Tuesday, May 14, 2024

கொத்தமல்லி - தினம் ஒரு மூலிகை


*கொத்தமல்லி*.   மனமுள்ள பற்கள் உள்ள இலையையும் சிறிய வெண்ணிற மலர்களையும் சமையலில் மனமூட்டியாக இதன் விதை தனியா எனப்படும் இலை விதை மருத்துவ பயன் உடையது சிறுநீர் பெருக்குதல் உடல் வெப்பம் மிகுத்தல் வயிற்று வாய்வு அகற்றல் செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவ பண்புகள் உடையது ஐந்து கிராம் கொத்தமல்லி விதை தனியா இடித்து அரை லிட்டர் நீரில் இட்டு 150 மில்லியாக காய்ச்சி வடிகட்டி பால் சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம் மிகு தாகம் நாவறட்சி மயக்கம் ரத்த கழிச்சல் தெரியாமையால் ஏற்படும் வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும் விதை 100 கிராம் நெல்லி வற்றல் சந்தனம் வகைக்கு 50 கிராம் பொடி செய்து அதில் 200 கிராம் சர்க்கரை கலந்து காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர தலைச்சுற்றல் நெஞ்சு எரிவு வாய் நீரூறல் சுவையின்மை ஆகியவை தீரும்.  

கொத்தமல்லி 300 கிராம் சீரகம் அதிமதுரம் கிராம்பு கருஞ்சீரகம் சன்ன லவங்கப்பட்டை சதகுப்பை வகைக்கு 50 கிராம் வறுப்பாய் வறுத்து பொடித்து சலித்து 600 கிராம் கற்கண்டு பொடி கலந்து அதாவது கொத்தமல்லி சூரணம் காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் சூடு குளிர் காய்ச்சல் பைத்தியம் வாந்தி விக்கல் நாவறட்சி தாது இழப்பு பெரிய அறிவு நெஞ்சு வலி ஆகியவை தீரும் நீடித்து கொடுத்து வர தலை நோய்கள் கண்ணில் நீர் வடிதல் பார்வை மந்தம் இடுப்பு வலி கல்லடைப்பு வலிப்பு வாய் கோணல் வாய் குளறல் தீரும் மன வலிமை பெறும் நன்றி.

நன்றி.

No comments:

Post a Comment