மங்கு ஒரு சுட்டி குரங்கு ,அது ஒரு மிக பெரிய காட்டுல தன்னோட அம்மாகூட வாழ்ந்துகிட்டு வந்துச்சு
அதுக்கு ஞாபக மறதி அதிகமா இருந்துச்சு ,அதனால அதுக்கு தன்னம்பிக்கையே இல்லாம எப்பவும் சோர்ந்தே இருந்துச்சு ,அவுங்க அம்மா சொன்னாங்க உலகத்துல குறை இல்லாதவங்களே இல்லை ,உனக்கு இருக்குறது சின்ன குறை தொடர்ந்து முயற்சி செய்தன்னா நீயும் வாழ்க்கையில உயர்ந்த இடத்துக்கு போகலாம்னு சொ
ன்னாங்கஒருநாள் ஸ்கூலுக்கு போன மங்கு சட்ட போட மறந்துட்டு வெறும் டவுசர் மட்டும் மாட்டிகிட்டு ஸ்கூலுக்கு போய்டுச்சு ,அங்க இருந்த எல்லா மிருகங்களும் சிரிப்பா சிரிச்சி மங்குவ கிண்டல் செஞ்சுச்சுங்க
இதனால கொஞ்ச நஞ்ச தன்னம்பிக்கையும் போச்சு ,உடனே வீட்டுக்கு ஓடிவந்த மங்கு இனிமே நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு சொல்லுச்சு ,உடனே அத புரிஞ்சிகிட்டு அம்மா பரவா இல்ல நீ என்கிட்டயே படிச்சி பெரிய மனுசனா ஆகுனு சொன்னாங்க ,அன்னையில இருந்து வீட்டுலயே பாடம் படிச்சிச்சு மங்கு
மங்கு கொஞ்சம் வளர்ந்ததும் பழம் விக்கிற வியாபாரம் செய்ய ஆரம்பிச்சுச்சு ,ஒருநாள் ஒரு நரி மங்கு கிட்ட வந்து பழம் எவ்வளவுன்னு கேட்டுச்சு ,பழத்தோட விலையை மறந்த மங்கு ,ஐயோ பழத்தோட விலையை மறந்துட்டேனேன்னு சொல்லுச்சு ,இத கேட்ட நரிக்கு மங்குவோட மறதி வியாதி பத்தி புரிஞ்சிகிடுச்சு
உடனே மங்குவ ஏமாத்த முடிவு செஞ்சுச்சு ,உடனே நேத்து ஒரு ரூபாய்க்கு பத்து பழம் எனக்கு கொடுத்தியே அதே விலை தான இன்னைக்கும்னு கேட்டுச்சு ,இத புரிஞ்சிக்காத மங்கு ஆமான்னு சொல்லிடுச்சு ,உடனே பத்து ரூபாய கொடுத்துட்டு எல்லா பழத்தையும் வாங்கிட்டு ஓடி போய்டுச்சு நரி
வீட்டுக்கு வந்து அம்மா கிட்ட நடந்தத சொல்லுச்சு மங்கு ,இத கேட்ட அவுங்க அம்மா எப்பயும் இல்லாம மங்குவ ரொம்ப திட்டிட்டாங்க ,ரொம்ப சோர்ந்து போன மங்கு ரொம்ப வருத்தப்பட்டுச்சு ,இத்தனை நாள் எவ்வளவு தப்பு செஞ்சாலும் தனக்கு துணையா இருந்த அம்மாவே தன்னை திட்டுனதால மனசு ஒடிஞ்சி போன மங்கு பட்டணத்துல இருக்குற தன்னோட தாத்தாவ போய் பார்க்க கிளம்புச்சு
காட்டு பகுதியில நடந்து போன மங்குவுக்கு பட்டணம் போற பாதை மறந்து போச்சு ,ரொம்ப பயந்து போன மங்கு அந்த காட்டு பகுதியில இருந்த ஒரு கல்லுல படுத்து அழுதுகிட்டு இருந்துச்சு ,அப்பத்தான் அங்க ஒரு பட்டணத்து குரங்கு வந்துச்சு
அது பார்க்கறதுக்கு ரொம்ப படிச்ச குரங்கு மாதிரி இருந்துச்சு ,அது மங்கு கிட்ட வந்து என்ன நடந்துச்சுனு கேட்டுச்சு ,அப்பத்தான் தன்னோட ஞாபக மறதியை பத்தி சொல்லி அழுத்துச்சு மங்கு ,இத கேட்ட அந்த பட்டணத்து குரங்கு சொல்லுச்சு ,இது எல்லாம் இந்த அறிவியல் உலகத்துல ரொம்ப சாதாரண விஷயம் இதுக்கு போயி அழுவாங்கனு ஆறுதல் சொல்லுச்சு
தன்னோட பிரச்னையை எல்லாரும் சொல்லி கிண்டல் செய்யுறத மட்டுமே பார்த்து வளர்ந்த குட்டி குரங்கான மங்கு ,முதல் முதலா தன்னோட பிரச்னை சின்னதுன்னு சொல்லுற குரங்கை பார்த்ததும் ரொம்ப சந்தோசப்பட்டுச்சு
உடனே அந்த பட்டணத்து குரங்கு மங்குவ தன்னோட பட்டணத்து வீட்டுக்கு கூட்டிகிட்டு போச்சு ,அங்க போனதும் ஒரு ஸ்மார்ட் வாட்சை எடுத்து மங்குவோட கையில கட்டுச்சு ,இத முன்ன பின்ன பார்த்துடாத மங்கு ஐயா இது என்னனு கேட்டுச்சு
அதுக்கு அந்த பட்டணத்து குரங்கு சொல்லுச்சு இரு ஒரு அறிவியல் சாதனம் ,இது உன்னால ஞாபகம் வச்சிக்கிட முடியாததை எல்லாம் உனக்காக ஞாபகம் வச்சிக்கிடும் ,அதோட இந்த உலகத்துல இருக்குற எல்லா சந்தேகத்தையும் இது தீர்த்து வைக்கும்னு சொல்லுச்சு
மங்குநாள இத நம்பவே முடியல ,இது எப்படி என்னோட சந்தேகத்தை தீர்க்கும்னு கேட்டுச்சு ,உடனே அந்த பட்டணத்து குரங்கு சொல்லுச்சு இந்த பட்டண அமுக்கி உனக்கு இருக்குற சந்தேகத்தை கேளுன்னு சொல்லுச்சு ,உடனே மங்கு அந்த சிகப்பு பட்டன அமுக்கி இப்ப நான் எந்த இடத்துல இருக்கேனு கேட்டுச்சு ,உடனே அந்த ஸ்மார்ட் வாட்ச் சொல்லுக்கு ,நீங்க பட்டணத்துல இருக்குற கரும்பு தோட்டத்துல இருக்குற வீட்டுல இருக்கீங்கன்னு சொல்லுச்சு
மங்குவுக்கு ஆச்சர்யமா போச்சு , இது ரொம்ப நல்லா இருக்கு இத வச்சி என்னோட ஞாபக மறதியை எப்படி குணப்படுத்த முடியும்னு கேட்டுச்சு ,அதுக்கு அந்த பட்டணத்து குரங்கு சொல்லுச்சு ,இந்த கடிகாரம் உன்ன குணப்படுத்தாது ஆனா உன்னோட ஞாபக குறைபாட்டினால எந்த பிரச்னையும் உனக்கு வராம பார்த்துக்கும்
உதாரணத்துக்கு உங்க வீட்டு முகவரி என்னனு கேட்டுச்சு ,உடனே மங்கு தன்னோட டைரியில இருந்த வீட்டு முகவரியை பார்த்து சொல்லுச்சு ,இத இந்த ஸ்மார்ட் வாட்ச் கிட்ட சொல்லிட்டனா அது ஞாபகம் வச்சிக்கிடும் ,நீ எப்பவும் காணாம போக மாட்டேன்னு சொல்லுச்சு ,
உடனே மங்குவுக்கு தேவையான எல்லாத்தையும் அந்த ஸ்மார்ட் வாச்சல ஏத்தி கொடுத்துச்சு அந்த பட்டணத்து குரங்கு ,அதோட அந்த ஸ்மார்ட் வாட்சை எப்படி எல்லாம் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துறதுனு சொல்லி கொடுத்துச்சு ,ரொம்ப சந்தோசமான மங்கு நான் உடனே என்னோட அம்மாவ பார்க்க போகணும்னு சொல்லுச்சு
அத கேட்ட அந்த பட்டணத்து குரங்கு நான் சொல்லி கொடுத்த மாதிரி அந்த ஸ்மார்ட் வாட்ச் கிட்ட வழி கேளுன்னு சொல்லுச்சு ,உடனே மங்கு அந்த வாட்ச் கிட்ட தன்னோட வீட்டுக்கு வழி கேட்டுச்சு உடனே அந்த ஸ்மார்ட் வாட்ச் மங்குவோட வீட்டுக்கு எப்படி போறதுன்னு வழி சொல்ல ஆரம்பிச்சுச்சு ,பட்டணத்து குரங்கு கிட்ட நன்றி சொன்ன மங்கு தன்னோட பயணத்தை ஆரம்பிச்சுச்சு
வாழ்க்கையில நண்பர்களே இல்லாத மங்கு குரங்கு தனக்கு புதுசா கிடைச்ச ஸ்மார்ட் வாட்ச் ஒரு நண்பன் மாதிரி தன்னோட பேசுறது அதுக்கு புடிச்சு இருந்துச்சு,அந்த ஸ்மார்ட் வாட்ச் வழி சொல்ல சொல்ல மெதுவா தன்னோட வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிச்சுச்சு மங்கு
