Wednesday, April 17, 2024

"கிரெம்ளின் மாளிகை" (ரஷ்ய அதிபர் மாளிகை )


கிரெம்ளின் மாளிகை !!!

க‌ம்பீர‌மாக‌ நிற்கும் கிர‌ம்ளின் மாளிகை, ஒரு கால‌த்தில் ஜார் ம‌ன்ன‌ர்க‌ளின் அர‌ண்மனையாக இருந்த‌து.
இன்றைக்கு இது ர‌ஷ்ய‌ அதிப‌ர்க‌ளின் அலுவ‌ல‌க‌ம். கால‌ம் மாறினாலும் ஆட்சி

கிரெம்லின் (Kremlin) (Russian: Кремль) என்ற உருசிய சொல் கோட்டை குறிப்பதாகும்.உருசியாவின் நாடாளுமன்றம் அமைந்துள்ள மாஸ்கோ கிரெம்லின்(Russian: Московский Кремль, Moskovskiy Kreml) பல நேரங்களில் கிரெம்லின் எனவே குறிப்பிடப்படுகிறது. இது மாஸ்கோ நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த பலப்படுத்தப்பட்ட கோட்டையாகும்.தெற்கே மாஸ்க்வா ஆறும் கிழக்கே புனித பாசில் தேவாலயமும் செஞ்சதுக்கமும் மேற்கே அலெக்சாண்டர் பூங்காவும் எதிர்நோக்கியுள்ளது.உருசியாவின் நன்கு அறியப்பட்ட கிரெம்லின்களில் ஒன்றான இதனுள் நான்கு அரண்மனைகளும் நான்கு தேவாலயங்களும் உள்ளன. கிரெம்லின் சுவர்கள் சூழ்ந்துள்ள இக்கோட்டையில் உள்ள கோபுரங்கள் கிரெம்லின் கோபுரங்கள் என அழைக்கப்படுகின்றன.இந்த கோட்டையில் உருசியாவின் அதிபர் மாளிகை அமைந்துள்ளது.
எவ்வாறு வெள்ளைமாளிகை என்பது அமெரிக்க அரசினை குறிப்பிட பயன்படுத்தப்படுகிறதோ அவ்வாறே கிரெம்லின் என்னும் சொல் சோவியத் ஒன்றியத்தின் அரசியலைக் குறிக்கும் சொல்லாக (1922–1991) விளங்கியது

தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் நிறைய சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு தமிழ் பேச்சும் எழுத்தும் நம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரசியத்திலும், இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசபடுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம் , தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக உள்ளது.

"உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ்,சமற்கிருதம். இந்த ஆறு மொழிகளில் நான்குமொழிகள் இன்று வழக்கில் இல்லை.

இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி. எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக "தமிழ் மொழி "தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை" என தமிழில் எழுதினோம்" என்று கூறுகிறார்கள்.

வெளிநாட்டினருக்குக் கூட தமிழின் அருமை பெருமை தெரிந்திருக்கிறது. நமக்குத்தான் தெரியவில்லை..

வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கூட நம் தமிழின் பெருமை தெரிந்து உள்ளது. ஆனால் நாமோ'தமிழில் எழுதுங்கள் என்பதற்கு ஒரு கருத்தரங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறோம்'

No comments:

Post a Comment