Thursday, May 9, 2024

செய்தித் துளிகள் - 09.05.2024 (வியாழக்கிழமை)

🍒🍒12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு மே 16 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

🍒🍒அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி:

தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி ஏற்படுத்த நடவடிக்கை

இம்மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என தமிழ்நாடு அரசு தகவல்

🍒🍒உயர்கல்விக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ் புதல்வன் திட்டம்’ 2024-25ம் கல்வியாண்டில் ஜூலை மாதம் முதல் தொடங்கும்

-சென்னையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி

🍒🍒மே 10-ல் வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்:

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 10ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் என தேர்வுத்துறை அறிவிப்பு

tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணைதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

🍒🍒அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் பட்டியல் தயாரிப்பு: டிஆர்பி தேர்வுக்கு விரைவில் அறிவிப்பு.

🍒🍒2024-2025 பொது மாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு நடத்துதல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின்  செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒தமிழக பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் பீகார் கல்விக்குழு

🍒🍒மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6 கடைசி நாளாகும்.!

🍒🍒பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு: 2 நாளில் 42,000 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

🍒🍒பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை10-ம் தேதி வெளியீடு.

🍒🍒கணினி பட்டதாரி ஆசிரியர்கள் விவரங்கள் சேகரிப்பு.

🍒🍒அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பட்டயப் படிப்பிற்கான (Diploma) நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான பதிவு நடைபெற்று வருகிறது.

🍒🍒கட்டாய வருமான வரி பிடித்தம் இம்மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. தவறுதலாக Regime தேர்வு செய்தவர்கள் மாற்ற முடியாது - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை அலுவலர் கடிதம் வெளியீடு.

🍒🍒உலகத்தில் வேறு எங்கும் இல்லாத நம்பர் 1 படிப்பை அறிமுகப்படுத்திய ஐஐடி

🍒🍒தடுப்பூசியை திரும்பப் பெறுகிறது ஆஸ்ட்ராஜெனகா:

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுகிறது ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவிப்பு. 

தடுப்பூசியால் வெகு சிலருக்கு பாதிப்புகள் ஏற்படுவதால் திரும்பப் பெறுவதாக ஆஸ்ட்ராஜெனகா அறிவிப்பு.

🍒🍒வேகத்தடைகளுக்கு அருகே மின் கம்பங்கள் அமைக்க வேண்டாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் ஊழியர்களுக்கு உத்தரவு

🍒🍒பீகாரில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 2 அதிகாரிகள் மாரடைப்பு காரணமாக மரணம்

🍒🍒இந்தியா கூட்டணி வென்றால் அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்படும் என ராகுல்காந்தி உறுதி 

🍒🍒கேரளாவில் நைல் காய்ச்சல் அதிகளவில் பரவுவதால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறை உத்தரவு

🍒🍒தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு 

🍒🍒மேலும் ஒரு வழக்கில் சவுக்கு சங்கர் கைது

திருச்சி காவல்துறையினர் பதிவு செய்திருந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது

திருச்சியில் இருந்து கோவை மத்திய சிறைக்கு சென்ற போலீசார் திருச்சி வழக்கில் கைது செய்வதற்காக உத்திரவினை சவுக்கு சங்கரிடம் வழங்கினர்

🍒🍒செல்பி கேட்ட நபரை துன்புறுத்திய வீரர்: 

செல்பி எடுக்க முயன்ற நபரின் கழுத்தை பிடித்து தள்ளி, அடிக்க முயன்றதால் பரபரப்பு; உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டர் சாஹிப் அல் ஹசனின் செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி

🍒🍒பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கருக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மே 22ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீடித்தது

🍒🍒காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பதவியிலிருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா

பிட்ரோடாவின் விலகல் முடிவை ஏற்று கொண்டதாக கட்சி தலைமை அறிவிப்பு

இந்தியர்களை நிறத்தின் அடிப்படையில் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையான நிலையில் ராஜினாமா

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹ஏசியை 26+ டிகிரியில் வைத்து, ஃபேன் போடுங்கள், மின் வாியத்திலிருந்து, ஒரு நிர்வாக பொறியாளர் அனுப்பிய, மிகவும் பயனுள்ள தகவல்:


👉ஏசியின் சரியான பயன்பாடு.

கோடை வெயில் தொடங்கிவிட்டதால் AC ஐ அடிக்கடி பயன்படுத்துவதில், சரியான முறையைப் பின்பற்றுவோம்.

பெரும்பாலான மக்கள் தங்கள் ஏசிகளை 20-22 டிகிரியில் இயக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உடல்  குளிர்ந்தால், அவர்கள் தங்கள் உடலை போர்வைகளால் மூடுகிறார்கள். இது இரண்டு விதமான இழப்புக்கு வழிவகுக்கிறது. 

அதாவது,

நமது உடலின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகும்.

 23 டிகிரி முதல் 39 டிகிரி வரை வெப்பநிலையை உடல் எளிதில் பொறுத்துக்கொள்ளும். இது மனித உடல் வெப்பநிலை சகிப்புத்தன்மை என்று அழைக்கப்படுகிறது.

அறையின் வெப்பநிலை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும்போது, உடல் தும்மல், நடுக்கம் போன்ற வற்றினை எதிர்த்து போராட வேண்டும்.

நீங்கள் 19-20-21 டிகிரியில் ஏசியை இயக்கும்போது, அறையின் வெப்பநிலை சாதாரண உடல் வெப்பநிலையை விட மிகக் குறைவாக இருக்கும். மேலும் இது உடலில் ஹைப்போதெர்மியா எனப்படும் நோய் உருவாகிறது, இது உடலில் இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது, இதனால் உடலின் சில பகுதிகளில் இரத்த ஓட்டம் போதுமானது  இல்லை. . மூட்டுவலி போன்ற நீண்ட கால தீராத வலிகள் உருவாகின்றன.

பெரும்பாலும் ஏசி ஆன் செய்யும்போது வியர்வை வராது, அதனால் உடலில் உள்ள நச்சுகள் வெளியே வர முடியாமல், நாளடைவில் தோல் அலர்ஜி அல்லது அரிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பல நோய்களை உருவாக்கும் அபாயம் உள்ளது.

நீங்கள் குறைந்த வெப்பநிலையில் ஏசியை இயக்கும்போது, 5 ஸ்டார் AC ஆக  இருந்தாலும், அதன் கம்ப்ரசர் முழு ஆற்றலில் தொடர்ந்து வேலை செய்வதால் அதிகப்படியான மின்சாரம் செலவழிக்கப்படுகிறது மற்றும் அது உங்கள் பணத்தை விரயமாக்கிறது.

முதலில் ஏசியின் வெப்பநிலையை 20 - 21 என அமைப்பதன் மூலம் உங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது என்பதை மனதளவில் நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும்.

அப்படியானால்

ஏசியை இயக்க சிறந்த வழி எது ?

26+ டிகிரி அல்லது அதற்கு மேல் வெப்பநிலையை அமைக்கவும்.

26+ டிகிரியில் ஏசியை இயக்குவதும், மெதுவான வேகத்தில் மின்விசிறியைப் போடுவதும் எப்போதும் நல்லது. 28 பிளஸ் டிகிரி சிறந்தது.

இதற்கு மின்சாரம் குறைவாக செலவாகும், மேலும் உங்கள் உடல் வெப்பநிலையும் வரம்பில் இருக்கும், மேலும் உங்கள் ஆரோக்கியத்தில் எந்தத் தீங்கும் ஏற்படாது.

இதன் மற்றொரு நன்மை என்னவென்றால், ஏசி குறைந்த மின்சாரத்தை உட்கொள்ளும், மின்சாரம் சேமிக்கப் படுகிறது. மூளையின் இரத்த அழுத்தமும் குறையும் மற்றும்  இறுதியில் புவி வெப்பமடைதலின் விளைவுகளை குறைக்க உதவும்.

 எப்படி ?

26+ டிகிரியில் ஏசியை இயக்குவதன் மூலம் ஒரு இரவுக்கு சுமார் 5 யூனிட்கள் சேமிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், சுமார் 10 லட்சம் வீடுகளும் உங்களைப் போலவே செய்கின்றனர் என்றால் ஒரு நாளைக்கு 5 மில்லியன் யூனிட் மின்சாரத்தை சேமிக்கிறோம்.

பிராந்திய அளவில் இந்த சேமிப்பு ஒரு நாளைக்கு கோடி யூனிட்களாக இருக்கும். 

இதனால் புவி சூடாதல். குறையும். இதனால் இயற்க்கை பாதுகாக்கப்படும்.

தயவு செய்து மேற்கூறியவற்றைக் கவனியுங்கள், உங்கள் ஏசியை 26 டிகிரிக்குக் கீழே இயக்க வேண்டாம். உங்கள் உடலையும், சுற்று சூழலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பொது நலனுக்காக அனுப்பப்பட்டது.

🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment