இன்றைய காலை நேர சிந்தனை இதோ உங்கள் பார்வைக்கு
வலி, வேதனை, ஏமாற்றம் எல்லாம்
வாழ்க்கையின் இறுதிக்கட்டமல்ல. 💫
வாழ்க்கையைப் புரிந்துக் கொண்டு
பயணிப்பதற்கான முயற்சிக் கட்டம் அது. 🚶♂️✨
தயங்குபவர்களுக்கும், பயப்படுபவர்களுக்கும்,
யோசிப்பவர்களுக்கும் இந்த
உலகில் எதுவும்சாத்தியமில்லை. ⚠️
உங்களுடைய துணிவும் முயற்சியும் தான்
வெற்றியின் முதற்படிகள். 🚀🌟
எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்று
எதிர்பாராமல் கிடைக்காது போகும் போது
உடல், மனதுக்கு ஒரு தாக்கம் ஏற்படும் —
இது யதார்த்தமான உண்மை. 💔🧠
ஆனால் அந்தப் பின்னடைவை
வெற்றியின் படியாகக் கொண்டு
நிதானமாக முன்னே இயங்க வேண்டும். 🪜✨
கிடைக்கவில்லை என்றவுடன் துவண்டு
மனவிரக்தியில் முயற்சிகளை கைவிடக்கூடாது. 🙅♂️🔥
விடாமுயற்சி என்பது
முடிந்தவரை முயல்வது அல்ல!
கிடைக்கும் வரை முயல்வதே விடாமுயற்சி! 💪
அனைவருக்கும் எனது இனிய நற்காலை வணக்கங்கள் என்றும் அன்புடன் ஈரோடு பொறியாளர் பி. மாரிமுத்து ரக்ஷனா எலக்ட்ரிக்கல் அசோசியேட்ஸ் மற்றும் ரக்ஷனா உயர் கல்வி வழிகாட்டுதல் சேவை மையம் மூலப்பாளையம் ஈரோடு சுவைப்பது யாராக இருப்பினும் விதைப்பது நாமாக இருக்கட்டும்
No comments:
Post a Comment