முதலிடத்தை பிடித்த தென்மாவட்டங்கள்
🌹👉10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சியில் மாநிலத்தில் முதல் இடத்தை மத்திய மாவட்டமான அரியலூர் 97.31% பிடித்திருந்தாலும்,
🌹👉டாப் 10 மாவட்டங்களில் தென் மாவட்டங்களே முதலிடத்தை பிடித்துள்ளன.
சிவகங்கை 97.02%,
ராமநாதபுரம் 96.36%,
குமரி 96.24%,
விருதுநகர் 95.14%,
தூத்துக்குடி 94.39%
தேர்ச்சி பெற்றுள்ளன.
🌹👉தொடர்ந்து,
திருச்சி 95.23%,
பெரம்பலூர் 94.77%
ஆகிய மத்திய மாவட்டங்கள் மாநில அளவில் 2ஆவது இடத்திலும் உள்ளன.
📕📘10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
👉தேர்ச்சி பெற்றவர்கள் - 8,18,743 (91.55%)
👉மாணவியர் - 4,22,591 (94.53 %) தேர்ச்சி
👉மாணவர்கள் - 3,96,152 (88.58%) தேர்ச்சி
👉இந்தாண்டு மாணவர்களை விட மாணவியர் 5.95 % அதிகம் தேர்ச்சி
👉10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு அறிவிப்பு
👉ஜூலை 2ஆம் தேதி முதல் துணைத்தேர்வு - தேர்வுத்துறை
👉10ம் வகுப்பு மறு கூட்டலுக்கு வரும் 15 முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
👉விடைத்தாள் நகல் பெறவும் வரும் 15 முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
👉10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மே 13 முதல் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
👉10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 13-ம் தேதி முதல் வழங்கப்படும்.
📕📘நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பீகாரில் பெற்றோர், தேர்வு எழுதிய மாணவர்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே ராஜஸ்தானில் 4 பேர், டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கைது நடவடிக்கை நீடித்து வருகிறது.
📕📘தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மே 15ஆம் தேதி தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து
பொறியியல் தேர்வுகள் ஜூன் 6-ஆம் தேதியில் இருந்து நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
📕📘"பண வசதி பெற்றவர்கள் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்ற நிலையை நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ளது" - கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கருத்து.
📕📘8ஆம் வகுப்பு / 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) சேர நேற்று (10.05.2024) முதல் விண்ணப்பிக்கலாம்.
📕📘மாணவர்களுக்கு ஸ்டாலின் பாராட்டு! - குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
📕📘பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 24-இல் தொடக்கம்.
📕📘ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்கானது வருகிற 09-07-2024 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது
👉20-05-2024 முதல் 07-07-2024 வரை 48 நாட்கள் உச்சநீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை ஆகும்.
📕📘SSLC - தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல், விடைத்தாள் நகல் பெறுதல் மற்றும் கட்டணம் செலுத்துதல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
📕📘5 ஆண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகம் அறிவிப்பு
📕📘பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு: இதுவரை 56,515 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
📕📘ஐபிஎல் தொடரில் இருந்து பஞ்சாப் அணி வெளியேற்றம்
12 போட்டிகளில் ஆடியுள்ள பஞ்சாப் அணி 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
📕📘சென்னையில் அட்சய திரிதியை முன்னிட்டு ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, சவரண் ரூ.53,280க்கும், கிராம் ரூ.6,660க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை ரூ.1.30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.90க்கு விற்பனையாகிறது.
📕📘சென்னையில் நாய் கடித்து படுகாயமடைந்த சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்தது - நலமுடன் இருப்பதாக தகவல்
📕📘2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் வாபஸ் பெற்றனர்
📕📘2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை நடைபெறும் என அறிவிப்பு
📕📘இந்திய உள்விவகாரங்களில் தலையிட அமெரிக்கா முயற்சி செய்ததாக ரஷ்யா குற்றச்சாட்டு
📕📘இந்தியா உட்பட 7 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு இலவச சுற்றுலா விசாக்கள் வழங்கப்படும் என இலங்கை அரசு மீண்டும் அறிவிப்பு
📕📘டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க வனிது ஹசரங்கா தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம்.
📕📘23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை திரும்ப பெற்றது தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை.
மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி தான் தமிழக அரசு இதனை அறிவித்தது.
மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதால் உத்தரவை திரும்ப பெறப்பட்டது.
📕📘நீலகிரிக்கு சுற்றுலா வரும் மக்களிடையே இ-பாஸ் தொடர்பான அச்சம் தேவையில்லை என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். வீட்டிலிருந்து உதகை புறப்படும்போது கூட செல்போனில் E-pass பதிவுசெய்தால் 2 நிமிடத்தில் இ-பாஸ் வழங்கப்படும்
📕📘டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
📕📘'சர்வாதிகாரத்திடமிருந்து நாட்டை நாம் காப்பாற்றவேண்டும்' - திஹார் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்கள் மத்தியில் உரை!
📕📘பிரபல யூ-டியூபர் சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையின் முடிவில், கஞ்சா, லேப்டாப், வீடியோ டேப், செல்போன் மற்றும் 2 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது; வீடு மற்றும் அலுவலகத்திற்கு CBCID காவல்துறை சீல் வைப்பு
📕📘சவுக்கு சங்கரை கண்டித்து செருப்பு, துடைப்பங்களை ஏந்தி பெண்கள் போராட்டம்!
சவுக்கு சங்கரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது காவல்துறை வாகனத்தை சூழ்ந்துகொண்டு செருப்பு, துடைப்பங்களை ஏந்தி பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
📕📘சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை?: ஐகோர்ட்வி கேள்
📕📘அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்: கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
📕📘டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையருடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு.
📕📘📕📘📕📘📕📘📕📘
🌹🌹தூக்கம்:-
👉6 முதல் 8 மணி நேர தூக்கம் என்பது அனைவருக்கும் அத்தியாவசியமானது .
👉முன்னோர்கள் 8 - 9 மணிக்கு தூங்க சென்று காலை 4 மணிக்கு எழும் பழக்கத்தை உடையவர்கள். இந்த தலைமுறை தான் உறக்கத்திற்கான ஒழுக்கம் இல்லாமல் ஆந்தை மனிதர்கள் ஆகிவிட்டோம்.
👉ஸ்டார் பக்ஸின் Howard Schultz, Michelle Obama, Apple நிறுவனத்தின் Tim Cook என சாதனையாளர்கள் காலை 5 மணிக்கு முன் விழிப்பவர்கள். வாழ்வில் அடுத்த கட்டம் நோக்கி செல்ல வேண்டும் என்றால் காலை சூர்யோதத்திற்கு முன் எழுந்திருங்க தான் வேண்டும்.
👉காலை 4 முதல் 5 மணிக்கு எழுந்திருக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். குறைந்தபட்சம் 5:30 மணிக்காவது எழுதிட வேண்டும்.
👉அன்றாட வேலைகளை சுறுசுறுப்பாக செய்யவும் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் சூர்யோதத்திற்கு முன்பு எழுந்து கொள்ள வேண்டும்.
👉விடுமுறை நாட்களிலும் இந்த வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
👉4 முதல் 6 மணி வரை எந்த கவனச் சிதறல் இல்லாமல் உங்கள் வேலைகளை செய்வதற்கு ஏற்ற நேரம். மூளை புத்துணர்வுடன் இயங்குவதால் கிரியேட்டிவிட்டி, வேலையில் புது யுக்திகளை கட்டமைக்க ஏற்ற நேரம். முதல் 20 நிமிடங்கள் உடற்பயிற்சியுடன் ஒரு நாளை ஆரம்பிக்க வேண்டும்.
👉தூங்குவதற்கான நேரத்தை திட்டமிட்டு ஒரு வழக்கத்தை உருவாக்கி பின்பற்றினால் காலை குறித்த நேரத்தில் எழுந்திருக்கும் பழக்கம் உருவாகும்.
👉தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மொபைல் தொலைக்காட்சி லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்துவிட வேண்டும். பளீர் வெளிச்சத்தை பார்க்கும் மூளை விழித்திருப்பதற்கான நேரம் என நினைத்துவிடும். இதனால் பலர் தூக்கம் இன்றி தவிக்கிறார்கள்
👉மாலை 6 மணி முதலே மொபைலை நைட் மோடுக்கு மாற்றி விடுதல் நல்லது.
👉தூங்குவதற்கு முன்பு குறித்து புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். அல்லது டயரி எழுதும் பழக்கத்தையோ அன்றன்று கணக்கு வழக்குகளை எழுதும் பழக்கத்தையோ ஏற்படுத்திக் கொள்ளலாம்.
👉படுக்கை தூங்குவதற்காக மட்டும் ஆனதே. அதில் அமர்ந்து வாசிப்பது, மொபைல் லேப்டாப் பார்ப்பதோ, உண்பதோ கூடாது. படுக்கை விழித்திருந்து செய்யும் வேலையோடு தொடர்பு படுத்தி விடும்.
👉மதிய நேர தூக்கம் 15 முதல் 30 நிமிடங்களுக்கு உள்ளாக முடித்துவிட வேண்டும். அதிக பகல் தூக்கம் இரவு தூக்கத்தை பாதிக்கும்.
.jpeg)
No comments:
Post a Comment