*கோங்கிலவு*. இலவம் பஞ்சு மரவகை சார்ந்தது இந்த மரத்தில் கூம்பு வடிவ முட்கள் உடையது செந்நிற மலர்களையும் வெள்ளை நிற பஞ்சு உடைய வழுவழுப்பான உருண்டை வடிவ காய்கள் உடையது ஆற்றங்கரை காடுகளில் தானே வளரும் இதன் இலை பூ விதை பட்டை பிசின் பஞ்சு வேர் ஆகியவை மருத்துவ பயனுடையது இலை அக அயார்சியை தனிக்கும் பூ சிறுநீர் பெருக்கி மலச்சிக்கல் அகற்றும் விதை குருதிப் போக்கை அடக்கும் காமம் பெருக்கும் பட்டை சிறுநீர் பெருகும் வேர் உடல் பலத்தையும் வெப்பத்தையும் மிகுக்கும் 20 இலைகளை அரைத்து பாலில் கலக்கி வடிகட்டி கொடுக்க வாத கடுப்பு தீரும் 20 கிராம் பூவை சிதைத்து அரை லிட்டர் நீரில் இட்டு 125 மில்லியாக காய்ச்சி வடிகட்டி குடிக்க மலச்சிக்கல் அகழும் சிறுநீர் பெருகும் 4 கிராம் விதை 2 சீரகம் ஒரு கிராம் வால்மிளகு மென்மையாய் அரைத்து 250 மில்லி மோரில் கலைக்கு காலையில் மட்டும் பருகிவர நீர் கடுப்பு நீர் சுருக்கு சிறுநீரில் ரத்தம் சீல் போதல் குணமாகும் 20 கிராம் பட்டையை பால் அல்லது இளநீர் விட்டு அரைத்து பிழிந்து காலை மாலை கொடுத்து வர வெள்ளை ரத்த வெள்ளை சீழ் போதல் குணமாகும்.
No comments:
Post a Comment