Wednesday, January 10, 2024

நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் பற்றிய முழுமையான விளக்கம்?


நோட்டரி பப்ளிக் வக்கீல் என்று அறியப்படுபவர், நோட்டரிச் செயல்களைச் செய்ய அங்கீகரிக்கப்பட்ட ஒரு சட்ட வல்லுநர் ஆவார். இந்தியாவில், நோட்டரி பப்ளிக் வக்கீல்களின் நியமனம் மற்றும் ஒழுங்குமுறை நோட்டரி சட்டம், 1952 மூலம் நியமிக்கப்படுகிறார்.


ஆவணங்கள் மற்றும் பரிவர்த்தனைகளைச் சரிபார்த்து அங்கீகரிப்பதே நோட்டரி பொது வழக்கறிஞரின் முதன்மைப் பணியாகும். ஆவணங்களைச் சான்றளித்தல், சான்றளித்தல் மற்றும் சாட்சியமளித்தல், உறுதிமொழிகள் அல்லது உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வது மற்றும் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குதல் ஆகியவை நோட்டரிச் செயல்களில் அடங்கும்.


 *நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரின் சான்றொப்பம் எதற்கு தேவை?* 


நாம் நிறைய சந்தர்ப்பங்களில் முக்கியமான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது அதாவது அரசங்கம், கோர்ட் மற்றும் பள்ளி கல்லூரிகள் மேலும் வேலை சார்ந்த இடங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது விண்ணப்பத்தோடு உங்களது ஒரிஜினல் சான்றிதழ்களை அல்லது ஆவணங்களை  நோட்டரி பப்ளிகிடம் காண்பித்து சரி பார்த்து அதன் நகல்களில் நோட்டரி பப்ளிகின் முத்திரையை பெற்று விண்ணப்பத்தோடு நோட்டரி சான்றிட்ட சான்றிதழின் அல்லது ஆவணங்களின் நகலை சமர்ப்பிக்குமாறு கேட்டிருப்பார்கள் இதற்கு என்ன அவசியம் என்று நாம் யோசிப்போம் உண்மையில் நோட்டரி பப்ளிக் நமது வேலையும் அரசின் வேலையும் துரிதப்படுத்துகிறார்.


என்னவென்றால் எல்லா இடங்களிலும் நமது ஒரிஜினல் ஆவணங்களை அல்லது சான்றிதழ்களை சமர்ப்பிப்பது சாத்தியமில்லை. இந்த மாதியான சூல்நிலையில் மோசடி நடைபெறாமல் இருக்க மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பொது அதிகாரி தான் இந்த நோட்டரி பப்ளிக்.உங்களது சான்றுகளை உங்களது ஆவணங்களை உண்மையானதாக்க  அதன் உண்மைத் தன்மையை நிரூபிக்க உங்களது வேலைகளை துரிதப்படுத்த  நோட்டரி பப்ளிகின் சான்றொப்பம் தேவைப்படுகிறது.


 இவர் முக்கியமான ஆவணங்களில் கையொப்பமிட்டு அதை உறுதியான சான்றாக மாற்றுகிறார் மோசடியை தடுக்க அரசுக்கு உதவுகிறார். எனவே ஒரிஜினலுக்கு பதிலாக நகல்களை சமர்ப்பிக்கும் போதும் உண்மையான சான்றுகளை உறுதிபடுத்த நோட்டரி பப்ளிக் தேவை.

No comments:

Post a Comment