன்"

இதனைக் கேட்ட அந்த ஆசிரியர் "அற்புதம்" என்றார்.

மீண்டும் அந்த இளைஞர் கேட்டார் , "இப்பொழுதாவது என்னைத் தெரிகின்றதா" எனக் கேட்டார். அதற்கு மீண்டும் "எனக்கு எதுவும் நினைவில் இல்லை, யார் என்பதும் தெரியவில்லை" ? என்றார்.

"ஏன் தெரியவில்லை " என்று கேட்டார் அந்த இளைஞர். ஆசிரியர் கூறினார், "நானும் அந்த சமயத்தில் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன்" என்றார்.

பணியில் இருக்கிற விமானி எப்படி மது அருந்த முடியும்...?



ஒரு குரு வெளிநாட்டுப் பயணம்செய்வதற்காக,
-மிகப் பிரபலமான விமானம் ஒன்றில்
பயணம் செய்தார்.

-விமானம் நடுவானில்
பயணித்தபோது பணிப் பெண்,
-எல்லாருக்கும் வரவேற்பு பானமாக
-விலை உயர்ந்த மதுபானத்தைக்
கொடுத்து<- உபசரித்தபடி வந்து
கொண்டிருந்தார்.

-இப்போது குருவின் முறை
வந்தது.
அவரிடமும் பணிப் பெண் ஒரு
மதுக்கோப்பையை நீட்டினார்.

-அவர் வாங்க மறுத்துவிட்டார்.

பணிப் பெண்,
" ஐயா , எங்கள் விமானத்தில்
பயணிக்கிற ஒவ்வொருவருக்கும்
நாங்கள் கொடுக்கும் உயர்தர
மரியாதை இது.
ஏற்றுக் கொள்ளுங்கள் " என்றார்.

மதகுரு,
"அம்மா, உங்கள் அன்புக்கு நன்றி.
இது எனக்கு வேண்டாம் " என்றார்.

பணிப்பெண் விடவில்லை.
" உலகிலேயே விலை உயர்ந்த
மதுவகை இது. கொஞ்சம்
குடித்தால் அப்புறம் விடவே
மாட்டீர்கள் " என்றார்.

*அப்போதும் மதகுரு ஏற்றுக்
கொள்ளவில்லை.
பணிப் பெண் கடைசியாகச்
சொன்னார்,

''"இவ்வளவு தூரம் நான்
சொன்னதற்காக ஒரு
துளியேனும் பருகுங்களேன் .

குரு சொன்னார் ,
" அம்மா , நான் ஒரு --- சிந்தனையாளன்
மதுவெல்லாம் பருக மாட்டேன்.

நீங்கள் ஒன்று செய்யுங்கள்.
இதை விமான ஓட்டியிடம்
கொடுத்து விடுங்கள் ".
அவர் அப்படிச் சொன்னதும் பணிப்
பெண் ஆடிப்போனார்.

"ஐயோ,
பணியில் இருக்கிற விமானி எப்படி
மது அருந்த முடியும்...?

இதை,
அவர் குடித்தால் அவர் புத்தி
தடுமாறி விமானம் விபத்துக்கு
உள்ளாகுமே.

இத்தனை உயிர்கள் பறிபோகுமே "
என்று பதறினார்.

குரு சொன்னார்,

"''சகோதரி,
வாழ்க்கையும் இப்படிப்
பட்டதுதான்.

தகாத காரியங்களை செய்தால்
புத்தி தடுமாறி விபத்து
நேரிடும்.

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!



ஒருத்தர்க்கு அவர் மனைவி வளர்க்கிற நாயைக் கண்டாலே எரிச்சலா இருந்தது.ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தார்.ஆச்சர்யம்..! அவருக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்..!!

கடுப்பானவர் அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினார்
மறுபடியும் ஆச்சர்யம்… வீட்டில் நாய்..!!

மூன்றாம் நாள்…
காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவர், காரை எங்கெங்கோ செலுத்தினார்.வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தார்.ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினார்.
இடப் பக்கம் திரும்பினார். வலப் பக்கம் வளைந்தார்.
இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு,வேகமாக காரைக் கிளப்பிக் கொண்டு புறப்பட்டார்.

வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து, உன் நாய் வீட்டில் இருக்கிறதா..? என்று கேட்டார்.
இருக்கிறதே..! ஏன் கேட்கிறீர்கள்..? என்றார் மனைவி

அந்த நாய் கிட்டே போனைக் கொடு..!!
வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு.

