Sunday, April 21, 2024

பூத் ஏஜெண்டுகள் கடமை


1) மொத்த வாக்காளர்கள் எத்தனை பேர்

 அதில் எத்தனை பேர் வாக்களிக்க வர மாட்டார்கள் 

 எத்தனை பேர் இறந்து விட்டார்கள் 

 எத்தனை பேர் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாதவர்கள் போன்ற விவரங்களை ஜாபிதாவில் இரண்டு நாட்களுக்கு முன்பே முழுமையாக குறிப்பு எடுத்து ஜாவிதாவில் எழுதிக் கொள்ள வேண்டும் 

2) எவ்வளவு வாக்கு தோராயமாக பதிவாகும் என்ற விபரம் முன்கூட்டியே கணித்துக் கொள்ள வேண்டும் 

3) ஓட்டுப்பதிவு அன்று காலை 6 மணிக்கு உணவு அருந்திவிட்டு பூத் ஏஜென்ட்  அவருக்கு உரிய பூத்தில் சென்று விட வேண்டும் 

4)6.15 am வாக்குப்பட்டி சீல் வைக்கப்படும் அதில் நமது பூத் ஏஜென்ட் கையொப்பமிட வேண்டும் 

5) ஆதார் கார்டு ஒரிஜினல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பூத் ஏஜென்ட் கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும் 

6) பூத் ஏஜென்டாக பணிபுரிபவர் அந்த பூத்தில் தனது வாக்கு இருக்கும் வரிசை எண் என்ன என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும் 

7) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொண்டு செல்ல வேண்டும் பூத் ஏஜென்ட் படிவத்தை வாக்குச்சாவடி அதிகாரி முன்னிலையில் பூர்த்தி செய்து கையொப்பமிட்டு அவர் கொடுக்கும் 

 பூத் ஏஜென்ட் அடையாள அட்டையை  போட்டோ ஒட்டி சட்டை இல் மாட்டிக் கொள்ள வேண்டும்  

8) மிகச் சரியாக 7:00 மணிக்கு முதல் வாக்கு பதிவு ஆரம்பித்து விடும் 

9) பூத் ஏஜென்ட்கள் முதல் வாக்காக தங்கள் வாக்கை பதிவு செய்து விட வேண்டும் 

10)EVM நம்பர் குறித்துக் கொள்ள வேண்டும் இதில் தான் சின்னம் இருக்கும்

11) வாக்குகள் பதிவாகும் பெட்டியின் தனியாக இருக்கும் அதற்கும் நம்பர் இருக்கும் அதையும் குறித்துக்கொள்ள வேண்டும்

 12) வாக்காளருக்கு வாக்குச்சீட்டு வழங்கும் துண்டு சீட்டில்  7 டிஜிட் நம்பர் இருக்கும் அதையும் குறித்துக்கொள்ள வேண்டும் 

13) ஓட்டு போட வருபவர்கள் சரிதான் என்றால் அமைதியாக இருக்க வேண்டும் 

 அவர் தவறானவராக இருந்தால் வேட்பாளராக பூர்த்தி ஏஜென்ட் செயல்பட்டு அந்த வாக்கை பதிவை நிறுத்த முடியும் அந்த அதிகாரம் பூத்த ஏஜென்ட் இருக்கு உண்டு வாக்குச்சாவடி அதிகாரி தடுக்க முடியாது அவருக்கு அதிகாரம் இல்லை

14) கூடியவரே தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இணக்கமாக நடந்து கொள்ள வேண்டும் எந்த வகையிலும் பிரச்சனையை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்  நமது கடமையிலிருந்து பின் வாங்க கூடாது

15) கூடியவரை விரைவாக வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் அதில் தாமதமோ குழப்பமோ யாராவது ஏற்படுத்தினால் அதை வாக்கு சாவடியில் உள்ள அதிகாரியிடம் புகார் தெரிவிக்க முடியும் அந்த புகாரை அவர் நிவர்த்தி செய்ய வேண்டும் அது பூத் ஏஜெண்டுக்கு இருக்கக்கூடிய அதிகாரம் 

16) சம்பந்தம் இல்லாத ஒருவர் வாக்குச்சீட்டை எடுத்துக் கொண்டு வந்து வாக்குப்பதிவு செய்ய முயற்சித்தால் அதை பூத் ஏஜென்ட் தடுத்து நிறுத்தி அவரை புகார் தெரிவித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் 

17) பூத் ஏஜெண்டை உணவு அருந்த அல்லது தற்காலிகமாக வெளியில் சென்று வர மாற்றுவதற்கு அவரை விடுவிக்கும் ஒரு ஏஜென்ட் பூத் ஏஜென்ட் இன் தொடர்பில் அவ்வப்போது இருந்து கொண்டே இருக்க வேண்டும் பூத் ஏஜென்ட் 

 உரிய  அனைத்து கடமைகளும் இவருக்கும் உண்டு இவரும் காலை 6 மணிக்கு வாக்குச்சாவடியில் இருக்க வேண்டும் 

18) மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் ஆறு மணிக்கு வாக்குச்சாவடி கேட்டை பூட்டலாம்

 அதுவரை தாமதமாக வந்த வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்  

19) 30 நிமிடத்திற்கு ஒருமுறை  சிறிய துண்டு சீட்டில் எந்த எந்த வாக்கு பதிவாகிவிட்டது என்ற சீரியல் நம்பரை குறித்து உதவி பூத் ஏஜென்ட் க்கு கொடுத்து அனுப்பி வெளியில் உள்ள ஜாபிதாவில் குறித்துக் கொள்ள வேண்டும் 

 அப்போதுதான் பதிவாகாத வாக்குகள் யார் யார் என்று தெரியும் அவர்களை பக்கப் பொறுப்பாளர்கள் வாக்களிக்க அழைத்து வர வேண்டும்

20) பக்கப் பொறுப்பாளர்கள் முதியவர்களை அழைத்து வந்து வாக்குச்சாவடிக்கு கொண்டு வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாக்குப்பதிவு செய்ய அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டியது பூர்த்த ஏஜென்ட் கடமை 

21) அந்த முதியவர் கண் பார்வை இல்லாதவர் ஊனமுற்றவர் வாக்கை தேர்தல் நடத்தும் அதிகாரி பதிவிடுவதற்கு உரிமை இல்லை ஊத்தி ஏஜென்ட் பதிவிடுவதற்கும் உரிமை இல்லை புரிந்து கொள்ள வேண்டும் 

22) வாக்கு சாவடியில் உள்ள அதிகாரியை வாக்கு பதிவு செய்ய அனுமதிக்க கூடாது காரணம் அவர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பார்கள் 

23) பூத்  ஏஜெண்டுகள் மற்ற கட்சி பூத் ஏஜெண்டுகளிடம் தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்கக் கூடாது பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும் தங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் வாக்கு சாவடி அதிகாரியிடம் மட்டும் தான் நாம் தெரிவிக்க வேண்டும் நமக்கு பதில் சொல்ல வேண்டியவர் அவர்தான் என்ற விவரம் தெரிந்திருக்க வேண்டும் 

24) பதிவு நேரம் முடிந்தவுடன் கடைசியாக பதிவான வாக்கு வரிசையில் என்ன என்பதை குறித்துக் கொள்ள வேண்டும் 

25)  முதல் வாக்கு பதிவு எண்ணையும் கடைசி பதிவு எண்ணையும் கணக்கிட்டால் மொத்த வாக்கு பதிவு ஆனது தெரிந்துவிடும் இது முக்கியமான பணி அப்போதுதான் எத்தனை வாக்கு வாக்குச்சாவடியில் பதிவாகி இருக்கிறது எந்த டிஜிட்டல் ஆரம்பித்து எந்த டிஜிட்டல் முடிவடைந்து இருக்கிறது என்ற புள்ளி வரும் கண்டிப்பாக கொடுத்துக் கொள்ள வேண்டும் அதை தேர்தல் நடத்தும் அதிகாரி ஊத்தி ஏஜெண்டுகளுக்கு கட்டாயம் தெரிவிப்பார் 

25) வாக்குப்பதிவு நேரம் முடிந்தவுடன் பெட்டியை சீல் வைக்க தயாராக வேண்டும் அதிலும் பூத் ஏஜென்ட் கையப்பம் இடுவதற்கான ஸ்லிப் இருக்கும் அதில் எல்லா முகவர்களும் கையெழுத்து விடுவார்கள் நமது முகவர் கண்டிப்பாக கிடைத்திருக்க வேண்டும் 

26) தேர்தல் நடத்தும் அதிகாரி தனது வாக்கை அங்கு தபால் ஓட்டாக பதிவு செய்ய ம உரிமை உண்டு என்பதை கவனத்தில் கொண்டு குறித்துக் கொள்ள வேண்டும் 

27) வாக்குப் பெட்டிகள்  பேக்கிங் செய்து சீல் வைக்க

 குறைந்தபட்சம் 15 நிமிடம் ஆகும் இப்போது ஒரு ஒரு பணிகளும் சரியாக நடைபெறுகிறதா என்பதை பூத்  ஏஜென்ட் கண்காணிக்க வேண்டும் 28)வாக்குப்பெட்டியை முழுமையாக பேக்கிங் செய்து சீல் வைத்த பிறகு ஒரு ஒரு கட்சி வேட்பாளர் சார்பில் பூத் ஏஜெண்டுகளுக்கு அந்த வாக்குச்சாவடியில் விபரங்கள் பதிவான வாக்கு விவரங்கள் (ஆரம்ப வாக்கு விவரம் முடிந்த வாக்கு விவரம் )அந்த வாக்குச்சாவடியில் தேர்தல் நடத்தும் அதிகாரி மூலம் படிவம் வழங்கப்படும் அதை கண்டிப்பாக அந்த வாக்குச்சாவடி அதிகாரியிடம் இருந்து  ஒரிஜினல் படிவத்தை வாங்க வேண்டும் கூடிய வரை ஜெராக்ஸ் படிவம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் கட்சிகளுக்கு ஒரிஜினல் படிவம் கொடுக்க வேண்டும் என்பது சட்ட விதி 

30) அனைத்து பணிகளும் முடிந்து பெட்டியை எடுத்துச் செல்ல அதிகாரிகள் லாரியை கொண்டு வருவார்கள் அதில் ஏற்றிய பிறகு தான் கட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கொடுத்த படிவத்தை ஒப்படைத்து விட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும்

No comments:

Post a Comment