Friday, January 26, 2024

மருவு-தினம் ஒரு மூலிகை

 

 *மருவு* மனம் மிக்க சிறு இலைகளை உடைய மலைப்பகுதிகளில் பயிரிடப்படும் சிறு செடி பூக்கடைகளில் கிடைக்கும் இதன் இலையே மருத்துவ பயன் உடையது உடல் பலம் மிகுதல் உடல் வெப்பம் மிகுத்தல் மாதவிடாய் தூண்டுதல் இசிவு அகற்றுதல் பசி மிகுதல் தாய்ப்பால் மிகுத்தல் ஆகிய மருத்துவ குணங்களை உடையது 40 கிராம் இலையை 400 மில்லி கொதி நீரில் போட்டு மூடி வைத்து இரண்டு மணி கழித்து வடிகட்டி 15ல் இருந்து 30 மில்லி அளவாக நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர வயிற்று வலி குன்மம் உடல் வலி ஆகியவை தீரும் இலையை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்க கணு வீக்கம் குறையும் இலையை அரைத்து நல்லெண்ணையில் கலந்து வெயிற் புடமிட்டு வடிகட்டி பூசி வர சொறி சிரங்கு புண் ஆகியவை தீரும் நன்றி.

No comments:

Post a Comment