Tuesday, January 9, 2024

ஏகாதசியின் மகிமை


தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவரோ அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர்.

அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, ‘முரன்’ பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

இனி 24 ஏகாதசிகளை பார்ப்போம்:

வருடத்தில் 24 ஏகாதசி வரும்.

சித்திரை :வளர்பிறை காமதா ஏகாதசி. தேய்பிறை ஏகாதசி பாப மோசனிகா

.வைகாசி :வளர்பிறை மோகினி ஏகாதசி .தேய்பிறைஏகாதசி வருதினி ஏகாதசி

ஆனி :வளர்பிறை நிர்ஜலஏகாதசி தேய்பிறை ஏகாதசி அபரா ஏகாதசி

.ஆடி :வளர்பிறை விஷ்ணு சயன ஏகாதசி தேய்பிறை ஏகாதசி யோகினி ஏகாதசி.

ஆவணி :வளர்பிறை புத்திரத ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி காமிகா ஏகாதசி.

புரட்டாசி வளர்பிறை ஏகாதசி பரிவர்த்தன ஏகாதசி .புரட்டாசி தேய்பிறை ஏகாதசி அஜ ஏகாதசி.

ஐப்பசி :வளர்பிறை ஏகாதசி
பாபாங்குசாஏகாதசி . ஐப்பசி தேய்பிறை ஏகாதசி இந்திரா ஏகாதசி.

கார்த்திகை : வளர்பிறை ஏகாதசி பிரபோதின ஏகாதசி கார்த்திகை தேய்பிறை ஏகாதசிரமா ஏகாதசி

மார்கழி வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி. மார்கழிதேய்பிறை ஏகாதசி உற்பத்தி ஏகாதசி.

தை : வளர்பிறை ஏகாதசி பீஷ்ம, புத்திர ஏகாதசி தைதேய்பிறை ஏகாதசி சபலா ஏகாதசி

மாசி :வளர்பிறை ஏகாதசி ஜெய ஏகாதசி மாசிதேய்பிறை ஏகாதசி ஷட்திலா ஏகாதசி

பங்குனி :வளர்பிறை ஏகாதசி ஆமலகி ஏகாதசி.பங்குனி
தேய்பிறை ஏகாதசிவிஜயா ஏகாதசி.
25 வது ஏகாதசி வந்தால் அது கமல ஏகாதசி என பெயர். ஒ்வொரு ஏகாதசிக்கும் தனி தனி பலன் உண்டு.

விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது ‘ஏகாதசி விரதம்’. இந்த விரதத்தை கடைப்பிடிப்பது ‘அஸ்வமேத யாகம்’ செய்த பலனைக் கொடுக்கும் என்கிறது புராணங்கள்.

‘காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை; தாய்க்கு சமமான தெய்வம் இல்லை; கங்கைக்கு ஈடான தீர்த்தம் இல்லை; ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை’ என்று இந்த விரதத்தின் மகிமைப் பற்றி அக்னி புராணம் எடுத்துரைக்கிறது.

இந்த விரதத்தின் சிறப்பு பற்றி சிவபெருமானே, பார்வதி தேவியிடம் எடுத்துக் கூறியுள்ளார் என்பது புராணங்கள் கூறும் தகவல்.

ஏகாதசி நாளில் விரதம் இருந்து இறைவனின் நாமங்களை பாடியும், விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் செய்தால், எல்லா கஷ்டங்களும் விலகி சந்தோஷம் , அமைதி, செல்வம் உண்டாகும்.

பச்சைமா மலைபோல் மேனி
பவள வாய்க் கமலச் செங்கண்
அச்சுதா! அமரரேறே! ஆயர் தம்
கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே … என பாடி

நாராயணன் நாமங்கள் சொல்லி வாழ்வில் எல்லா நலன்களும் பெறுவோமாக.

No comments:

Post a Comment