Thursday, November 16, 2023

இது புத்திசாலியான மீன்



சந்தைக்கடையில் இரண்டு பையன்கள் மீன் விற்றுக் கொண்டிருந்தனர். வியாபாரம் மிகவும் மந்தமாகத்தான் இருந்தது.
சற்று நேரம் கழித்து ஒரு வாடிக்கையாளர் வந்தார். முதல் பையனிடம் சென்று மீன் விலை விசாரித்தார்.

“ஒரு கிலோ 100 ருபாய் ஆகும், சார்,” என்று அவன் கூறினான்.

சற்று தூரத்தில் இரண்டாவது பையனும் அதே வகை மீனை வைத்துக்கொண்டிருந்ததால், அவனிடம் சென்று இந்த விலைக்குக் குறைவாகக் கொடுக்கச்சொல்லி, பேரம் பேசி வாங்கலாம் என்று நினைத்து அவனை அணுகினார்.

விலை என்னவென்று விசாரித்தபோது, அவனோ, “ மீன் விலை ஒரு கிலோ 500 ருபாய் ஆகும், சார்,” என்று கூறினான்.

விலையைக்கேட்டுத் திடுக்கிட்டுப்போன அவர், “ என்னப்பா இது ? அந்தப் பையனும் இதே மாதிரி மீன்தான் வைத்திருக்கிறான். அவன் விலை 100 ரூபாய் என்று சொல்கிறான். நீ அதே மாதிரி மீனுக்கு விலை 500ரூபாய் என்று சொல்கிறாயே. இது நியாயமா?” என்று வினவினார்.

அந்தப் பையனோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் சொன்னான்:

“ சார், பார்க்கத்தான் இரண்டும் ஒரே மாதிரியாகத்தெரியும். ஆனால் என்னுடைய மீன் மிகவும் விசேஷமானது. அதனால்தான் கூடுதல் விலை,” என்றான்.

“அப்படி என்னப்பா விசேஷம் உன் மீனில் இருக்கிறது?” என்று கேட்டார் வாடிக்கையாளர்.

“சார், இது புத்திசாலியான மீன். இதைச் சாப்பிடுபவர்களும் நாளடைவில் புத்திசாலியாகி விடுவார்கள். அதனால்தான் இவ்வளவு விலை,” என்றான் பையன்.

“உண்மையாகவா ?” என்று வியந்தார் வாடிக்கையாளர்.

“வாங்கிப்பாருங்கள், சார், உங்களுக்கே தெரியும்,”

“சரி,சரி, ஒரு கிலோ கொடு. ‘ட்ரை’ பண்ணிப் பார்க்கிறேன்”, என்று சொல்லி, ஒரு கிலோ மீனை 5௦௦ ருபாய்க்கு வாங்கிச் சென்றார்.

அடுத்தடுத்து தொடந்து 6 நாட்களுக்கு அதே மீனை அதே பையனிடம் அதே விலைக்கு வாங்கிச் சென்று சாப்பிட்டுவந்தார்.

புத்திசாலித்தனத்தில் ஏதாவது முன்னேற்றம் ... ?

ம்ஹும். ...! எதுவும் தெரியவில்லை.

அப்போதுதான் அவருக்குப் புரிந்தது “புத்திசாலி மீன்” என்று அந்தப் பையன் சொன்னது எல்லாம் வெறும் பித்தலாட்டம் என்று.

கடுமையான கோபம் வந்துவிட்டது அவருக்கு. ‘இன்று அவனைப்போய் ‘உண்டு அல்லது இல்லை’ என்று ஆக்கிவிடவேண்டியதுதான் என்ற தீர்மானத்துடன் சந்தைக்குச் சென்றார்..

அந்தப் பையனிடம் சென்று, தன் கோபத்தை வெளிக்காட்டாமல், “என்னப்பா, அந்த புத்திசாலி மீன் இருக்கா? ”, என்று இவர் கேட்க, இவரின் கோபத்தைப் புரிந்துகொள்ளாமல் அவனும், “ ஓ, இருக்கே. உங்களுக்காகவே தனியாக எடுத்து வைத்திருகிறேனே ! ”, என்று உற்சாகமாகக் கூறினான்.

வந்ததே கோபம் அவருக்கு !

