சாதுரியம், சாணக்கியத்தனம், ராஜதந்திரம் இவை எல்லாம் வேறு ஒன்றுமில்லை.* *நம்பிக்கை துரோகம் என்பதன் நாகரிகப்பெயர்கள் தான் அவைகள்.*
பிறர் கண் கலங்க காரணமாக வாழ்வதை விட அவர் கண் கலங்கினால் , அவர் கண்ணீர் துடைக்க வாழ்வதே சிறப்பு.
எல்லா கல்லையுமா கருவறைக்குள் ஏற்ற முடியும், அதேபோல தான் வாழ்கையில் ஜெயுச்சவங்களும்.
*சில கற்கள் செதுக்க முயற்சிக்கும் போதே வலி தாங்க முடியாமல் தன் தகுதியினை குறைத்து கொள்கின்றன.
எதற்கும் எப்போதும் தயாராக இருங்கள். சில நேரங்களில் நீங்கள் யூகிக்க முடியாதப் பல விஷயங்கள். உங்களுக்கு எதிராய்த் திரும்பும்.
கடந்து போக கற்று கொள்ளுங்கள்.மாயமான இவ்வுலகில் எல்லா காயங்களுக்கும் நியாயங்கள் தேடிக்கொண்டிருந்தால் நிம்மதி இருக்காது.
பிரச்சனைகளைத் தீர்க்க பழகிக் கொள்ளுங்கள். கவலைகளை மறக்கப் பழகிக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியாக வாழ்வதற்கே வாழ்க்கை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
காற்று அடிக்கும் திசையைப் பொறுத்து தான், மழையின் பயணம் இருக்கிறது. கலங்கரை விளக்கை பார்த்து தான், கப்பலின் கரையும் இருக்கும்.
உழைப்பவரின் உயர்வை பொறுத்து தான், மேலாண்மையின் திறன் இருக்கும். வரப்பு உயர்ந்தால் தான் நீர் உயரும். நீர் உயர்ந்தால் தான் நெல் உயரும். உழைப்புக்கு உயர்வு கொடுத்தால் வெற்றி நிச்சயம்.

No comments:
Post a Comment