****
நாற் பட்டையான தண்டுகளில் அடுக்கான முழுமையான இலைகளை உடைய மிக சிறு செடி பூக்கள் இலை கோணங்களில் காணப்படும் விளைநிலங்களில் காணப்படும் இலை வேர் மருத்துவ பயன் உடையது இலை சாறுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து பதமுறகாய்ச்சி தலை முழுகி வர தலை மயிர் உதிர்வது நிற்கும் மண்டை கொதிப்பு தனியும் மயிர் செழித்து வளரும் கரப்பான் புழுவெட்டு காலஞ்ச படை ஆகியவை தீரும் வேரை நிழலில் உலர்த்தி பொடித்து சமன் கற்கண்டு பொடி கலந்து காலை மாலை அரை தேக்கரண்டி நெய்யில் சாப்பிட்டு வர எலும்பு நரம்பு தசை ஆகியவை வலுப்படும் உடல் உறுதியாக இருக்கும் இலை பொடி வில்வ இலை பொடி பனங்கற்கண்டு மூன்றையும் சம அளவு எடுத்து தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் 40 நாளில் உடலில் மாற்றங்கள் நிகழ்வதை உணரலாம் சிறுநீர் எரிச்சல் குணமாக கோபுரம் தாங்கி சிறு பிழை நெருஞ்சில் வெள்ளெறி விதை நிழலில் உலர்த்தி ஒன்று இரண்டாக இடித்து வைத்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் இட்டு கொதிக்க வைத்து 500 மில்லியாக காய்ச்சி வடிகட்டி காலை மாலை உணவுக்கு முன் அருந்த சிறுநீர் நன்கு வெளியேறும் எரிச்சல் குணமாகும்.
கோபுரம் தாங்கி செடியை சாப நிவர்த்தி செய்து காப்புக் கட்டி எலுமிச்சை பழம் பலி கொடுத்து பொங்கல் நிவேதனம் செய்து தூப தீபம் காட்டி பிடுங்கி வைத்துக்கொண்டு அதன் இலையை வாயில் போட்டு மென்று கொண்டு கண்ணாடியை கற்கண்டு போல கடித்து துப்பலாம் கண்ணாடியின் சிதல்கள் வாயை கிழிக்காது மற்றும் பாம்பு தேள் பூச்சிகள் கடித்த இடத்தில் மேல் பூச்சாக போடும்போது விஷம் தனியும் கடிவாயில் பூசினால் வலி வீக்கம் குறையும் இலையை அரைத்து நெற்றியில் பற்று போடும்போது தலைவலி சரியாகும் சித்தர்கள் அருளிய காயகற்ப மூலிகைகளில் இதற்கென சிறப்பான ஒரு இடம் உண்டு கோபுரம் தாங்கிக்கு மற்றும் கட்டிடம் கட்டிடங்களில் இடுக்குகளில் பாறை இடுக்குகள் புதர்கள் ஆகிய இடங்களில் வளரும் செடி இதில் எண்ணற்ற வைட்டமின்கள் சத்துக்கள் அடங்கியுள்ளன நன்றி.
No comments:
Post a Comment