Sunday, January 21, 2024

மனம் சஞ்சலப்படுகிறதா, அதிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்வதற்க்கான தீர்வுகள்.

மனம் சஞ்சலப்படுவதற்க்கான முக்கிய காரணமே மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களே. இது நமது வாழ்வில் நடந்து முடிந்த எதிர்மறையான விசயங்களில் இருந்தும், தோல்வி மற்றும் அவமானங்களில் இருந்தும் இவ்வகையான எண்ணங்கள் எழுகின்றன. இவை நம்மை நிகழ்காலத்தில் வாழ அனுமதிப்பதே இல்லை. 


எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றும்போது அதனை ஊக்குவிப்பதாலேயே அது செயல்பட தொடங்குகிறது. எதிர்மறை எண்ணங்களை கவனிக்கும்போது அதனை சார்ந்த எதிர்மறை உணர்வுகளுக்கும் தூண்டப்படுகிறது இதன் விளைவு தீவிரமானா மனஅழுத்தம் ஏற்படும். 


மனதை நிறுத்த முயற்சி மேற்கொள்ளாதீர்கள். சலனம் அதன் இயல்புதான். இது ஒரு மரம் இலை விடுவதை நிறுத்துவதை போன்றது இந்த முயற்சி. உங்களது இயல்புக்கு மாறான செயல்.


மனம் தனது வேலை செய்ய அனுமதியுங்கள். அதனை நிறுத்துவதற்கு முயலாதீர்கள். அதனுடைய செயல்களை கவனியுங்கள். விழிப்புடன் இருங்கள்.


மற்றவர்களது விமர்சனங்களை கண்டு ஒரு போதும் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதை காரணமாக வைத்தே மனம் உங்களிடம் விளையாட ஆரம்பித்துவிடும். விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.


மனம் எப்போதும் நிகழ்காலத்தில் இருப்பதில்லை. அது இறந்த காலத்தில் இருக்கும், அல்லது எதிர்காலத்தில் இருக்கும். அதனால் மனதில் தோன்றும் எண்ணங்களை சாட்சிபாவனையாக இருந்து பார்க்க மட்டும் கற்றுக்கொள்ளுங்கள். 


மனதை அமைதிப்படுத்த தினமும் தியானப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உங்களது மனதை நீங்கள் செய்யும் செயல்களில் ஈடுபடுத்துவதின் மூலம் தேவையற்ற எண்ணங்களில் இருந்து விடுபட முடியும். 


மற்றவர்களுடைய எண்ணங்களுக்கோ, உணர்வுகளுக்கோ நாம் பதிலலிக்க தேவையில்லை. இது மேலும் உங்களது மனதை அதிகமாக சஞ்சலப்படுத்தும். மனதை சரியாக நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நிகழ்காலத்தில் கவனம் செலுத்த கற்றுக்கொள்ளுங்கள். உங்களது மனம் எப்போதும் புத்துணர்வுடன் இருப்பதை உணர்வீர்கள்.

    


 🙏நன்றி🙏

      வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment