Tuesday, April 30, 2024

ஓட்ஸ் பேரீச்சம்பழ ஸ்மூத்தி!

தேவையான பொருட்கள் :

6 பேரீச்சம்பழம் 

½ கப் ஓட்ஸ் 

½ கப் தண்ணீர் 

½ கப் பால்

½ கப் தயிர் 

½ வாழைப்பழம்


செய்முறை:

ஒரு மிக்சி ஜாரில் அல்லது ஸ்மூத்தி ஜாரில் ஓட்ஸ் மற்றும் பேரீச்சம்பழத்தை போட்டு, தண்ணீர் விட்டு, 15 நிமிடங்கள் ஊற விடவும். அதன் பின்பு வாழைப்பழம், தயிர் மற்றும் பாலைச் சேர்த்து, கூழாக அரைக்கவும்.


அரைத்த ஓட்ஸ் பேரீச்சம்பழ ஸ்மூத்தியை பரிமாறும் கப்பில் விட்டு, விரும்பினால் ஓட்ஸா மற்றும் கொக்கோவால் அலங்கரித்து பரிமாறவும்.


சுவையான ஓட்ஸ் பேரீச்சம்பழ ஸ்மூத்தி தயார்!!!


குறிப்பு: 

விரும்பினால் உங்களின் சுவைக்கேற்ப்ப பொருட்களின் அளவுகளை கூட்டிக் குறைக்கவும். 


தண்ணீர் சேர்க்க விரும்பாதவர்கள் மேலதிகமாக ½ கப் பாலைச் சேர்த்து ஸ்மூத்தி செய்யவும்.


இனிப்பு சுவையாக கூடுதலாக வேண்டும் என்றால் பேரீச்சம்பழத்தை மேலதிகமாகச் சேர்க்கவும்.

No comments:

Post a Comment