அப்படி திரும்பி போகுறப்ப அங்க ஒரு நரி இருக்குறத பார்த்துச்சு மங்கு ,உடனே தன்னோட ஸ்மார்ட் வாட்ச் கிட்ட நரிய பத்தி கேட்டுச்சு ,அதுக்கு அந்த ஸ்மார்ட் வாட்ச் சொல்லுச்சு எப்பயும் நரிய நம்ப கூடாது ,ஏற்கனவே நீ நரிகிட்ட ஏமாந்து இருக்கிறதா என்கிட்ட சொல்லி இருக்கன்னு ஞாபக படுத்துச்சு
அப்பத்தான் இந்த நரிதான் தன்னை ஏமாத்தி தன்னோட பழங்களை புடிங்கிட்டு போனதுனு புரிஞ்சிகிடுச்சு , மங்குவுக்கு அப்பத்தான் கோபம் வந்துச்சு ,உடனே தன்னோட ஸ்மார்ட் வாட்ச்க்கிட்ட நான் இப்ப அந்த நரிய பழிவாங்கணும் அத நான் அடிக்க போறேன்னு சொல்லுச்சு
அதுக்கு சிகப்பு லைட் எரிஞ்சு அது ஆபத்துனு சொல்லுச்சு ஸ்மார்ட் வாட்ச் , நரி உன்ன விட பெரிய விலங்கு அத உன்னோட புத்திய வச்சுதான் பழிவாங்க முடியும்னு சொல்லிட்டு ஒரு ஐடியாவும் கொடுத்துச்சு ,அத கேட்ட மங்கு நரிகிட்ட போச்சு
ஐயா நீங்க தான என்கிட்ட இருந்த பழம் எல்லாத்தையும் நேத்து வாங்குனீங்கனு கேட்டுச்சு ,அதுக்கு அந்த நரி சொல்லுச்சு நான் காசு கொடுத்து தான வாங்குனேன் இப்ப எதுக்கு கேக்குறன்னு கேட்டுச்சு ,அதுக்கு மங்கு சொல்லுச்சு இல்ல நேத்து நீங்க போனதுக்கு அப்புறமா உங்கள மாதிரியே ஒருத்தரு கொஞ்சம் காசு கொடுத்து 100 பழம் இன்னைக்கு கொண்டு வர சொன்னாருனு சொல்லுச்சு
அந்த நரி ஒன்னும் புரியாம பார்த்துச்சு ,அதுக்கு மங்கு சொல்லுச்சு அவரு 90 ரூபா கொடுத்து எல்லா பழத்தையும் இன்னைக்கு கொண்டு வர சொன்னாரு ,ஆனா எங்க அம்மா எல்லா பணமும் கொடுத்தா தான் பழத்தை கொடுப்பேன்னு சொன்னாங்க அதான் மீதி பத்து ரூபா கேட்டு வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்னு சொல்லுச்சு
இத கேட்ட நரிக்கு புரிஞ்சி பொது இந்த முட்டாள் குரங்கு திரும்பவும் நம்ம கிட்ட ஏமாற போகுது ,யாரோ முன்பணம் கொடுத்து பழம் கேட்டு இருக்காங்க நாம அந்த மீதி 10 ரூபாய கொடுத்தம்னா இந்த மக்கு குரங்கு கிட்ட இருக்குற எல்லா பழத்தையும் வாங்கிட்டு போயி ஒரு வாரம் வச்சி சாப்பிடலாம்னு நினைச்சுச்சு
உடனே நீதானா அது இந்தா பத்து ரூபா , நீ தேடிகிட்டு இருக்குறது என்னோட அண்ணன்தான் உனக்காக இவ்வ்ளவுநேரம் இங்கதான் காத்துகிட்டு இருந்தாரு ,நீ வாரத்துக்கு லேட் ஆனதுனால என்ன வாங்கிட்டு வர சொன்னாருன்னு சொல்லுச்சு ,உடனே அந்த பத்து ரூபாய வாங்குன மங்கு அங்க இருந்து நேரா அவுங்க அம்மா கிட்ட ஓடுச்சு
வீட்டுக்கு போறதுக்குள்ள எல்லா விஷயமும் மறக்காம இருக்க அந்த ஸ்மார்ட் வாட்ச்ல எல்லாத்தையும் பேசி ரெகார்ட் பண்ணிகிடுச்சு ,ரெண்டு நாளா பிள்ளையை காணாத அந்த குரங்கு அம்மா ,தன்னோட வாழ்க்கைக்கு உதவுறது மாதிரி இந்த அறிவியல் சாதனத்தோட வந்தது ரொம்ப சந்தோசம் ,இனிமே தன்னோட குழந்தைக்கு எந்த பாதிப்பும் வராதுன்னு நம்பிக்கையோட மங்குவுக்கு சாப்பாடு போட்டுச்சு

























No comments:
Post a Comment