Sunday, April 21, 2024

நோன்பு கஞ்சி தேவையான பொருட்கள்

1 கப் பசுமதி அரிசி 

½ கப் பயறு 

1 துண்டு கறுவாப்பட்டை 

5 ஏலக்காய் 

5 கராம்பு

5 பிரியாணிஇலை

½ தே.க வெந்தயம்

1 தக்காளி

½ தே.க மஞ்சள் 

1 மே.க இஞ்சி உள்ளி விழுது

1 பெரிய வெங்காயம்

3 பச்சைமிளகாய்

1 கைபிடி மல்லிஇலை

1 கைபிடி புதினா

10 கப் தண்ணீர்

1 கப் தேங்காய்ப்பால் 

உப்பு

எண்ணை


செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கறுவாப்ப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணிஇலை மற்றும் வெந்தயம் சேர்க்கவும். அதனுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் கலர் மாறியவுடன், தக்காளி, இஞ்சி உள்ளி விழுது, புதினா, கொத்தமல்லி மற்றும் மஞ்சள் சேர்த்து வதக்கவும். 


தக்காளி நன்கு வதங்கியதும், அரிசி மற்றும் பயரை சேர்த்து கலந்து விடவும். 8 கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். விரும்பினால் நன்கு கொதி வந்ததும், மிதமான தீயில் மூடி அவிய விடவும். அரிசி மற்றும் பயறு நன்றாக அவிந்ததும்,  மசித்து, 2 கப் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து, கலந்து விடவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். 


சுவையான நோன்பு கஞ்சி தயார்!


குறிப்பு: 

உங்கள் சுவைக்கேற்ப பொருட்களின் அளவுகளை கூட்டிக் குறைக்கவும். 


அசைவமாக செய்வதென்றால் கொத்துக்கறி சேர்த்து செய்யவும்.

No comments:

Post a Comment