Wednesday, January 10, 2024

நோட்டரி பப்ளிகின் உண்மை சான்று என்றால் என்ன?


ஒரு ஒரிஜினல் சான்றிதழின் நகலில் உண்மை நகல் என்று சரிபார்த்து நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் கையெழுத்திட்டுக் கொடுத்தால் அது சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் தகுதியைப் பெற்றுவிடுகிறது இதையே உண்மை சான்று என்று கூறுகிறோம்.


 *சாட்சி உறுதி நோட்டரி சான்று என்றால் என்ன?* 


இருவருக்கு இடையே ஓப்பந்தம் தயாராகும் போது ஒரு முத்திரைத்தாளில் பிரமாணமாக எழுதி கொடுக்க கையெழுத்திட்டு சமர்ப்பிப்பார்கள். சாட்சிகள் முன்னிலையில் அப்படிக் கையெழுத்திட்டு சமர்ப்பித்தாலும் கூட ஒரு நோட்டரி பப்ளிக்கின் முன்னிலையில் 1வது நபரும் 2வது நபரும் சரியான மனநிலையோடு பிரமாணத்தில் கையெழுத்திட்டார் என்று சான்றொப்பம் இடவேண்டும். அப்போதுதான் அந்தப் பிரமாணத்துக்கு சட்ட பூர்வமான அங்கீகாரம் கிடைக்கிறது. 


 *நோட்டரி பப்ளிக்கின் சான்று அரசிற்கும் சட்டத்திற்கும் எப்படி பயன்படுகிறது?* 


ஒரு நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் உண்மையான ஆவணங்களை சரி பார்த்து உறுதியளிக்கும் போது ஆவணங்கள் போலியாக தாக்கல் செய்யப்படுவது தடுக்கப்படுகிறது.இதனால் ஆவணங்களை எளிதில் உண்மையா போலியா கண்டறிந்து தடுக்க முடிகிறது. மோசடி ஆவணங்களை தடுக்கவே மாநில அரசாங்கம் பொது அதிகாரியாக நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரை நியமித்துள்ளது.


நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் முக்கியமான ஆவணங்களில் கையொப்பமிடும் போது அந்த ஆவணங்களை நேரில் கண்டு அதை சரிபார்த்து உண்மை நகல் என ஒரு நகலுக்கு உண்மை சான்றை வழங்கவேண்டும். மேலும் பத்திரங்கள் ஒப்பந்தங்களில் கையொப்பமிடுபவர்கள் நோட்டரி பப்ளிக்கின் முன்பாக தான் கையொப்பம் இட வேண்டும் அந்த சமயத்தில் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் கையெழுத்து போடும் நபரின் அடையாளம் சான்றுகளை சரிபார்க்க வேண்டும். பத்திரத்திலோ ஆவணங்களிலோ கையொப்பமிடும் நபர் முழுமையான விருப்பத்தோடு தான் கையெழுத்து போட்டாரா என்று தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஆவணம் அல்லது பரிவர்த்தனையின் உள்ளடக்கங்கள் பற்றிய சம்மந்தப்பட்ட நபரின் அல்லது ஆவணங்கள் எவை அதை பற்றிய விழிப்புணர்வு அந்த நபருக்கு இருக்கிறதா போன்றவற்றை நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் சரிபார்க்கிறார்கள். 


அதாவது அந்த நபர் எதில் கையெழுத்திட போகிறார் அதை பற்றிய சரியான விழிப்புணர்வு அந்த நபருக்கு கையெழுத்திடும் முன் இருக்கிறதா என கவனித்து அதை பற்றி சொல்லி கொடுத்து அவர் அதற்கு பின் சரியான மன நிலையில் இருக்கிறார் என்று தெரிந்த பின் அவரிடம் கையெழுத்து வாங்குவார் இதனால் அந்த ஆவணத்தின் உண்மை தன்மை மேம்படும்.


 *நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் உறுதிப்படுத்தும் ஆவணங்கள் யாவை?* 


 *1. Estates documents (எஸ்டேட்ஸ்)* 


 *2. Deeds documents (பத்திரங்கள்)* 


 *3. Powers of attorney (பவர் பத்திரங்கள்)* 


 *4. Affidavits (வாக்குமூலங்கள்)* 


 *5. Licenses (உரிமங்கள்)* 


 *6. Contracts (ஒப்பந்தங்கள்)* 


 *7. Loan documents (கடன் ஆவணங்கள்)* 


 *8. Trusts* (டிரஸ்ட் ஆவணங்கள்)

 உறுதிமொழிகள மற்றும் உறுதிமொழிகளை நிர்வகித்தல் நோட்டரி பப்ளிக் பல நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் சட்ட சேவையை வழங்குகிறார்கள்.

No comments:

Post a Comment