Tuesday, November 25, 2025

ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுங்கள்

 🟩🟪🟩🟪🟩🟪🟩🟪🟩

 ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுங்கள். 

*வழியே இல்லாமல் வாழ்க்கை அமைந்து விட்டதே என்று எண்ணாதே....*

*பறக்கும் திசை எல்லாம் பாதை தான் பறவைக்கு....*


 *நல்லவர்களிடமிருக்கும்*

*நிரந்தரமான கெட்ட பழக்கம்,*

*எல்லோரையும்*

*நல்லவர்கள்

என*

*நம்புவது.*


*எல்லா இடங்களிலும்*

*கோபப்பட்டு நம்மை*

*நிரூபிப்பதைவிட.*

*அலட்சியப் படுத்தினால்*

*நிம்மதியாய் இருப்போம்.*


மனிதனுடைய திறமை பெரிதல்ல. கிடைக்கின்ற சந்தர்ப்பமே அவனைப் பிரகாசிக்கச் செய்கிறது.

ஆர்வங்கள் கொட்டிக் கிடந்தாலும்,

சந்தர்ப்பங்கள் சரியா அமையாவிட்டால் 

எதையும் செயல்படுத்த இயலாது.


பொருத்தமாக வேண்டும் என்று தேடி எடுப்பவைகள் சில நாட்களில் பொருந்தாமல் போய் விடும்.


எதார்த்தமாகக்

கிடைப்பவைகள் தான் எதிர்பார்க்காத நாட்கள் வரை வரும்.


கிடைக்கும் சந்தர்ப்பத்தை

எப்பவும் கை விடக்கூடாது. அதைப் பயன்படுத்தினால் மகிழ்ச்சியோ, அனுபவமோ கிடைக்கும்


சந்தேகத்தையும், அச்சத்தையும்‌

யார் வெற்றி கொள்கிறாரோ அவரே தோல்வியையும்

வெற்றி கொண்டவர்‌ ஆகிறார்.


மகத்தான சாதனை புரிந்தவர்கள் எல்லாம் தோல்விகள் பல கடந்து வென்றவர்களே.


அடைந்தே தீருவேன் என்ற வைராக்கியம் உங்களுக்கு இருந்தால் உங்கள் வெற்றி எளிதாகிவிடும்.


திருப்பி அடிப்பதை விட,

உங்களை அடிக்கவே முடியாது

என்ற நிலைக்கு

உங்களை உருவாக்குங்கள்.


"விட்டுக்கொடுத்தவன் கெட்டுப் போனதில்லை" என்பது பழமொழி.

இது இல்லற வாழ்க்கையின் இலக்கணம் என்பதனை மறந்துவிடாதீர்கள். கடந்த காலத்தில் ஆண் சம்பாதித்தான்; பெண் வீட்டிலிருந்தாள். ஆனால் இன்றைய நிலை அதுவல்ல. ஆணிற்கு இணையாக பெண் வேலைக்குச் செல்கிறாள். பணம் சம்பாதிக்கிறாள். இதனால் இணையர்கள் இருவருக்கும் இடையே "ஈகோ" எனும் கொடிய நோய் தொற்றிக் கொள்கிறது.


யோசித்துப் பாருங்கள்,

வாழ்வது கொஞ்ச காலம், அதனை ஏன் வாழ்ந்து அனுபவிக்கத் தெரியவில்லை.


ஒரு கை தட்டினால் ஓசை வராது. இரண்டு கையும் சேர்த்து தட்டினால் அந்த ஓசை பத்து பேருக்குக் கேட்கும். அதே போல் தான் வாழ்க்கையும். ஆம் ஒருவர் பேசும் பொழுது ஒருவர் விட்டுக் கொடுத்துச் சென்றால் வீட்டில் அமைதி நிலவும். இரண்டு பேரும் நீயா நானா என்றால் கடைசியில்  காலம்தான் ஜெயிக்கும்.  காலத்தை நாம் ஜெயிக்க முடியாது. எனவே இல்லற வாழ்க்கையில் ஈகோவைத் துாக்கி எறிந்து இன்பமாக வாழப் பழகிக் கொள்வது அவசியம்.


இல்லறம் எனும் பந்தம்

நல்லறமாக சில தியாகங்களை இணையர்கள் இருவரும் செய்ய வேண்டும்.


தம்பதியர் தங்களுக்குள் இருக்கும் பிடிவாதத்தை துரத்திவிட்டு இருவரும் ஒருவராகப் பயணியுங்கள். பணத்திற்கான முக்கியத்துவத்தை விட அன்பிற்கு முக்கியத்துவம் தாருங்கள். ஒருவருக்கொருவர் உண்மையாக இருங்கள்; அன்பு செலுத்துங்கள். இணைந்து நின்று ஒருவொருக்கு ஒருவர் தோள் கொடுங்கள். 


இல்லறம் எனும் நல்லறத்தில்

'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' எனும் வள்ளுவத்தின் வழிநின்று வாழப்பழகிக் கொண்டால் அந்த வாழ்க்கையை வரலாறு பேசும். இல்லத்தில் வசந்தம் குடிகொள்ளும்.


"பட்டுக் கொடுத்தாலும் துட்டுக் கொடுத்தாலும் ஒற்றுமை வராது. ஆனால் விட்டுக் கொடுத்தால்

ஒற்றுமை வரும்!"

என்கிறார் வாரியார் சுவாமிகள்.


🟩🟪🟩🟪🟩🟪🟩🟪🟩

No comments:

Post a Comment