Thursday, May 9, 2024

வன்மை மென்மை

_*எத்தனை*_

_*பிரச்சனைகள்*_

_*வந்தாலும்.....*_

_*சிரித்துக்கொண்டும்...*_

_*ரசித்துக்கொண்டும்...*_

_*வாழ்க்கையை கடந்து*_

_*செல்பவர்கள் தான்....*_

_*உண்மையான*_

_*புத்திசாலிகள்...*_

_*தைரியசாலிகள்.*_


_*சில நேரங்களில் எல்லாம் நமக்கு சாதகமாக நடக்கும்,*_

_*சில நேரங்களில் நடக்காமலும் போகலாம். நாம் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும்.*_


_*வெற்றிக்கு என்ன தேவையோ அதைதான் நாம்செய்ய வேண்டும்*_

_*முன்னேற்றத்தை நோக்கி முயற்சி செய்யுங்கள். அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை. *_


காரணங்கள் இல்லாமல் தொடரும் வாதத்தில்

சொல்லப்படும் காரணங்கள்

அனைத்தும் கட்டுக்கதையே. 


சவால்கள் தான் வாழ்க்கையை சுவாரசியமாக்குகின்றன

அவற்றைச் சமாளிப்பதே

வாழ்க்கையை

அர்த்தமுள்ளதாக

மாற்றுகிறது.


பெண் என்பவள் பலகோடி

பக்கங்கள் கொண்ட

புத்தகம்.


பலரும் அட்டையைப்

பார்த்து விட்டு

வைத்து விடுகிறார்கள்.


சிலர் மட்டுமே படிக்கத்

தொடங்குகிறார்கள்.


வாழ்க்கையில் இக்கட்டான

சூழ்நிலையில் சாதனைக்கு

வழிவகுப்பது

தன்னம்பிக்கை மட்டுமே.


தன்னம்பிக்கை

இல்லாமல்

எதுவும் செய்ய இயலாது.


ஒருபோதும்

தன்னம்பிக்கையை 

இழக்காதீர்கள்.


உலகம் முழுவதும்

உறவுகள் உண்டு.


நமக்கான உறவுகளை

கண்டறிவதில் தான்

எளிதாகத் தோற்று விடுகிறோம்.


வன்மையை விட மென்மையே

நீண்ட காலம் நிலைக்கிறது.

மென்மையான நாக்கை

கட்டுப்படுத்தும்.

வன்மையான பற்கள்

நீண்ட நாட்கள்

நிலைப்பதில்லை.


சிரித்துப் பேசும்

இதயங்கள்

எல்லாம் நிம்மதியானவை

என்று நினைத்து

விடாதீர்கள்.

அவ்விதயங்களும்

என்றோ

ஒருநாள் சிதைக்கப்பட்டவை

தான்.

இன்று 

எல்லாவற்றையும் தாண்டி

சிரித்துக் கொண்டிருக்கிறது.


வாழ்வில்

தோற்று விடக்கூடாது என்பதற்காக

மனிதன் செய்யும் தவறுகளில் மிகவும் மோசமானது ஒருவரின் சூழ்நிலை தெரியாமல் அவரைத் தவறாக விமர்சிப்பதாகும்.


யாருக்கும் உங்களைக் கணிக்கும் உரிமை கிடையாது.

ஏனெனில் அவர்களுக்கு உங்களைப் பற்றிய வதந்திகளே அதிகம் தெரிந்திருக்குமே தவிர, உங்களின் வலிகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


மதிப்பைக் கேட்டு வாங்கும் இடத்தில் இருக்காதீர்கள்.

விரும்பித் தானே கொடுக்கும் இடத்திற்கு உங்களை

உயர்த்திக் கொள்ளுங்கள்.


நல்லதை செய்கின்றவன்

உன் எதிரியா இருந்தாலும் அவனிடம் சேர மறுக்காதே.

கெட்டதை செய்பவன் உன் நண்பனாக இருந்தாலும் விலகத் தயங்காதே.


 _*உழைத்து சாப்பிடும் போது அப்பாவின் அருமையும்.*_

_*சமைத்து சாப்பிடும் போது அம்மாவின் அருமையும் தெரியும்.*_


*_நேர்மையும், உண்மையும்_*

*_விலை உயர்ந்த பரிசுகள்._*

*_எல்லா மனிதர்களிடமிருந்தும்_*

*_அதை எதிர்பார்க்க வேண்டாம்._*

No comments:

Post a Comment