“அயோக்கியப் பயலே! என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய் ? உன் பேச்சைக்கேட்டு ஒரு வாரமாக நானும் அந்த மீனை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்துவிட்டேன். அணுவளவும் முன்னேற்றம் இல்லை. புத்திசாலி மீனும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது. என்னை ஏமாற்றிவிட்டாய். உடனடியாக என் பணத்தையெல்லாம் திருப்பித் தந்துவிடு. இல்லையென்றால் உடனடியாகப் போலீசைக் கூப்பிட்டுவிடுவேன்”, என்று கத்தினார்.

பையனோ அலட்டிக்கொள்ளாமல் பதில் சொன்னான்:

“ சார், இங்கே பாருங்க. இதே மீனை புத்திசாலி மீன் என்று நான் ஒரு வாரத்திற்கு முன்னால் சொன்னபோது நீங்கள் ஆட்சேபிக்கவேயில்லை. இப்போ பாருங்க, ஒரு வாரத்திலேயே இது புத்திசாலி மீன் இல்லை என்று நீங்களே கண்டு பிடித்துவிட்டீர்கள். என்ன பிரமாதமான முன்னேற்றம்! இதைப் போய் முன்னேற்றம் இல்லை என்று சொல்கிறீர்களே, சார் ! தொடர்ந்து சாப்பிடுங்க, சார். இன்னும் பிரமாதமான முன்னேற்றம் கிடைக்கும்.”

வாடிக்கையாளர் வாயடைத்து நின்றார்.

சொல்லுங்க யார் புத்திசாலி



நியூயார்க் நகரில் இருக்கும் அந்த புகழ் பெற்ற பேங்கிற்குள் நுழைந்த அந்த இந்தியர் அங்கிருந்த ஆபிசரிடம் தனக்கு 5000 டாலர்கள் கடன் வேண்டும் என்றும்.தற்போது தான், இந்தியாவிற்கு செல்வதாகவும் திரும்பிவந்து கடன் பணத்தைக் கட்டிவிடுவதாகவும் சொன்னார்.

அதற்கு அந்த ஆபிசர் , உங்களுக்கு கடன் கொடுக்கவேண்டுமெனில் நீங்கள் அதற்காக ஏதாவது உத்தரவாதம் கொடுக்கவேண்டும் என்று சொல்ல,
இவரோ தனது புத்தம்புதிய ஃபெராரி கார் சாவியை அந்த ஆபிசரிடம் கொடுத்தார். கூடவே லைசென்ஸ் போன்ற பேப்பர்களையும் கொடுத்தார்..

ஆபிசரோ இந்தியருக்கு அவர் கேட்ட கடனை கொடுத்தார். 250,000 டாலர் மதிப்புள்ள ஃபெராரி காரை வெறும் 5000 டாலர் கடன் வாங்க பயன்படுத்திய அந்த இந்தியரை நினைத்து வங்கியின் தலைவரும் மற்ற அதிகாரிகளும் அவர் சென்ற பின்பு சிரித்தனர்..

இந்தியா சென்று ,திரும்பி வந்த இந்தியர் அந்த வங்கிக்கு சென்று தான் வாங்கிய 5000 டாலரையும் இரண்டு வாரத்திற்கான வட்டியாக 5.41 டாலரையும் திருப்பிக்கொடுத்தார்.

அந்த ஆபிசர், சார், உங்களுடன் பிசினஸ் செய்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஒரே ஒரு விசயம்தான் எனக்கு இன்னும் புரியல,
உங்களைப் பத்தி நாங்க வெளிய கேட்டோம், நீங்க ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று தெரிந்தது.

ஒரு பெரிய கோடீஸ்வரர் 5000 டாலர் கடன் வாங்குகிறாரே என்று எங்களுக்கு ஒரே குழப்பம்,

அதற்கு அந்த இந்தியர்,
எனக்கு இங்கு கார் நிறுத்தும் பார்கிங் வசதி இல்லை. பிறகு நான் யோசித்தேன்.. எங்கு கொண்டுப்போய் நான் எனது காரை நிறுத்தினால் பாதுகாப்பாக இருக்கும் என்று..

அது மட்டுமின்றி பல இடத்தில விசாரித்தும் பல டாலர்கள் கேட்டாங்க..ஆனால் இங்கு 5.41 டாலர் தான் ஆச்சு..

இப்போ சொல்லுங்க யார் புத்திசாலி

நூறு ரூபாய் தருகிறேன்



ஒரு ஊரில் ஒரு புலவர் இருந்தார். அவருக்குப் பணம் தேவைப்பட்டது.பக்கத்து ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான். அவனைப் புகழ்ந்து பாடி பரிசுபெற்று வரலாம் என்று அவர் எண்ணினார்.


