Wednesday, January 24, 2024

பனங்கிழங்கு

 . *


பனங்கிழங்கு* 


_வீதியோரத்தில் விற்காத அவித்த பனங்கிழங்கு கூடையுடன் தலைகவிழ்ந்த மூதாட்டி..._


_அலட்சிய பார்வை வீசி விட்டு அவசரக் கதியில் அலைகழியும் பட்டணத்து கூட்டம்.._


_நெடுதுயர்ந்த பனையின் மேல் நெஞ்சுரச இடுப்பில் குடுவையுடனும் திளாப்புக்கயிறு கட்டி ஏறிய கிழவன்..._


_மேலுக்கு ஆகாது வீட்டில் முடங்கிட, நிலங்கீறி விதையிட்டு துளிர்த்த வேர்களை சேகரித்த கிழவி காத்திருக்கிறாள் வாங்குபவர்களுக்காக..._


_கடும் உழைப்பு விலை போகா உலகத்திலே, பைக்குள் காற்றடைத்த பண்டம், சொன்ன விலைக்கு விற்கும் இவ்வூரிலே..._


_காட்டிலே மரமேறி உழைத்த குடும்பம், வயிற்றை கழுவ  விற்கும் கிழங்கை சீண்ட நாதியில்லை நாட்டிலே..._


_வானம் பார்த்து வளர்ந்து நிற்கும் பனைகளின்  ஓலைகள் சரசரக்கும் ஓசைகளை கேட்டப்படி சுருண்டிருக்கும் கிழவனின் வயிறும் சுருண்டிருக்க..._


_பரப்பரப்பாக இயங்கும் நகரத்து வீதியோரம் விற்காத கிழங்குகளுடன் துவண்டு வாடிக்கிடக்கிறாள் கிழவி. ஆமாம்; சர்க்கரை நோய்க்கு அருமருந்தாமே பனைகிழங்கு..._

No comments:

Post a Comment