Saturday, May 11, 2024

நான் படிக்கிற காலத்தில் 10த் ரிசல்ட்

 நான் படிக்கிற காலத்தில் 10த் ரிசல்ட் ஆகட்டும் பிளஸ் டூ ரிசல்ட் ஆகட்டும் மாலை மலர் மற்றும் மாலை முரசு பேப்பர்ல தான் வரும்,

 அதுவும் சாயங்கால பேப்பருக்காக திருத்துறைப்பூண்டி சென்று வெயிட் பண்ணிட்டு இருப்போம். 


பஸ்ஸ்டாண்ட் ஒரு பெட்டி கடையில் விற்பனை செய்வார்கள் அதை வாங்கி நம்ம கல்வி மாவட்டத்தை தேடி அது நம் நம்பர் தேடி கண்டுபிடிப்பதற்கு எண். நம் இதயத்துடிப்பு அவ்வளவு வேகத்தில் துடிக்கும். இதுல பெரும் கொடுமை பேப்பர் காரங்க தவறுதலாக சில எண்களை விட்டு விடுவாங்க...

அடுத்த நாள் தினதந்தி மற்றும் தினமலர் பேப்பரில் வரும்.


ரிசல்ட் வந்த அன்னைக்கே பள்ளி சார்பாக எஸ்.பி சார் இல்ல கே.டி.எம் சார், வி.கே  சார் இரண்டு பேர் நாகப்பட்டினம் சென்று ரிசல்ட் காப்பி வாங்கி வந்து மதியம் 3 மணிக்கு போர்டுல ஒட்டிடுவாங்க. பின்னர் மதிப்பெண் தெரிய எப்படியும் 4 மணி ஆகிவிடும் 


அந்த ரிசல்ட்டை பார்ப்பதற்கு ஸ்கூலுக்கு காலையில் இருந்து ஒரு கூட்டம் வெயிட் பண்ணிட்டு இருக்கும். 


ரிசல்ட்  பாஸ் ஆனவங்க லிஸ்ட் மேலையும் பெயில் ஆனவங்களிலிருந்து லிஸ்ட் கீழேயும் டைப் பண்ணி நோட்டீஸ் போர்டில் ஓட்டுவாங்க.


நான் ரொம்பவெல்லாம் சிரமப்பட மாட்டேன்.

ஏன்னா நான் எல்லாம் ரொம்ப ரொம்ப ஆவரேஜ் ஸ்டூடண்ட். 

அதனால பெயில் ஆனவங்க லிஸ்ட்ல என் பேர் இருக்குதான்னு பார்ப்பேன் இல்லையா அப்பாடா நான் பாஸ் ஆயிட்டேன். 


இதுதான் எங்களுடைய பத்தாம் வகுப்பு தேர்வு மற்றும் +2  தேர்வு தேர்ச்சி வரலாறு.


ஆன இப்போது 


9.25 க்கு தேர்வு முடிவுகள் வெளியீடு....

No comments:

Post a Comment