Tuesday, January 9, 2024

கற்பூரவல்லி-மூலிகை மருந்து



✔ கற்பூரவல்லி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளர்கிறது. வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் கொண்ட இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும்.


வளரும் இடம் :


✔ வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் மணி பிளானட் போல், கற்பூரவல்லியும் தொட்டிகளில் வளர்க்கப்படும் ஒரு கொடிவகை செடியாகும். இது பெரும்பாலும் வீட்டில் வளர்க்கப்படும்.


*சிறப்புகள் :*


✔ கற்பூரவல்லி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும்.


✔ இதன் இலை தடித்து காணப்படும். இதன் இலைகள் சொரசொரப்பாக இருக்கும். இதன் இலைகளை ஒடித்தாலோ அல்லது கிள்ளி எடுத்தாலோ நல்ல தைல வாசனை வரும். இது 2 அடிவரை வளரக்கூடியது. வேர்கள் அதிக ஆழம் செல்லாமல் கொத்து வேராக இருக்கும். இலையே மருத்துவக் குணம் உடையது. தமிழகமெங்கும் தானாகவே வளர்கின்றது.


✔ ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ் போன்றவை கற்பூரவள்ளியின் வேறு பெயர்களாகும்.


*மருத்துவ பயன்கள் :*


✔ சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். கற்பூர வல்லியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும்.


✔ ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையில் இந்த இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.


✔ மூக்கில் நீர் வடிந்து அது சில நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும். இவர்கள்  இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.


✔ காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவல்லி சிறந்த மருந்தாகும். கற்பூரவல்லி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.


✔ கற்பூரவல்லி ஒரு கிருமி நாசினியாகும். சித்தர்கள்களுக்கு இந்த வள்ளி எனும் பெயர் மேல் ஒரு ஆசை உண்டு. அமிர்த வள்ளி, கற்பூரவல்லி என பல மூலிகைக்கு பெயர் வைத்துள்ளனர். வீட்டைச் சுற்றி கற்பூரவல்லியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம்.


✔ கற்பூரவல்லியிலைச் சாறு எடுத்து சிறிது கற்கண்டை பொடி செய்து கலந்து குடித்து வர தொண்டைக் கமறல் நீங்கும். இன்னும் உருளைகிழங்கு, வாழைக்காய் பஜ்ஜி செய்து சாப்பிட்டு வாயுத் தொல்லையால் அவஸ்தை படுவதை விட, கற்பூரவல்லி இலையை உபயோகித்து சுவையான பஜ்ஜி செய்யலாம்.

No comments:

Post a Comment