Sunday, May 5, 2024

செய்தித் துளிகள் - 05.05.2024 (ஞாயிற்றுக்கிழமை)


*செய்தி துளிகள்*

🌅🌅கடுமையான வெப்பம் வீசக்கூடிய நிலையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது

👉அரசு உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவொளி எச்சரிக்கை

👉அரசின் உத்தரவை மீறி பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக புகார்

👉மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுரை

👉பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் வெள்ளிக்கிழமை  எச்சரிக்கை விடுத்த நிலையில், தற்போது இயக்குனர் அறிக்கை.

🌅🌅பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

👉மே 20 ஆம் தேதிக்கு பிறகு சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

அதேநேரம் தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி நாளை 6 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

🌅🌅ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதோர் பணிசார் கோரிக்கைகளை EMIS வாயிலாக விண்ணப்பிக்க EMIS இணையதளத்தில் சிறப்பு வசதி ஏற்படுத்திட மாநிலத் திட்ட இயக்குநருக்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் கடிதம்.

🌅🌅மார்ச் / ஏப்ரல் - 2024ல் நடைபெற்ற பொதுத் தேர்வு வினா வங்கி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு.

🌅🌅 SSLC தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: துணை தேர்வுக்கு தயார்படுத்த நடவடிக்கை

🌅🌅தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 100 சதவீதம் இணைய வசதி தயார்: பள்ளிக்கல்வித் துறை

🌅🌅பணிக்கொடை (Gratuity) ரூ.25 இலட்சம் ஆக உயர்வு

🌅🌅விஐடி பல்கலை. பி.டெக். நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு.

🌅🌅வட்டார வள மைய பயிற்றுநர்களுக்கு இந்த மாதம் கலந்தாய்வு - உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்.

🌅🌅அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் வரும் 15ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்குகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வு அட்டவணையை அண்ணாபல்கலை தேர்வு கட்டுப்பாட்டுத்துறை வெளியிட்டுள்ளது.

🌅🌅5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு மே 10 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலை அறிவித்துள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலையுடன் இணைவுபெற்ற கல்லூரிகள், சீர்மிகு சட்ட பள்ளிகளில் 5 ஆண்டு படிப்புக்கு விண்ணப்பம் மே 10 ல் தொடங்கவுள்ளது. அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளம் www.tndalu.ac.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். மூன்றாண்டு சட்டப்படிப்பு, முதுநிலை சட்ட மேற்படிப்பு சேர்க்கை தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

🌅🌅2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று தொடக்கம்:-

👉2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வை ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம்,இந்தி, மலையாளம் உட்பட 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

🌅🌅நீட் தேர்வு : மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுரை:-

👉இன்று நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுரை வழங்கி உள்ளது. மாணவர்களின் குடிநீர் பாட்டில் தெளிவாக தெரியக்கூடியவையாக இருக்க வேண்டும் என்றும் மாணவர்கள் எழுதிப்பார்க்க வெள்ளை காகிதம் வழங்கப்படாது, புக்லெட்டிலேயே எழுதிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌅🌅இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் விடுதிகள், ஓட்டல்கள் மூடப்படும் என கொடைக்கானல் ஹோட்டல் சங்கத்தினர் அறிவிப்பு

🌅🌅சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ்- வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட நீலகிரி ஆட்சியர்

👉ஊட்டி செல்வோர் கவனத்திற்கு.

👉ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும்.

👉ஒரு வாகனத்திற்கு ஒரு இ-பாஸ் மட்டுமே போதுமானது.

👉இந்த நடைமுறை மே 7 முதல் மே 30 வரை சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது.

👉அரசு பேருந்தில் நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியமில்லைவெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தும், உள்நாட்டு மக்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்தும் இபாஸ் பெற்றுக் கொள்ளலாம்.

-அருணா, நீலகிரி மாவட்ட ஆட்சியர்.

🌅🌅தமிழக மின் ஆளுமை அமைப்பு, serviceonline.gov.in/tamilnadu என்ற இந்த இணையதள பக்கம் அல்லது tnega.tn.gov.in என்ற இந்த இரண்டாவது இணையதள பக்கங்களில் ஏதேனும் ஒன்றில் கொடைக்கானல் மற்றும் ஊட்டி செல்ல தேவையான இ-பாஸ் பதிவு சேவையை அறிமுகம் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

👉கொடைக்கானல் மற்றும் ஊட்டி இ-பாஸ் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை?

👉ஆதார் அட்டை (Aadhar Card)

👉ரேஷன் அட்டை (Ration Card)

👉டிரைவிங் லைஸன்ஸ் (Driving License)

👉பாஸ்போர்ட் (Passport)

👉வாகன விபரங்கள் (Vehicle details)

👉பயண தேதி (Trip days)

👉எத்தனை நாட்கள் தங்கப்போகிறீர்கள் என்ற விபரம் (How long you stay)

🌅🌅ஊட்டிக்கு சிறப்பு பேருந்து:

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து உதகைக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படும் 

-தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

🌅🌅டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது

-ஷேன் வாட்சன், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

🌅🌅திருச்செந்தூர் செந்திலாண்டவர் திருக்கோவிலில் மே 22 ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா

🌅🌅சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,600க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ரூ.86.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

🌅🌅யூடியூபர் சவுக்கு சங்கர் கைது.

👉பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து சமூக வலைதளங்களில் தவறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சங்கரை, கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅

🌹🌹கோடைக் காலத்தில் தயிர் தினமும் சாப்பிடவே கூடாது..


🌹👉என்ன காரணம் தெரியுமா.?


👉 “கோடை காலத்தில் தயிர் சாப்பிட்டால் நம் உடலுக்கு நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என இந்தியாவின் பண்டைய மருத்துவ முறையான நம் தமிழ் மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. 

👉ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் வாத, பித்த, கபம் ஆகியவற்றை பொறுத்து ஒருவருக் கொருவர் இது மாறுபடும்”

👉தயிரில் கபமும் பித்தமும் அதிகமாகவும் வாதம் குறைவாகவும் இருக்கிறது.ஆகவே எந்தவொரு பருவத்திலும் தயிர் சாப்பிடும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

👉தயிர் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகளை தருகிறது. ஆனால் இதை தினசரி சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஏன் அப்படி கூறுகிறார்கள்


🌹👉கோடை காலத்தில்….

ஏன் காட்டாயம் தயிர் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள்…


👉கோடை காலத்தில் நமது வயிற்றை ஆரோக்கியமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க, உணவில் தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள் என மருத்துவர்கள் அறிவுறுத்து கிறார்கள் தயிரில் அதிகளவு ப்ரோபையாடிக்ஸ் மற்றும் ஊட்டச்சத்துகள் உள்ளன புரதம், கால்சியம், விட்டமின் B மற்றும் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் தயிரில் உள்ளன. 

சிலருக்கு தயிர் சாப்பிட்டால் முகப்பரு, தோல் அலர்ஜி, செரிமானப் பிரச்சனைகள், உடல் சூடாவது போனறவை ஏற்படுவதாக கூறுவதை கேட்டிருப்போம். தயிர் சாப்பிட்டால் உடல் குளிர்ர்சியாகும் என்றுதான் நாம் நினைத்திருப்போம்.

ஆனால் அப்படியல்ல, உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மைகள் தான் அதில் உள்ளன. இதை பலரும் புரிந்து கொள்வதில்லை. 


🌹👉ஏன் தயிர் சாப்பிட்டால் நம் உடல் சூடாகிறது


👉தயிர் சாப்பிட்டால் குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் நாமும் அதை குழந்தைப்பருவத்தில் இருந்தே சாப்பிட்டு வருகிறோம். ஆனால், புளிப்பு சுவையும் சூட்டை அதிகரிக்கும் தன்மைகளையும் கொண்ட தயிர் செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் ஆகும் என ஆயுர்வேதம் கூறுகிறது.

👉தயிரில் கபமும் பித்தமும் அதிகமாகவும் வாதம் குறைவாகவும் இருக்கிறது. ஆகவே எந்தவொரு பருவத்திலும் தயிர் சாப்பிடும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். கோடை காலத்தில் தயிர் சாப்பிடும் போது சிலருக்கு உடல் சூட்டை அதிகரிப்பதற்கு இதுவே காரணமாகும். அதுமட்டுமல்லாமல், தயிர் சாப்பிட்டால் நல்லது என நினைத்து, அதிகமாக சாப்பிடும் போதுதான் உங்களுக்கு பருக்களும் வேறு பல பிரச்சனைகளும் வரும் எனினும் தயிரை சரியான முறையில் சாப்பிட்டால் உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.


🌹👉தயிரை எப்படி சாப்பிட வேண்டும்..


👉கோடை காலங்களில் தயிரை தினமும் சாப்பிட்டால் உடல் சூடாகும். அதற்குப் பதிலாக நாம் தினசரி மோரை அருந்தலாம். அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. மோரில் உப்பு, மிளகு, சீரகம் சேர்த்து பருகுவது உடலுக்கு மிகவும் நல்லது. தயிரோடு தண்ணீரை சேர்க்கையில், அதிலிருக்கும் வெப்ப தன்மை சமனாகிறது. தண்ணீர் சூட்டை குறைப்பதோடு தயிரின் குளிர்ச்சியையும் அதிகரிக்கிறது. ஆகையால் கோடை காலத்தில் தயிர் சாப்பிட வேண்டும் என நினைத்தால், தயிரில் தண்ணீர் கலந்து நன்றாக கலக்கி மோராக அருந்துங்கள். இது உங்கள் உடலுக்கு தேவையான குளிர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் தரும்.

👉இன்னொரு முக்கியமான விஷயம், தயிரை சூடாக்க கூடாது. அப்படி சூடாக்கினால் அதன் தன்மையை இழந்துவிடும். இதில் கப தோஷம் அதிகமாக இருப்பதால், உடல் பருமனாக இருப்பவர்கள் தயிர் சாப்பிடுவதை தவிர்க்கலாம். அதேப்போல், தயிரோடு பழங்களை சேர்க்க கூடாது என ஆராய்ச்சி கூறுகிறது. அப்படி சேர்த்தால் அவை பொருந்தாத கலவையாக மாறிவிடும்.

👉நீர் சுருக்கி, மோர் பெருக்கி, நெய்யுருக்கி உண்பார்தம் பேருரைக் கின்றோமே பிணி

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment