Tuesday, January 9, 2024

செம்முள்ளி-தினம் ஒரு மூலிகை

 


*செம்முள்ளி*  முள்ளுள்ள சிறு செடி இனம் வெள்ளை மஞ்சள் நீளம் ஆகிய வண்ணங்களில் பூக்கும் இனங்கள் உண்டு இதில் மஞ்சள் நிற பூக்களை உடைய செம்முள்ளி தமிழகம் எங்கும் தரிசு நிலங்களில் தானே வளர்கிறது இதன் இலை வேர் ஆகியவை மருத்துவ குணம் உடையது சளி அகற்றுதல் சிறுநீர் பெருக்குதல் அழுகலகற்றுதல் ஆகிய குணம் உடையது இளைச்சாறு 30 மில்லி அளவாக சிறிது தேன் கலந்து காலை மாலை கொடுத்து வர குழந்தைகளுக்கு காணும் சளி மூக்கடைப்பு காய்ச்சல் ஆகியவை குணமாகும் இலைச்சாற்றை பனி காலத்தில் தோன்றும் பித்த வெடிப்புக்கு தடவி வர அவை குணமாகும் செம்முள்ளி கண்டங்கத்தரி தூது வேளை ஆடாதோடை சங்கு ஆகியவற்றின் இலை வகைக்கு ஒரு பிடி இடித்து பிட்டவியலாய் அவித்து சாறு பிழிந்து அதில் சுக்கு மிளகு திப்பிலி இந்துப்பு வகைக்கு ஒரு கிராம் இளவறுப்பாய் வறுத்து பொடித்து கலந்து தேன் சேர்த்து வயதுக்கு ஏற்ப ஐந்து அல்லது பத்து மில்லி அளவாக காலை மாலை கொடுத்து வர குழந்தைகளின் இருமல் தீரும் நன்றி.

No comments:

Post a Comment