இல்லாதவர்கள் சொல்லும்
உண்மையை விட
இருப்பவர்கள் சொல்லும்
பொய்க்குத் தான்
சமுதாயத்தில் மதிப்பு அதிகமாகும்.!
காரணம் எதுவாக இருந்தாலும்,
சரியான நேரத்தில்,
சரியான முடிவை எடுக்கத் தவறினால்...
காலம் முழுக்க வருந்த வேண்டி இருக்கும்.!!
ஒருவரை தெரிந்து கொள்வதைவிட
புரிந்து கொண்டால் மட்டுமே
அந்த அன்பு கடைசி வரை நிலைத்து நிற்கும்.!!!
வார்த்தை என்பது ஏணி போல
நாம் பயன்படுத்துவதைப் பொறுத்து
நம்மை ஏற்றியும் விடும்...
இறக்கியும் விடும்.!
எந்த அளவிற்கு சம்பாதித்து வைத்திருக்கிறோம் என்பது பெருமையல்ல.
இன்பத்திலும் துன்பத்திலும்
நம்மோடு இருக்க எத்தனை பேரை
சம்பாதித்து வைத்திருக்கிறோமோ
அதுவே நம் வாழ்வின் சிறப்பாகும்.!!
எவன் ஒருவன் மற்றவர்களின் வேலைகளில்
வீணாக தலையிடாமல்
தன்னுடைய வாழ்வின் கடமைகளை
அறிவுடனும் அக்கறையுடனும்
கவனிக்கிறானோ,
அவனுக்கு வெற்றி,கெளரவம்,செல்வாக்கு
ஆகிய மூன்றும் தானாக வந்து சேரும்.!!!
நடித்து பேசுபவர்களிடம் மறந்தும்
மனம் திறந்து பேசிவிடக்கூடாது...
மனம் திறந்து பேசுபவர்களிடம் மறந்தும்
நடித்து பேசிவிடக்கூடாது.!
நமக்கே தெரியாமல்
நம்மை பிடித்தவர்களின் மேல்
அதிக பாசம் வைத்து விடுகிறோம்...
அதனால் தான் அவர்களுடைய சிறிய மாற்றம் கூட
பெரிய ஏமாற்றமாக
நம்மை ரொம்ப காயப்படுத்தி
வலிக்கச் செய்கிறது.!!
நம்மை ஒருவர் மதிக்கவில்லை
என்பது தவறாகும்...
அவர்களுக்கு நம் மதிப்பு தெரியவில்லை
என்பதே நிசப்தமான உண்மையாகும்.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment