Tuesday, January 9, 2024

பித்ரு தர்ப்பணம்


” பித்ரு தர்ப்பணம்”

அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்து செய்யும் வழிபாடு தர்ப்பணம் ஆகும்.

முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு தண்ணீர், சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடையின்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. இதனால், பித்ருதோஷம்தான் ஏற்படும்.

பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.

ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

• அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர்களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.

அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.

அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஷன்னவதி தர்பணம்: ஒரு ஆண்டில்
96 தர்பணம் செய்வதே ஷன்னவதி தர்பணம் ஆகும்.

ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

• இந்த 96 நாட்களை விட மிக மிக உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டி நாள்தான்.

இறைவனின் ரூபமான தேவதைகளை விட பித்ருக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே, முதலில் உங்கள் மறைந்த முன்னோர் வழிபாட்டை பிரதானமாக நடத்துங்கள்.

தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்பப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். தர்ப்பைக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அது கேதுபகவான் மூலம் பலன்களை பெற்றுத்தரும். குறிப்பாக பெரியவர்களின் தொடர்பு கிடைக்கும்.

தர்பணம் செய்ய வேண்டியவர்கள்:

………………………………………………….
பித்ரு வர்கம் : பிதா – தகப்பனார்.
பிதாமஹர் : தாத்தா (தகப்பனார் அப்பா)
பிரபிதாமஹர்: தாத்தக்கு தகப்பனார்

மாதா. : தாயார்
பிதாமஹி. : பாட்டி( தந்தை வழி)
பிரபிதாமஹி: :கொள்ளு பாட்டி…
……………………………………………………
மாதா மஹ வர்கம்:

மதாமஹர். : தாயின் தகப்பனார்
மாது:பிதாமகர். : தாயின் தகப்பானர்க்கு தகப்பனார்.
மாது:ப்பிரபிதாமஹர்: தாயின் தாத்தாக்கு தகப்பனார்.

மாதா மஹி. : பாட்டி (தாய் வழி)
மாது:பிதாமஹி: தாயின் தாத்தாவின் மனைவி
மாது:பிரபிதாமஹி: தாயின்
பாட்டனார்க்கு பாட்டி.
……………………………………………………….

சிரார்த்தம், தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாகப் பிறப்பான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

பித்ரு கர்மாக்கள் சரியாக செய்யவில்லை எனில் குடும்பத்தில் நிம்மதியின்மை, திருமணத் தடை, , எதிலும் தோல்வி என ஏற்படும்.

பித்ருக்களின் கர்மாக்களை ஸ்ரத்தயுடன் செய்து வந்தால் வாழ்வில் அவர்களது பரிபூரண ஆசிர்வாதம் கிடைத்து வாழ்க்கை முன்னேற்றமடையும்.

லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து ………
……. ஸ்ரீ

No comments:

Post a Comment