அவன் ஒரு பெரிய கஞ்சன் என்பது அவருக்குத் தெரியாது.புலவர் அவனிடம் போனார். அவனைப் புகழ்ந்து சில பாடல்கள் பாடினர்.பணக்காரன் 'நூறு ரூபாய் தருகிறேன்' என்றான். புலவர் இன்னும் சில பாடல்கள் பாடினார். அவன் இருநூறு ரூபாய் தருகிறேன்' என்றான். புலவர் இன்னும் பாடினார்.


அவன் 'முன்னூறு ரூபாய் தருகிறேன்' என்றான். புலவர் இன்னும் உற்சாகத்துடன் பாடினார்.


அவன் 'நானூறு ரூபாய் தருகிறேன்' என்றான். இன்னும் கொஞ்சம் பாடினார்.


அவன் 'எழுநூறு ரூபாய் தருகிறேன்' என்றான். புலவர் பாட்டை முடித்துக்கொண்டார்.


பணக்காரன் புலவருக்கு நூறு ரூபாய் கொடுத்தான். புலவருக்கு ஒன்றும் புரியவில்லை.


அவர் 'ஐயா, நீங்கள் 700 ரூபாய் தருவதாகச் சொன்னீர்களே' என்றார். அதற்கு அவன் "புலவரே, நான் திரும்பத் திரும்ப நூறு ரூபாய்தானே தருகிறேன் என்றேன்.


முதலில் 'நூறு ரூபாய் தருகிறேன்' என்றேன். பிறகு, 'இரு. நூறு ரூபாய் தருகிறேன்' என்றேன். பிறகு, 'முன் நூறு ரூபாய் தருகிறேன்' என்றேன். பிறகு, 'நான் நூறு ரூபாய் தருகிறேன்' என்றேன். பிறகு, 'எழு. நூறு ரூபாய் தருகிறேன்' என்றேன்.


நீங்கள்தான் தப்பாகப் புரிந்துகொண்டு இருக்கிறீர்கள்' என்றான், புலவருக்குப் பணக்காரனின் கஞ்சத்தனம் புரிந்தது. வெறும் நூறு ரூபாயோடு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்

உங்களுக்கு மட்டும்தான் தாத்தாக்கள் இருக்கிறார்களா?

தொப்பி வியாபாரியின் எள்ளுப் பேரன் ஒருவன், தாத்தாவைப் போலவே தொப்பி வியாபாரம் செய்கிறான். வியாபாரத்துக்காக வெளியூர் சென்றபோது, நிழலுக்காக தாத்தா ஒதுங் கிய அதே மரத்தின் கீழ் இவனும் ஒதுங்க வேண்டிவருகிறது. தாத்தா போலவே தூங்கியும் விடுகிறான். தாத்தா காலத்தைப் போலவே மரத்தின் மேலிருக்கும் குரங்குகள் இறங்கி வந்து அவனது கூடையிலிருந்த தொப்பிகளையெல்லாம் தூக்கிக்கொண்டு போய் விடுகின்றன.தூக்கம் கலைந்தவன், தன் தொப்பிகள் பறிபோனதைப் பார்க்கிறான்.ஆனால், தான் கேள்விப்பட்டிருந்த தாத்தா கதை நினைவுக்கு வர, உள்ளூர ஒரு தெம்பு வருகிறது.


தாத்தா காலத்து வித்தை பலிக்கிறதா என்று பார்க்க, குரங்குகளைப் பார்த்தபடி தன் தலையை தேய்க்கிறான். என்ன ஆச்சரியம், மரத்திலிருந்த குரங்குகளும் அப்படியே தலையைத் தேய்த்தன. இனி பிரச்னை இல்லை என்று உற்சாகமானவன் தன் தலையிலிருந்த தொப்பியை எடுத்துக் கீழே வீசினான். குரங்குகளும் அந்த தொப்பிகளை வீசும் என்று எதிர்பார்த்தால்.. ம்ஹம்.. குரங்குகளிடம் ஒரு அசைவில்லை. ஒரு குரங்கு மட்டும் மின்னல் வேகத்தில் இறங்கி வந்து அவன் வீசிய தொப்பியையும் எடுத்துக்கொண்டு போய்விட்டது.

மேலே போன அந்த குரங்கு அவனிடம் சொன்னது...

''உங்களுக்கு மட்டும்தான் தாத்தாக்கள் இருக்கிறார்களா? எங்களுக்கும் உண்டு