Sunday, January 18, 2026

முடிந்தால் பார்க்கலாம் 10 த்ரில்லர் திரைப்படங்கள் இதோ!

 தமிழ் சினிமாவுல பல பேருக்குத் தெரியாத, ஆனா நீங்க கண்டிப்பா பார்க்க வேண்டிய 10  த்ரில்லர் திரைப்படங்கள் இதோ!

*பொங்கல் விடுமுறையில் நாட்கள் முடிந்தால் பார்க்கலாம்....*


1) ஜீவி (2019)

 

ஹீரோவோட வாழ்க்கையில நடக்குற சம்பவங்களுக்கும், முன்னாடி ஒருத்தர் வாழ்க்கையில நடந்த விசித்திரமான கனெக்ஷனை த்ரில்லிங்கா சொல்லும்! 


OTT : Amazon Prime


2) குரங்கு பொம்மை (2017)

🎒


 ஒரு பையைச் சுத்திதான் கதை. ரொம்பவே தரமான படம் அனைவரது நடிப்பும் திறம்பட இருக்கும்


 OTT📺 : ZEE5


3) மாயவன் (2017)


 🧬 தொடர் கொலைகள் நடக்குது. ஒரு கொலைகாரனை ஹீரோ சுட்டுக் கொன்ன பிறகும், அதே ஸ்டைல்ல அடுத்த கொலை நடக்குது. ஒரு சயின்டிபிக் எக்ஸ்பெரிமென்ட் மூலமா ஒருத்தன் எப்படி பல உடம்புக்குள்ள போறான்றது தான் மர்மம்! 


OTT 📺: Amazon Prime


4) 8 தோட்டாக்கள் (2017) 


🔫 ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியோட கன் மிஸ் ஆகுது. அதுல இருக்கிற 8 தோட்டாக்களை வச்சு அடுத்தடுத்து கொலைகள் நடக்குது. அந்தத் துப்பாக்கியை ஹீரோ எப்படி மீட்கிறான், அதுக்குப் பின்னால இருக்கிற எமோஷனல் ட்விஸ்ட் என்னன்றது தான் கதை. 


OTT 📺: ZEE 5/HOTSTAR


5) குற்றமே தண்டனை (2016)


 👁️ ஹீரோவுக்குப் பார்வை சரியா தெரியாது. கண் ஆபரேஷனுக்குக் காசு வேணும். ஒரு கொலை நடக்குறத ஹீரோ பாத்துடுறான். போலீஸ் கிட்ட போகாம, அந்தக் கொலையை மறைக்கக் கொலைகாரன் கிட்டயே காசு கேட்டு டீல் போடும்போது வர்ற சிக்கல்கள் தான் கதை!


 OTT 📺: AMAZON PRIME


6) அதோமுகம் (2024) 


📱 ஹீரோ தன் மனைவிக்குத் தெரியாம அவ மொபைல்ல ஒரு "ஸ்பை ஆப்" இன்ஸ்டால் பண்றான். அவளைச் சந்தோஷப்படுத்த நினைச்ச ஹீரோவுக்கு, அவ மொபைல் கேமரா வழியா தெரியுற மர்மமான உண்மைகள் அவரோட வாழ்க்கையையே தலைகீழா மாத்துது! 


OTT📺: Aha Tamil / Amazon Prime


7) இரவுக்கு ஆயிரம் கண்கள் (2018) 


🚕 ஒரே ஒரு மழை ராத்திரில ஒரு கொலை நடக்குது. அந்த இடத்துல சம்பந்தமே இல்லாம பல பேர் வந்துட்டுப் போறாங்க. அவங்க ஒவ்வொருத்தருக்கும் ஒரு காரணம் இருக்கு. இந்தக் குழப்பமான முடிச்சுகளை ஹீரோ எப்படி அவிழ்க்கிறான்றது தான் திரைக்கதை! 


OTT 📺: SUN NXT


8) ஸ்டீபன் (2025) 


👤 சமீபத்துல வந்த செம சைக்கலாஜிக்கல் த்ரில்லர். 9 பெண்களைக் கொலை பண்ணதா ஒருத்தன் வந்து சரண்டர் ஆகுறான். ஆனா அவன் உண்மையிலேயே கொலைகாரனா இல்ல அவனை யாராவது மாட்டி விடுறாங்களா? கிளைமாக்ஸ் வரைக்கும் ஒரே பரபரப்புதான்! ஆனால் பலருக்கு பிடிக்காமல் போக வாய்ப்பு


 OTT 📺: Netflix


9) பேச்சி (2024) 


🌳 ஒரு காட்டுக்குள்ள ட்ரெக்கிங் போற 5 நண்பர்கள், தெரியாம ஒரு தடை செய்யப்பட்ட பகுதிக்குள்ள போயிடுறாங்க. அங்க இருக்கிற ஒரு மாந்திரீக சூனியக்காரி (பேச்சி)-கிட்ட இருந்து அவங்க தப்பிச்சாங்களா இல்லையான்றது தான் கதை!


 OTT📺: Aha Tamil / Amazon Prime


10) ஒரு கிடாயின் கருணை மனு (2017) 


🐐 ஒரு விபத்து, ஒரு ஆடு, ஒரு கிராமமே அந்த விபத்தை மறைக்க நினைக்கிறாங்க. ஒரு சின்ன விஷயம் எப்படி ஒரு மிகப்பெரிய பிரச்சனையா மாறுதுன்னு ரொம்ப யதார்த்தமா, த்ரில்லிங்கா சொல்லியிருப்பாங்க!

No comments:

Post a Comment