Wednesday, May 8, 2024

செய்தித் துளிகள் - 08.05.2024(புதன்கிழமை)


📕📘“என் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்;

B.Com முடித்துவிட்டு, C.A படிக்க வேண்டும் விரும்புகிறேன்;

என்னை வெட்டியவர்களும் நன்றாக படிக்க வேண்டும்”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் நாங்குநேரியில் சக மாணவர்களால் சாதியரீதியிலான தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னத்துரை பேட்டி.

📕📘+ 2 துணைத் தேர்வுக்கான செய்திக்குறிப்பு மற்றும் துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு.

📕📘ஆசிரியர்களை பள்ளிகளில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ள வற்புறுத்தக் கூடாது. 

அமைச்சுப்பணிகளை ஆசிரியர்களை மேற்கொள்ள வற்புறுத்துவதாக புகார் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

📕📘31.12.2005 வரை நடுநிலைப் பள்ளிகளில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேசப் பெயர் பட்டியல் வெளியீடு.

📕📘ஆசிரியர் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற EMIS இல் சிறப்பு வசதி ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை செயலர் கடிதம் வெளியீடு.

📕📘பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை10-ம் தேதி வெளியீடு.

📕📘 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் / பணி நிரவல் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான நிபந்தனைகள் (NORMS) என்னென்ன?

அரசாணை எண் 26, (ப.க.து) நாள்: 24.01.2024 ல் பத்தி 3 மற்றும் அரசாணை எண் 48, (ப.க.து) நாள்: 21.02.2024 ல் பத்தி 5 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி பொது மாறுதல் / பணி நிரவல் கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு.

📕📘அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது.

📕📘பிளஸ் 2 : விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும் ௹. 275 கட்டணம்

📕📘மாணவர் சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதி

📕📘01.06.2024 நிலவரப்படி நிரப்பத் தகுந்த முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.

📕📘தமிழக கல்வித்துறையில்.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு பூர்வாங்க பணிகள் தொடங்கியது..

பணி நிரவல் மற்றும்..‌ பணி மாறுதல் உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டது.                                         📕📘IT DECLARATION IN KALANJIYAM PORTAL NEW UPDATE

👉தற்போது 80CCE-யில் உள்ள அனைத்து investment type விவரங்களும் kalanjiyam portal-லில் பதிவு செய்து கொள்ளலாம்.

Example:tuition fee,fixed deposit etc..

👉ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் GPF,CPS,NHIS,PT(PROFESSIONAL TAX) போன்ற விவரங்களையும் பதிவு செய்யத் தேவையில்லை.

📕📘மேற்குவங்கத்தில் ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.

📕📘12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், துணைத் தேர்வுக்கு மே16 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

📕📘சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹240 உயர்ந்து ₹53,120-க்கும், 1 கிராமுக்கு ₹30 உயர்ந்து ₹6,640-க்கும் விற்பனையாகிறது.

📕📘பிஎஸ்என்எல், முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தியா முழுவதும் 4ஜி சேவைகளை ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது.

பிஎஸ்என்எல் அதிகாரிகள் 4ஜி நெட்வொர்க்கில் வினாடிக்கு 40-45 மெகாபிட் உச்ச வேகத்தை பதிவு செய்ததாகக் கூறியுள்ளனர்.

📕📘சென்னையில் 55 ஸ்பாக்களுக்கு சீல்!

சென்னை அண்ணாநகர், கோயம்பேடு பகுதிகளில் உரிமம் இன்றி இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர் 

ஸ்பாக்களில் மசாஜ், பாலியல் தொழில்கள் நடந்த வருவதாக கிடைத்த தகவலை அடுத்து போலீஸ் சோதனை நடத்தி நடவடிக்கை

📕📘மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்றிக் கொல்ல முயற்சி!

கட்டணம் செலுத்தாமல் சென்றதை தடுத்த ஊழியர் மீது ஓட்டுநர் காரை ஏற்ற முயன்றுள்ளார்

சுங்கச்சாவடி ஊழியர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

📕📘SETC பேருந்துகளில் இனி யுபிஐ வசதி: 

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் யுபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி நேற்று முதல் அமல் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 1,068 பேருந்துகளிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

📕📘சவுக்கு சங்கர் மீது சென்னை போலீஸ் வழக்குப்பதிவு: 

பெண்கள் இருவர் அளித்த புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு 

யூடியூப் சேனல் பெலிக்ஸ் மீதும் போலீசார் வழக்குப்பதிவு; சவுக்கு சங்கரை கைது செய்து விசாரணை செய்ய சென்னை போலீஸ் திட்டம் என தகவல்.

📕📘ரஷ்ய அதிபராக 5-வது முறையாக பதவியேற்றார் விளாடிமிர் புடின்!

சுமார் 24 ஆண்டுகளாக அதிபராக இருந்து வரும் புடின்,கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதான எதிா்க்கட்சிகளே இல்லாத சூழலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

📕📘ஐபிஎல் 2024: சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 9ம் தேதி தொடங்குகிறது.

📕📘சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உயர்நிலை ஆணையம் ஒப்புதல்.

தமிழ்நாடு அரசின் உயர்நிலை ஆணையம் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து நிதித்துறைக்குக் கோப்பு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்.                                                             📕📘3 ஆண்டுகளை நிறைவு செய்த திமுக அரசு: அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

📕📘📕📘📕📘📕📘📕📘

🌹🌹அளவுக்கு மீறினால் பாலும் நஞ்சு..! அதிகம் குடித்தால் என்ன ஆகும்?

👉உடலுக்கு தேவையான அத்தியாவசியமான சத்துக்களை வழங்குவதில் பால் முக்கியமானதாக உள்ளது.ஆனால் தேவைப்படும் அளவை விட பால் அதிகம் எடுத்துக் கொள்வது சில ஆரோக்கிய பிரச்சினைகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதுகுறித்து காண்போம்.

👉பாலில் கால்சியம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம், கலோரிகள் உள்ளது. பால் அதிகம் சாப்பிடுவதால் உடலில் கால்சியம் சத்து அதிகரித்து எலும்பு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

👉பால் விரைவில் சீரணமாகாத உணவு என்பதால் அதிகம் எடுத்துக் கொள்வது செரிமான பிரச்சினையை ஏற்படுத்தலாம். பாலை பெரும்பாலும் பலர் டீ, காபியாகவோ சர்க்கரை அதிகம் கலந்தோ சாப்பிடுவதால் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

👉பாலில் அதிகமாக சர்க்கரை கலந்து சாப்பிடுவதால் பாலில் உள்ள சத்துக்கள் உடலில் சேருவது குறைகிறது. பால் அதிகம் குடிப்பதால் கொழுப்புகள் உடலில் அதிகம் சேர்ந்து இதய பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். ஒரு நாளைக்கு மூன்று முறைக்குள் பால் குடிப்பது உடலுக்கு நலன் பயக்கும்.

No comments:

Post a Comment