Wednesday, April 17, 2024

செய்தித் துளிகள் - 17.04.2024 (புதன்கிழமை)

நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ ஆசிரியர்கள்‌ கைபேசி, உயர்‌ தொழில்‌ நுட்ப கணினி ஆய்வகங்கள்‌ மற்றும்‌ திறன்‌ வகுப்பறைகளில்‌ மணற்கேணி செயலியை பயன்படுத்தி கற்றல்‌ கற்பித்தல்‌ செயல்பாட்டினை மேற்கொள்ளுதல்‌ - அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - தொடர்பாக - தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ வெளியீடு.

🍒🍒உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு மீண்டும் 26.04.2024 அன்று ஒத்திவைப்பு.

🍒🍒7979 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு (SSA AZ Head) 30.06.2024 வரை ஊதியம் வழங்கும் சான்றிதழ் வெளியீடு                                                                          🍒🍒உதவிப் பேராசிரியர் தேர்விற்கு விண்ணப்பிக்க விரைவாக NOC வழங்க கோரிக்கை.

🍒🍒UPSC தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம்!

👉2016 முதல் யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வருகிறார். பிஎஸ்சி இயற்பியல் பட்டதாரியான புவனேஷ் ராம் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்.

👉2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தமிழ்நாட்டில் இருந்து புவனேஷ் ராம் என்னும் மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.அவர் அகில இந்திய அளவில் இவர் 41ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

👉 இவர் 2019 யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 496ஆவது இடத்தைப் பெற்று இருந்தார். இந்த நிலையில் தற்போது அகில இந்திய அளவில் 41ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.



*இன்று மாலை 6:00 மணிக்கு பிறகு சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை பகிர்ந்தாலும் தண்டனை - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை - குழு உறுப்பினர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவும்.*


🍒🍒இன்று மாலை 6 மணிக்குள் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும், அரசியல் கட்சிகளுக்கு சத்யபீரதா சாகு உத்தரவு.

🍒🍒தமிழகத்தில் பாஜகவுக்கு பெண்களின் ஆதரவு பெருகியுள்ளது 

-பிரதமர் மோடி 

🍒🍒₹55,000ஐ நெருங்கிய தங்கம் விலை:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹640 உயர்ந்து ₹54,960க்கு விற்பனை! 

ஒரு கிராம் ₹6,870க்கு விற்பனை செய்யப்படுகிறது.

🍒🍒மக்களவை தேர்தல் - 10,214 பேருந்துகள் இயக்கம்

இன்றும்,நாளையும் சென்னையிலிருந்து 2,970 சிறப்புப் பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து 3,060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமான 10,214 பேருந்துகள் இயக்கம்

-அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்

🍒🍒திமுகவினரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி புகார்!

சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் மூலம் திமுக நிர்வாகிகளின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு

சட்டவிரோத மென்பொருள் மூலம் திமுகவினரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் புகார்

நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய செல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் திமுக வலியுறுத்தல்

🍒🍒சுமார் 14,000 ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்து Tesla நிறுவனம் அதிரடி!

நிறுவனச் சீரமைப்பின் ஓர் அங்கமாக பணி நீக்கம் செய்வதாகக் கூறி சுமார் 10% ஊழியர்களுக்கு Tesla நிறுவனர் எலான் மஸ்க் கடிதம்

சமீப காலமாக மின்சார கார்களின் விற்பனை குறைந்து கொண்டே செல்வதால் செலவைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

🍒🍒ஓ.பன்னீர்செல்வம் போன்றதொரு தலைவர் டெல்லிக்கு தேவைப்படுகிறார்”

பரமக்குடியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பரப்புரை

🍒🍒தமிழகத்தில் இதுவரை ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.162 கோடியே 47 லட்சம் ரொக்கம் பறிமுதல்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்.

🍒🍒தூய்மை பணியாளர் நியமன வழக்கு - நீதிமன்றம் கருத்து

தூய்மை பணியாளர்களாக குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த நபர்களை மட்டும் நியமிக்க உத்தரவிட கோரி வழக்கு

"தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கொடுங்கள் என எப்படி உத்தரவிடுவது?"

அது ஜனநாயகத்துக்கு எதிரானது  - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து

🍒🍒"மின்னணு வாக்குப்பதிவு முறையில் பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளையும் தெரிவிக்கும் வகையில் விரிவான விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும்"

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, உச்சநீதிமன்றம் உத்தரவு

🍒🍒ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசியவர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம்

ஆந்திர மாநில காவல்துறை அறிவிப்பு

🍒🍒மோடி ஆட்சியில் மக்கள் வாழ்வதே போராட்டமாக இருக்கிறது; மிகவும் மலிவான பிரிவினைவாத அரசியல் செய்து வருகிறார்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

🍒🍒17 வயதில் அரசியலில் நுழைந்து இன்று வரை திமுகவில் பணியாற்றி வருபவர் டி.ஆர்.பாலு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🍒🍒நான் முதல்வன் திட்டம் மூலம் 28 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கியுள்ளோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🍒🍒"எல்லோருக்கும் எல்லாம், அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம்

👉சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்படாத, நான் முதல்வன் திட்டத்தால் ஏராளமான மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். பல ஆயிரம் மாணவர்களின் கனவுகள், நிஜமாக மாறியுள்ளது

👉இன்னொரு தேர்தல் வாக்குறுதி அல்லாத திட்டம்தான் காலை உணவுத் திட்டம். சுமார் 16 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

🍒🍒ஐபிஎல் வரலாற்றில் அதிகப்பட்ச ரன்னை (287 ரன்கள்) பதிவு செய்து ஹைதராபாத் அணி சாதனை

🍒🍒சிங்கப்பூர் பிரதமர்  பதவியை ராஜினாமா செய்கிறார் லீ சியோன் - புதிய பிரதமராக லாரன்ஸ் வோங் தேர்வு                                                                  🍒🍒இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தல்

🍒🍒அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது 

-பக்தர்கள் ஆர்வம்.

🍒🍒முரண்பாடுகளின் மொத்த உருவமாக பாஜக தேர்தல் அறிக்கை இருப்பதாக ப.சிதம்பரம் விமர்சனம்.

🍒🍒மக்களின் உரிமைகளை பறிக்க பாஜக திட்டமிடுவதாக பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு 

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் மறவாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் விபரம்


.👉1. மாற்று உடைகள் ( தேவையானவை )

👉2. தேங்காய் எண்ணெய்

👉3.பவுடர், சீப்பு , பொட்டு, ப்ரஷ் , பேஸ்ட்

👉4.மாத்திரைகள் , இன்ஹேலர்கள்

👉5. விக்ஸ், தலைவலி தைலம்      👉6. பிஸ்கட் பாக்கெட்

👉7.இரண்டு ஸ்கெட்ச்

👉8 .Buds - 2 - ( மை வைக்க )                                👉9. டார்ச் லைட்

👉10. பெட்ஷீட் / துண்டு

👉11. மூக்கு கண்ணாடி (தேவை உள்ளவர்கள்)

👉12. பேனா சிவப்பு & நீலம்

👉13. Ex. box & Table fan ( வாகனத்தில் செல்பவர்கள் ) ( Booth ல போதிய fan வசதி இருக்காது )

👉14. தேவையான குடிநீர் ( வேறு குடிநீர் ஒத்துக் கொள்ளாது என்பவர்கள் )

👉15. EDC - படிவம் original. (ஒட்டு போட)

👉16. Voter ID / ஆதார் Card.

👉17. 1 முதல் 500 வரை எண்கள் கொண்ட பேப்பர் - 2 ( P1 க்கு மட்டும் )

👉18. முந்திரி , பாதாம் பருப்பு + திராட்சை, கடலை மிட்டாய் / நொறுக்கு தீனி

👉19. Cell phone + Headphone + Charger

👉20. flask ( தேவை உள்ளவர்கள்)

👉21. மிக முக்கியமானது கண் கண்ணாடி

👉22. இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் டேங்க் ஃபுல் செய்து வரவும் 

👉23. சானிடைசர் 

👉24. கொசுவர்த்தி கம்போர்ட் வத்தி தீப்பெட்டி 

👉25. தண்ணீர் பாட்டில் 

மற்ற பொருட்கள் தங்களுக்கு தேவைகள் இருந்தால் எடுத்து செல்லவும்.

No comments:

Post a Comment