Thursday, May 9, 2024

எது நல்லது எது தீயது

வெயில் இருந்தால் தான்*

*நிழலின் அருமை புரியும்.*


*நூறுபேரின் வாயை*

*மூட முயற்சிப்பதை விட‌.*

*நம் காதுகளை மூடிக்கொள்வத*

*மிகச்சிறந்தது.*


_*கடவுள் சாட்சியாக என்ற*_

_*வாசகத்தின் துணையோடு.*_

_*பல பொய்கள்*_

_*உண்மையாக்கப்படுகின்றன.*_


அறிவுடையவர்கள்

அனைத்தையும் உடையவர்களே.

அறிவு இல்லாதவனிடத்தில் எல்லாம் இருந்தாலும், அவன் ஒன்றும் இல்லாதவனே. ஏனென்றால் எல்லா வெற்றிகளும், பொருட் செல்வங்களும் இருந்தாலும், அதைப் பயன்படுத்தும் அறிவு இல்லாதவன் வறியவனே.


அறிவு, ஆற்றல் (சக்தி), திறமை(செயல் திறன்) இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியம்தான். ஆனால், ஆற்றலும், திறமையும் இருந்தும் அறிவில்லை என்றால் அதனால் யாதொரு பயனுமில்லை. அதே சமயம் அறிவு ஓங்கி நின்றால் ஒருவர் தம் ஆற்றலையும், திறமையையும் வளர்த்துக் கொள்வார். ஒரு மனிதன் படிப்பதினாலும், கேள்வி ஞானத்தினாலும் தன் அறிவை விருத்தி செய்து கொள்ள வேண்டும் என்றால், அவனுக்கு கொஞ்சமாவது உண்மை அறிவு இருக்க வேண்டும்.


அப்பொழுதுதான்,

அவன் தான் படிக்கிற, கேட்கிற விஷயங்களை, தான் ஏற்கனவே அறிந்திருக்கின்ற விஷயங்களோடு அல்லது தன் அனுபவத்தோடு பொருத்தி, ஆராய்ந்து பார்ப்பான்.

இல்லையென்றால் யார் என்ன சொன்னாலும், அதை அப்படியே ஏற்றுக் கொண்டு, குழம்பிக் கொண்டிருப்பான். எனவே ஓரளவாவது தன் உண்மை அறிவை வளர்த்துக் கொள்பவன்தான் மேலும் மேலும் தன் அறிவை விருத்தி செய்து கொள்ள முடியும். 


அறிவுதான் மனிதனைக் காக்கும். அறிவுக்கு இலக்கணம் என்ன 

மனம் சொல்கிறபடியெல்லாம் ஆடாமல், அதில் எது நல்லது, எது தீயது என்று ஆராய்ந்து, தீயவைகளைப் புறந்தள்ளி, நன்மைகளை ஏற்றுக் கொள்வதே அறிவுக்கு இலக்கணம். யார் பேசுகிறார் என்பதை கவனிக்கிற அளவு, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று நாம் சிந்திப்பதேயில்லை.


அவர் சொன்னால் சரியாகத்தானிருக்கும் என்று அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.

அது தவறு. அவர் என்ன பேசுகிறார்  அவர் பேசுவதில் உண்மையிருக்கிறதா என்று ஆராய வேண்டும். நாம் பேசும் பொழுதும் ஆராய்ந்துதான் பேச வேண்டும், பிறர் பேசும் பொழுதும் அதிலுள்ள உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். அதுதான் அறிவு. அப்படிப்பட்ட அறிவு பெற்றவர்கள் தங்கள் வாழ்வில் தோற்பதேயில்லை.


சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நடந்து கொள்வது அறிவுடையோர் செயல். அதற்காக நம் சுய இயல்பை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதல்ல. நம் இயல்பை, நம் அறிவை வெளிப்படுத்த வேண்டிய இடத்தில் வெளிப்படுத்த வேண்டும். தகாது என்று தோன்றினால் மௌனமாக இருக்க வேண்டும். இதுவே அறிவுடையோர்க்கு அழகாகும்.


