Tuesday, January 9, 2024

ஊசியின் பின் நூல்




ஒரு ஊரில் வயதான சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். சிவனின் பரிபூரண அருள் அவருக்கு இருந்தும் கூட எந்த வித பெருமிதமும் இன்றி மிக எளிமையாக வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் தன்னுடைய குடிசையின் அமர்ந்து கொண்டு கிழிந்த தன் துணியை தைத்துக்கொண்டிருந்தா

இது ஒருபுறம் இருக்க, சிவனும் பார்வதி தேவியும் உலக மக்களின் நிலை அறிய வான் வெளியில் வளம் வந்துகொண்டிருந்தனர்.

அப்போது பார்வதி தேவி அந்த வயதான சிவ பக்தரை கண்டார். உடனே சிவனிடம் அவரை காண்பித்து, ஐயனே இவருக்கு நாம் ஏதாவது வரம் வழங்க வேண்டும் என்றார்.

அவரை பார்த்த சிவன், அவன் அந்த நிலையை எல்லாம் கடந்து விட்டான் தேவி. நாம் நமது பயணத்தை தொடரலாம் என்றார்.

ஆனால் பார்வதி தேவி அவரை விடவில்லை.

ஒருவழியாக சிவனை அழைத்துக்கொண்டு அந்த பக்தனை காண பார்வதி தேவி வந்தார்.

இவர்களை கண்டதும் அந்த வயதான பக்தர் மனம் மகிழ்ந்தார். தன்னுடைய குடிலில் அமரவைத்து தாகத்திற்கு மோர் கொடுத்தார். பின் தான்
செய்துகொண்டிருந்த உடை தைக்கும் பணியை அவர் மீண்டும் தொடங்கினார்.

பார்வதி தேவி மீண்டும் சிவனிடம் சைகை செய்ய உடனே சிவன், பக்தா நாங்கள் இருவரும் யாருக்கேனும் காட்சி அளித்தால்
அவருக்கு வரங்களை தருவது எங்கள் வழக்கம். ஆகையால் உனக்கு தேவையான வரத்தை நீ கேள் நாங்கள் தந்து விட்டு செல்கிறோம் என்றார்.

இதை கேட்டு புன்னகைத்த அந்த முதியவர், நீங்கள் இப்படி கேட்டதே மகிழ்ச்சி ஆனால் எனக்கு எந்த வரமும் வேண்டாம் நீங்கள் உங்கள்
பயணத்தை தொடருங்கள் என்றார்

பார்வதி தேவி விடுவதாக இல்லை. நீங்கள் ஏதாவது வரம் கேட்கத்தான் வேண்டும் என்றார். சரி நீங்கள் இவ்வளவு வற்புறுத்துவதால் நான் ஒரு வரம்
கேட்கிறேன் என்ற அந்த முதியவர், நான் இந்த உடையை தைக்கும் சமயத்தில் எப்போதும் ஊசியின் பின் நூல் வர வேண்டும் என்றார்.

இதை கேட்டு திகைத்த சிவனும் பார்வதி தேவியும், இப்போதே அது அப்படி தானே நடக்கிறது என்று கூறினார்கள்.

அதற்கு அந்த முனிவர், ஊசியில் நூல் கோர்த்து தைக்கும்போது ஊசிக்கு பின் நூல் செல்வது இயல்பான விடயமே அதே போல தான் நான்
செய்யும் செயல்கள் மூலம் எனக்கு வர வேண்டிய பலன்கள் தானாக வரும். நான் நல்லது செய்தால் நல்லது வரும் கெட்டது செய்தால்
கெட்டது வரும். நான் நல்லதை மட்டுமே செய்கிறேன் என்று நம்புகிறேன்.

இதற்கிடையில் எனக்கு எதற்கு இந்த வரம் என்றார்.

இந்த விளக்கத்தை கேட்ட சிவனும் பார்வதி தேவியும் புன்முறுவல் புரிந்தவாறு அங்கிருந்து சென்றனர்.


கருத்து :


நம் வாழ்க்கையில்
நாம் நல்லதையே செய்வோம்,
நல்லதையே நினைப்போம்.
எல்லாம் நல்லதே நடக்கும்.

No comments:

Post a Comment