Sunday, January 21, 2024

மங்குஸ்தான்-தினம் ஒரு மூலிகை

 *


*மங்குஸ்தான்*  பழம் மலை தோட்டங்களில் வணிக ரீதியாக வளர்க்கப்படும் பெரும் மரவகை சார்ந்த இதன் பழம் கடினமான ஓட்டையும் சளி போன்ற வழுவழுப்பான பல சுளைகளையும் பெற்றிருக்கும் இலை பட்டை பழம் ஆகியவை மருத்துவ குணம் உடையது பொதுவாக துவர்ப்பியாக செயல்படும் உலர்ந்த பழத்தை பொடித்து 250-350 மி.கி அளவாக சர்க்கரையில் கலந்து சாப்பிட்டு வர நாள் பட்ட கழிச்சல் சீத கழிச்சல் வெள்ளை ஆகியவை தீரும் மங்குஸ்தான் மர பட்டையையோ பல ஓட்டையோ ஒன்று இரண்டாய் இடித்து நீரில் இட்டு நன்கு காய்ச்சி வடிகட்டிய நீரை கொண்டு அலம்பி வர கருப்பை இறக்கம் ஆசனவாய் வெளித்தள்ளுதல் ஆகியவை குணமாகும் பழ ஓடு 30 கிராம் கொத்தமல்லி விதை சீரகம் வகைக்கு 10 கிராம் இவற்றை இடித்து 800 மில்லி நீரில் இட்டு நானூறு மில்லி அளவுக்கு காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு நூறு மில்லி அளவாக சர்க்கரை கலந்து காலை மதியம் மாலையாக சாப்பிட்டு வர நீர்த்த கழிச்சல் சீத கழிச்சல் குருதி கழிச்சல் ஆகியவை தீரும் தொடர்ச்சி நாளை நன்றி.

No comments:

Post a Comment