Saturday, May 11, 2024

கீழாநெல்லி - தினம் ஒரு மூலிகை

 


*தினம் ஒரு மூலிகை* *கீழாநெல்லி* மாற்றடுக்கில் இரு சீராய் அமைந்த சிறு இலைகளை உடைய குறும் செடி இலை கொத்தின் அடிப்பிறத்தில் கீழ் நோக்கிய காய்கள் இருக்கும் சிறுநீர் பெருக்கியாகவும் வெட்பு அகற்றியாகவும் வீக்கம் கட்டி ஆகியவற்றை கரைத்து நரம்பு சதை ஆகியவற்றை சுருங்க செய்யும் மருந்தாக பயன்படுகிறது சமூகம் முந்நூறு கிராம் நாலு மிளகுடன் சிதைத்து இரண்டு குவளை நீரில் போட்டு ஒரு குவளையாக காய்ச்சி 3 வேலையாக குடித்து வர சூடு ஜுரம் தேக எரிச்சல் தீரும் இலையில் உப்பு சேர்த்து அரைத்து தடவி குளித்து வர சொறி சிரங்கு நமைச்சல் தீரும் இலை மூக்கிரட்டை இலை பொன்னாங்கண்ணி இலை சம அளவு அரைத்து கயச்சிக்காய் அளவு மோரில் கலக்கி 45 நாட்கள் உட்கொள்ள மாலைக்கண் பார்வை மங்கள் தீரும் கீழாநெல்லி சாறு உத்தாமணி சாறு குப்பைமேனி சாறு சமன் கலந்து நல்லெண்ணையில் எரித்து நசியமிட பினிஷம் ஓயாத தலைவலி நீர் வடிதல் ஆகியவை தீரும் ஓர் இதழ் தாமரையுடன் சமன் கீழாநெல்லி சமூலம் சேர்த்தறைக்கு நெல்லிக்காய் அளவு அதிகாலை 45 நாட்கள் சாப்பிட வாலிப வயோதிகம் நீங்கும்.
 நன்றி.

No comments:

Post a Comment