Friday, January 12, 2024

தினம் ஒரு மூலிகை-செவ்வள்ளி கொடி (அ)மஞ்சிட்டி

 


*செவ்வள்ளி கொடி (அ)மஞ்சிட்டி*  தமிழக மலைக்காடுகளில் வளரும் ஒருவகை கொடி இலை வெற்றிலை வடிவாய் இருக்கும் இதன் வேர் தண்டு ஆகியவை மருத்துவ குணம் உடையது உலர்ந்த தண்டுகள் நாட்டு மருந்து கடைகளில் மஞ்சிட்டி என்ற பெயரில் கிடைக்கும் சிறுநீர் பெருக்குதல் உடல் பலம் மிகுதல் உள்ளழல் தனித்தல் தடிப்பு உண்டாக்குதல் மாதவிலக்கு தூண்டுதல் ஆகிய மருத்துவ குணம் உடையது மஞ்சிட்டிப் பொடியை ஒரு கிராம் அளவாக தண்ணீரில் கலந்து காலை மாலை கொடுத்து வர குருதி தூய்மையடைந்து படை சொறி சூரை நோய் வெள்ளை முதலென தீரும் பேறுகால அழுக்கை வெளியேற்றும் மஞ்சிட்டிபொடியை ஒரு கிராம் அளவாக தண்ணீரில் நீண்ட நாள் பருகிவர உடல் நல்ல நிறத்தை அடைந்து ஒளி மிகும்.மஞ்சிட்டிபொடியுடன் சந்தனத்தூள் சமன் கலந்து வைத்துக் கொண்டு காலை மாலை ஒரு கிராம் சாப்பிட்டு வர மஞ்சள் பிரமேகம் தீரும் வேரை பொடித்து தேன் விட்டு அரைத்து முகப்பரு வீக்கம் ஆகியவற்றிற்கு பற்று போட அவை குணமாகும் பொடியுடன் சமநெடை அதிமதுர பொடி சேர்த்து காடிவிட்டு அரைத்து பற்று போட எலும்பு முறிவினால் ஏற்படும் நோய் வீக்கம் ஆகியவை தீரும் நன்றி.

No comments:

Post a Comment