🍁 சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் எட்டாம் தேதி அகில உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. உலகில் பல்வேறு நாடுகளில் அந்த தினம் விடுமுறையாகும். அமெரிக்கா சோசலிஸ்ட் கட்சி 1909ஆம் ஆண்டு பெண்களுக்கு நாட்டில் அரசியல் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பிப்ரவரி 28ஆம் தேதியை பெண்கள் தினமாக அறிவித்தது. 1910ஆம் ஆண்டு கோபன் கோஹன் நகரில் நடந்த அகில உலக மகளிர் மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது எடுக்கப்பட்ட முடிவின் படி 1911 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதி உலகம் எங்கும் மகளிர் தினம் கொண்டாட முடிவு செய்து கொண்டாடப்பட்டு வருகிறது.*
*🎻 எந்த ஒரு வெற்றிக்கும் கொண்டாட்டத்துக்கும் பின்னால் யாரோ ஒருவரின் வலியும், வேதனையும், போராட்டமும் நிச்சயம் இருக்கும் சர்வதேச பெண்கள் தினமாக மார்ச் எட்டாம் தேதி பின்னணியில் இவையெல்லாம் அடங்கியுள்ளது. பணிக்கு செல்லும் பெண்களுக்கு எதிரான வன்முறை கொடுமைகளும், பாரபட்ச அணுகுமுறையும் பாலியல் தொந்தரவுகளும் சென்ற நூற்றாண்டிலேயே இருந்திருக்கிறது. 12 மணி நேர வேலை செய்கிற ஆணை விடக் குறைந்த கூலி பாலியல் தொல்லை போன்ற அநீதிகளை எதிர்த்து 1857 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதி வீதியில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர். துணி ஆலைகளில் வேலை பார்த்தப் பெண்கள் முதலாளித்துவ ஆணாதிக்க கரங்களால் இந்தப் போராட்டம் அப்படியே அமுக்கப்பட்டாலும், 53 ஆண்டுகள் கழித்து மீண்டும் கிளர்ந்து எழுந்தது. பெண்களுக்கான வாக்குரிமை, குழந்தை தொழிலாளர் மீட்பு எனக் கூடுதல் கோரிக்கைகளுடன் 1910 ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டின் கோபன் கோஹன் நகரில் நடந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேலான சோசியலிசப் பெண்கள் கலந்து கொண்டார்கள். ஜெர்மனியின் பொதுவுடமை கட்சியின் தலைவர்களில் ஒருவரான கிளாரா செட் கின் எட்டாம் தேதி பெண்கள் தினமாக கொண்டாட வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்பினார். இதன் விளைவாக 1911 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் நாள் சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டது . அதே மாதம் 25ஆம் தேதி நியூயார்க்கின் ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 140 பெண்கள் கருகி உயிரிழக்க காரணம் பணியிடத்து பாதுகாப்பின்மை எனத் தெரியவந்தது மீண்டும் போராட்டம் பெண்கள் நலன் குறித்து கூக்குரல்கள் எழுந்தன.*
*🎻1917 ஆம் ஆண்டு இரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் மற்றும் ஒரு போராட்டம் நடந்தது .அதில் அலெக்ஸாண்ட்ரா கொல்லோண்டாய் என்றப் பெண்ணில்வாதி கலந்துகொண்டு மார்ச்8 பெண்கள் தினமாக அறிவித்து அன்றைய தினம் விடுமுறையும் அளிக்கப்பட வேண்டும் என குரல் எழுப்பினார். தொடர்ந்து நீண்ட நெடிய போராட்டங்களின் இறுதியில் 1975 ஆம் ஆண்டு ஐநா சபை மார்ச் எட்டாம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக அறிவித்தது. அது இன்று வரை தொடர்கிறது.*
🎈🎈🎈🎈🎈🎈

No comments:
Post a Comment