Sunday, April 21, 2024

தலை கவசத்தை எத்தனை ஆண்டுகள் பயன்படுத்தலாம்?

எத்தனை ஆண்டுகளில் மாற்றிவிட வேண்டும்?*

ஏற்கனவே எழுதியது போல உள்ளாடைகள் ,

கைகுட்டைகள் மற்றும் பலதேய்க்கும் பிரஷ் மாற்றுவது போலவே குறிப்பிட்ட இடைவெளிகளில் ஹெல்மெட் எனப்படும் தலைக்கவசத்தையும் மாற்றிவிடவேண்டும்.முக்கியமாக புகைபிடிக்கும் வழக்கமுடையவர்கள்.

அடுத்ததாக வைஸர் எனப்படும் கண்ணாடி மங்கலனாலோ ,ஸ்கிராட்ச் எனப்படும் கோடுகள் விழுந்து இரவு நேர பயணத்தில் சாலையும் முகப்பு வெளிச்சமும் பரவி பயணத்திற்கு இடையூறாக இருந்தாலோ மாற்றிவிடவேண்டும்.


அடுத்ததாக தலைக்கு மிகச்சரியாக பொருந்தாமல் லூசாக இருந்தாலும்,கன்னங்களை அழுத்திப்பிடிக்கும் பேட் பழுதடைந்தாலும் மாற்றிவிடவேண்டும்.இல்லையென்றால் உங்கள் கழுத்து நரம்புகளும் எலும்புகளும் பாதிப்படையும்.


குறைந்தபட்சம் ஐந்து வருடங்களுக்கு

ஒருமுறை இருசக்கரவாகனம் மாற்றும் பண்புகள் உடையவர்கள் நலம்....


 *தலை அடிபடாமல் விபத்துகளிலிருந்து உயிரைக் காப்பாற்றுவது  தலைக்கவசம் .அதனால் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் இயங்குவதில்லை என்பதில் மிகவும் உறுதியாக  இருப்பது சிறப்பு.*


அதே சமயம் 450 ரூபாய் ஹெல்மெட்டும் வாங்குவதில்லை.4500 ரூபாய் ,15000 ரூபாய் என்றளவுக்கும் வாங்குவதில்லை.

நல்ல தரமான ஹெல்மெட் 1200 ரூபாயில் நல்ல ப்ராண்ட் மற்றும் ISI தரமுள்ளதாக வாங்குங்கள்.


விலை கூடிய ஹெல்மெட் 4500 ரூபாய் கொடுத்து ஒன்று வாங்கும் சமயத்தில் இந்த ஹெல்மெட் வருடம் ஒன்று வாங்கலாம்.தப்பில்லை.


உயிருக்கு பாதுகாப்பு.தரம் சிறப்பானதாக இருக்கும்.பொருளாதார சிக்கனமும் கூட.


நன்றி


வணக்கம்.

No comments:

Post a Comment