Tuesday, January 30, 2024

படிப்பவற்றை நினைவில் கொள்வது எப்படி?

1. முதலில் படிப்பதற்கு அமைதியான இடத்தை தெரிவு செய்ய வேண்டும்.


2.ஒருமுறை மாத்திரம் படிப்பது மறதிக்கு காரணமாகலாம். படிப்பதை ஒவ்வொரு  நாளும் ஞாபகப்படுத்துகின்ற போது..நீண்டகால நினைவாகிவிடும்... பின்னர் தேவைப்படும்போது ஞாபகப்படுத்துவது இலகு.


3.பரீட்சைக்கு முன்னர் படிப்பவற்றை.. முதல்நாள் இரவு மற்றும் பரீட்சை அன்று அதிகாலை மீள் ஞாபகப்படுத்தல் மிகவும் அவசியம்.


4.படிப்பவற்றை மனனம் செய்வதை தவிர்த்து முடிந்தளவு நடைமுறை விடயங்களுடன் ஒப்பிட்டு நினைவில் கொள்ளல் சிறப்பு.


5.விளங்காத விடயங்களை மனனம் செய்யவே அதிகம் முயற்சிப்பீர். அதன்போது ஓர் ஒழுங்குமுறையில் மனனம் செய்யின் நினைவில் அதிகம் நிற்கும்.(maths formula)


6.நினைவில் கொள்ளுதலை பாதிக்கும் கவனக்கலைப்பான்களை தவிர்க்க வேண்டும்.  படிக்கும்போது தொலைபேசி, தொலைக்காட்சி, குழப்பும் நண்பர்கள் அருகில் இருத்தல் போன்றவற்றை தவிர்த்து தனிமையில் படித்தல் நினைவாற்றலை அதிகரிக்கும்.


7.சிலருக்கு குழுவாக இணைந்து ஒருவருக்கொருவர் மாறி மாறி விளங்கப்படுத்தி படிப்பது அதிகம் நினைவில் நிற்குமெனின் தாராளமாக அம்முறையை பின்பற்றலாம். அதுபோல சிலருக்கு நடந்து படித்தால் தான் அதிகம் நினைவில் நிற்கும் மற்றும் பெரிதாக சத்தம் போட்டு படிப்பது அதிகம் நினைவில் நிற்கும் எனின்..உங்களுக்கு பொருத்தமான முறையை தெரிவு செய்து படித்தல் நன்று.


8.படித்த விடயங்களை யாருடைய துணையுமின்றி, நீங்களே கேள்வி கேட்டு  பதில் சொல்லிப் பழகல்..நினைவில் இருப்பதை உறுதிப்படுத்தும்.


9.பரீட்சைக்கு வரக்கூடிய அனைத்து வினாக்கள் மற்றும் பதில்களை சரியான வடிவத்தில் எழுதி வைத்து அவற்றை படிக்கின்ற போது நினைவில் கொள்ளல் எளிதாகும்.


10.முன்னர் படித்த பாடங்கள் பின்னர் படித்த பாடங்களை குழப்பலாம். எனவே படிக்கின்ற போது தெளிவாக விளங்கிப் படித்தல், திரும்பத் திரும்ப படித்தல், இடைவெளியெடுத்து படித்தல், நினைவில் இருப்பதை உறுதிப்படுத்தி படித்தல் போன்றன முக்கியமாகும்.


இவற்றை விட பொதுவாக நாம் படிப்பவற்றை நினைவில் கொள்ள சத்தான உணவு உட்கொள்ளல், உடல் ஆரோக்கியம், போதுமான தூக்கம், எதிர்கால இலட்சியத்தை மனதில் நினைத்து படித்தல் போன்றன முக்கியமாகும்.



No comments:

Post a Comment