Wednesday, May 8, 2024

இன்றைய நாளில் பிறந்தவர்.* (08-மே)


*ஜீன் ஹென்றி டியூனண்ட்.*


🏆 அமைதிக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றவரும், செஞ்சிலுவை சங்கத்தை உருவாக்கியவருமான ஜீன் ஹென்றி டியூனண்ட் 1828ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தில் பிறந்தார். இவரது பிறந்த தினத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும், உலக செஞ்சிலுவை தினம் கொண்டாடப்படுகிறது.


🏆 ஒருமுறை சால்ஃபரீனோ என்ற நகருக்கு சென்ற போது வழியில் கொடூரமான போர்க்களக் காட்சிகளைக் கண்டார். அதை பார்த்து மனம் வருந்திய இவர் மக்களோடு இணைந்து, காயமடைந்த வீரர்களுக்கு உதவினார்.


🏆 தன் சொந்த ஊரான ஜெனீவாவுக்குத் திரும்பிய பிறகும்கூட, இவருக்கு போரும் அதன் அவலங்களும் மட்டுமே நினைவில் நின்றன. அதன் காரணமாக சால்ஃபரீனோ நினைவுகள் (A Memory of Solferino) என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டார்.


🏆 அந்த புத்தகத்தில் உலகில் எங்கு போர் நடந்தாலும், காயமடைந்த வீரர்களுக்கு பாரபட்சமின்றி உதவ சர்வதேச அளவில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். என்று குறிப்பிட்டார். பிறகு 1863ஆம் ஆண்டு அந்த அமைப்பான செஞ்சிலுவை சங்கம் உருவாக்கப்பட்டது.


🏆 நோபல் பரிசு தொடங்கப்பட்ட ஆண்டான 1901ஆம் ஆண்டு இவருக்கு முதன்முதலாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனிதநேயத்தை உலகம் முழுவதும் பாரபட்சமின்றி உருவாக்கிய இவர் 1910ஆம் ஆண்டு மறைந்தார்.



*சுவாமி சின்மயானந்தா.*


👉 1916ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி உலகம் முழுவதும் ஆன்மீக கருத்துகளைப் பரப்பிய சுவாமி சின்மயானந்தா கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் பிறந்தார்.


👉 உலகெங்கும் பல ஆசிரமங்களையும், மையங்களையும், பாடசாலைகளையும், மருத்துவமனைகளையும் ஆரம்பித்தார்.


👉 கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கிராம நலத்திட்டமான சின்மயா அமைப்பை உருவாக்கிய இவர் 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி மறைந்தார்.

No comments:

Post a Comment