அறிவுடையவர்கள் பின்பு நடக்கப் போவதை முன் கூட்டியே அறியும் வல்லமை பெற்றிருப்பார்கள். எனவே சில காரியங்களில் அவர்கள் தோற்றுப் போவது போலத் தோன்றும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. தனக்கும், தன் சமூகத்திற்கும் ஏற்படும் கேடுகளைத் தவிர்ப்பதற்காக அவர்கள் அச் செயலை தவிர்த்திடுவர். இது தோல்வியல்ல. இதுதான் அறிவுடமை. அறிவில்லாதவன் வெற்றி பெற்று விட்டோம் என்று இறுமாந்து, தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பேரழிவைத் தேடிக் கொள்வான். இதை சரித்திரத்தின் பல இடங்களில் நாம் கண்டிருக்கிறோம்.


எனவே எந்த ஒரு செயலாக இருந்தாலும், ஒரு முறைக்குப் பல முறை ஆராய்ந்து பின் இறங்க வேண்டும். அவ்வாறு எண்ணிச் செயல்படும் பொழுதும் கூட, சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்று தோன்றினால், அஞ்சாமல் தவிர்த்து விட வேண்டும். சில நேரங்களில் தவிர்க்க இயலாமலும் போய் விடும். அப்படிப்பட்ட வேளைகளில் அடக்கமாக இருந்து கொள்ள வேண்டும்.


இப்படிப்பட்ட

வருமுன் காக்கின்ற அறிவு உடையவர்களுக்கு கொடிய துன்பங்கள் எதுவும் ஏற்படாது. எனவே அறிவு உடையவர்களிடத்தில் உலகாய வெற்றியின் மூலம் அடையப் பெறுகின்ற வேறு எதுவும் இல்லை என்றாலும், அவர்கள் அனைத்தையும் உடையவர்களே. அறிவு இல்லாதவனிடத்தில் எல்லாம் இருந்தாலும், அவன் ஒன்றும் இல்லாதவனே. ஏனென்றால் எல்லா வெற்றிகளும், பொருட் செல்வங்களும் இருந்தாலும்,அதைப் பயன்படுத்தும் அறிவு இல்லாதவன் வறியவனே. அவன் ஒரு போதும் வாழ்வில் மேன்மை நிலையை அடைய மாட்டான். மன அமைதி என்பது அவனைப் பொருத்த வரை எட்டாக் கனி. எனவே தன்னிறைவு என்பது அவனுக்கு பகல் கனவு.


தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை


தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்


தன்னை அறியும் அறிவை அறிந்தபின்


தன்னையே

அற்சிக்கத் தானிருந் தானே. 

*🤘~ திருமூலர்.*


வாழ்வில் முழுமை என்பது தன்னிறைவால் மட்டுமே ஏற்படும். 


_*நாம் வாழும் இந்த பிரபஞ்சம்*_ _*பிரம்மாண்டமான ஒன்று.*_

_*அதை படைத்து வழிநடத்திக் கொண்டிருக்கும் மிகப்பெரிய அதிபிரமாண்டமான சக்தியை பற்றி நினைத்துப் பாருங்கள்.*_


_*அவ்வளவு பெரிய சக்திக்கு முன்னால் நம் கஷ்டங்களும் துன்பங்களும் ஒரு விஷயமே அல்ல.*_


_*உங்கள் கஷ்டங்களை நீங்களே தூக்கி சுமக்கும் வரை தான் அது உங்களுக்கு பாரமாக இருக்கும். இறைவனிடம் இறக்கி வைத்து விடுங்கள்.*_


_*நமக்கு தரும்*_ _*கஷ்டங்கள் மூலம்*_

_*சில நேரங்களில்*_ _*சிலவற்றை இறைவன் நமக்கு கற்றுக் கொடுக்கலாம்.*_

_*புரிய வைக்கலாம்.*_


_*ஆனால் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நம்மை அவர் கைவிடுவதில்லை.*_


_*இறைவனை முழுமையாக நம்புங்கள் உங்களுக்கான காலம் வரும் பொறுத்திருங்கள்.*_

_*அனைத்தையும் கடந்து வருவீர்கள்*_


_*பார்க்கும் முறையை மாற்றிக்கொள்ளுங்கள்..*_

_*பார்வைக்கு*_

_*அனைத்தும்*_ _*புதுமையே.*_


_*நம்பிக்கை என்னும் ரதத்தில் பயணித்து கொண்டு இருப்பவர்களுக்கு,* *வெற்றியின் இலக்கு* *தூரம் இல்லை.*

No comments:

Post a Comment