*நாகப்பட்டினம் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திரு. எம் செல்வராசு (67) அவர்கள் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.*
இவர் 1989 ,1996 ,1998, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நாகை நாடாளுமன்ற தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் இறுதி ஊர்வலம் அவரின் சொந்த ஊரான கோட்டூர் ஒன்றியம் சித்தமல்லியில் நாளை 14. 5 .2024 காலை நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பொறியியல் சேர்க்கை 95,000 மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.
🌅🌅வணிகவியல், ஏஐ பாடப் பிரிவுகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்.
🌅🌅ஆசிரியர்களின் விண்ணப்பங்களை கிடப்பில் போடும் அமைச்சு பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவு.(நாளிதழ் செய்தி)
🌅🌅நாளை 11 ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியாகிறது.
🌅🌅அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு அனுமதி - பள்ளிக்கல்வித்துறை 🌅🌅தொடக்க, நடுநிலை, உயர் நிலை & மேல்நிலை அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
🌅🌅243 அரசாணையை ரத்து செய்தல் பதவி உயர்வு வழங்கிய பின்னர் பணி நிரவல் கலந்தாய்வு நடத்த வேண்டும்... அது வரை ஆசிரியர் மாறுதல் கலந்தாய் வை ஒத்தி வைக்க வேண்டும்... என டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் & தமிழ்நாடு முதலமைச்சர் , பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் , & கல்வித்துறை துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
🌅🌅IFHRMS வலைதளத்தில் மாற்றுத்திறனாளி ஊழியரின் விவரங்களை பதிவு செய்யும் வழிமுறை வெளியீடு.
🌅🌅ஆசிரியர்கள் பொது இடமாறுதலுக்கு கட்டுப்பாடு
👉பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
👉அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல் நடக்க உள்ளது.
👉இதற்கான விண்ணப்பங்களை மே 13 - 17 வரை எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும். மாறுதல் ஆணை பெற்றவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது என்றும் கூறப்பட்டுள்ளது. 🌅🌅பி.இ., பி.டெக், கலை-அறிவியல் படிப்புகள் போட்டி போட்டு விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகள்
🌅🌅TNSET தேர்வு 2024க்கான விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு - மதிப்பெண்கள் தளர்வு - பதிவாளர் அறிவிப்பு
🌅🌅மத்தியில் ஆட்சி மாறுவதே நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
🌅🌅வந்தவாசியில் தனது மகனுடன் சேர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தாய் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
🌅🌅தமிழ்நாட்டில் சீசன் தொடங்கியது முதல் காற்றாலை மூலம் தினமும் 2000 மெகாவாட் மின் உற்பத்தி - அதிகாரிகள் தகவல்
🌅🌅“விஜயகாந்துக்கு காலம் தாழ்ந்து கிடைத்தாலும் விருதினை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். விருது வழங்கிய மத்திய அரசுக்கி நன்றி” என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
🌅🌅கேரளா மாநிலத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் மக்களுக்கு நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
🌅🌅96 தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை 4ம் கட்ட மக்களவை தேர்தல்; ஆந்திரா,ஒடிசா சட்டப்பேரவைக்கு சேர்த்து வாக்குப்பதிவு நடக்கிறது.
🌅🌅ஐப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு
🌅🌅திருநெல்வேலி மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்குரிய பிஎஸ்-4 எஞ்சிய சோதனை வெற்றி
🌅🌅போலந்தில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா.
🌅🌅பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் மற்றும் பாக். பாதுகாப்புப் படை வீரர்கள் இடையே கடும் மோதல்
இதுவரை பொதுமக்கள் தரப்பில் 40 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், ஒரு பாகிஸ்தானிய வீரர் உயிரிழப்பு
பணவீக்கம், வரி, மின் கட்டணம் மற்றும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
🌅🌅'முத்திரைக் கட்டணங்களை உயர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்'
'சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி வழிகாட்டு மதிப்பையும் முன்பிருந்த நிலைக்குத் தொடர வேண்டும்'
-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
🌅🌅சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவு.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியது உட்பட 7 வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது.
🌅🌅“கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் பக்கவிளைவுகள் இல்லை”
👉எந்த தடுப்பூசியாக இருந்தாலும் அவரவர் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை பொறுத்து தான் பின் விளைவுகள் இருக்கும்
👉கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் யாருக்கும் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. யாரும் பதற்றத்துடன் இருக்க வேண்டாம்
👉நோய் எதிர்ப்பு சக்தி தங்கள் உடலில் குறைவாகாத வண்ணம் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
👉காலையில் எழுந்து நடப்பது உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment