Wednesday, January 31, 2024

தினம் ஒரு மூலிகை-வலம்புரி

 


*வலம்புரி*.   தமிழக மலைக்காடுகளில் வளரும் சிறு மர வகை இதன் காய் திருகாணி போல் வரி உள்ளதாய் இருக்கும் வரிகள் வலம்சுழியாகவோ இடம்சுழியாகவோ அமைந்திருக்கும் காய் வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவ குணம் உடையவை துவர்ப்பியாகச்செயற்படல் உள்ளழல் ஆற்றுதல் உடல் வெப்பத்தையும் நாடி நடையையும் அதிகரித்தல் ஆகிய மருத்துவ குணம் உடையது காயை ஒன்றிரண்டாய் இடித்து நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி வடிகட்டி இரண்டு (அ) மூன்று துளிகள் காதில் விட்டு வர காதில் சீழ் வடிதல் காது வலி ஆகியவை குணமாகும் 5 கிராம் வேர் பட்டையை நானூறு மில்லி நீரில் இட்டு 100 மில்லியாக காய்ச்சி வடிகட்டியதை இரு வேலையாக நாளும் கொடுத்து வர சிறுநீரில் இனிப்பு கழிச்சல் சீத கழிச்சல் ஆகியவை தீரும் வேர் பட்டையை உலர்த்தி பொடித்து அரை கிராம் அளவாக காலை மாலை சர்க்கரையில் கலந்து சாப்பிட்டு வர சிறுநீர் சர்க்கரை கழிச்சல் சீத கழிச்சல் ஆகியவை குணமாகும் நன்றி.

No comments:

Post a Comment